கறுப்புக் காமெடி நாடகம்

கோணல் பக்கங்கள் என்ற தலைப்பில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஆனந்த விகடன் இணைய தளத்தில் நான் எழுதி வந்த பத்தி பெரும் வரவேற்பைப் பெற்றது.  அதன் பிறகு சாருஆன்லைனில் கோணல் பக்கங்களைத் தொடர்ந்தேன்.  அதன் மூன்று தொகுதிகளின் மறுபதிப்பு இப்போது கிழக்கு பதிப்பகத்தின் மூலம் வெளிவருகிறது. அதோடு, ஸீரோ டிகிரி கிடைப்பதில்லை என்ற புகார் அவ்வப்போது இருந்து வந்தது.  அந்த நூலும் இப்போது மறுபதிப்பாக கிழக்கு பதிப்பகத்திலிருந்து வெளிவந்துள்ளது. இப்போதைய சென்னை புத்தகச் சந்தையில் இந்த நான்கு … Read more

மதுவும் தனிமையும்

வாசகர் வட்டம் ரொம்ப டல் அடிக்கிறது.  நானே போஸ்ட் போட்டாலும் எதிர்வினைகள் கம்மியாக உள்ளன.  ஏன் என்று தெரியவில்லை.  சரி, விஷயத்துக்கு வருகிறேன்.  நாளையும் நாளை மறுநாளும் (சனி, ஞாயிறு) வீட்டில் தனியாகவே இருப்பேன்.  இப்படித் தனியாக இருந்து வெகு காலம் ஆகி விட்டது.  அவந்திகாவுக்கு அப்படி இல்லை.  எழுத்தாளனைத் திருமணம் செய்து கொண்டால் தனிமைக்குப் பழகாமல் இருக்க முடியுமா?  முன்பெல்லாம் அடிக்கடி வெளியே போய் விடுவேன்.  இப்போது அது கம்மியாகி இருந்தாலும் நாள் கணக்கில் வெளியூர்களுக்குச் … Read more

yo…yo…honey singh…

இந்தியாவிலேயே உங்களுக்குப் பிடித்த ஒரே ஒரு பாடகரின் பெயரைச் சொல்லுங்கள் என்று கேட்டால் நான் சொல்லும் பெயர்: Honey Singh. http://www.youtube.com/watch?v=PqFMFVcCZgI

அய்யாசாமியும் ஸல்மான் ரஷ்டியும்…

ஒரு இசையமைப்பாளர் என்னைப் பற்றி ஒரு பிரபல பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளது தொடர்பாக எனக்குப் பல கடிதங்கள் வந்துள்ளன.  அந்த இசையமைப்பாளர் பற்றி எதுவும் எழுதக் கூடாது என்று முடிவு செய்து கடந்த சில ஆண்டுகளாகவே அதைக் கடைப்பிடித்தும் வருகிறேன்.  அதனால் எனக்கு வந்துள்ள கடிதங்களுக்கு  நான் பதில் எழுதவில்லை.  என்னுடைய விலை மதிக்க முடியாத நேரம் இது போன்ற வெட்டிப் பேச்சுக்களில் கழிவதை நான் விரும்பவில்லை.  அதேபோல் ஒரு சாமியாரைப் பற்றியும் நான் வாயே திறக்காமல் இருப்பதை … Read more

படித்ததில் பிடித்தது

சென்ற ஆண்டு வந்ததை இப்போதுதான் என் கவனத்துக்குக் கொண்டு வந்தார்கள்.  இருந்தாலும் படிக்க சுவாரசியமாக இருந்தது. வாசகர் கேள்வி: சாருநிவேதிதா, தனது ‘கனவுகளின் நடனம்’ புத்தகத்தில் தங்களை பயங்கரமாக விமர்சனம் செய்து உள்ளாரே… படித்தீர்களா ? இளையராஜா பதில்: “ நான் எப்போதாவது காரில் வெளியூருக்குப் போகும்போது வழியில் மெயின் ரோடுகளில் உள்ள கடைகளில் பெயர்ப் பலகைகளைப் பார்ப்பேன். அதில் என் உருவத்தைத் வரைந்து “ராஜா ஆடியோ சென்டர்” என்றோ “இசைஞானி எலக்ட்ரிகல்ஸ்” என்றோ அல்லது “இளையராஜா … Read more

Schindler’s list

shindler’s list படத்தைப் பற்றி வரும் ஞாயிறு காலை பத்தரை மணிக்கு win tv இல் பேசுகிறேன்.  ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் உலகின் மிக முக்கியமான நூறு படங்களில் ஒன்று.  என்னால் மறக்கவே முடியாத படம்.