யாருக்காக எழுதுகிறேன்?

ஒரு கலந்துரையாடலில் கலந்து கொண்டு விட்டு வெளியே வந்தேன்.  கலந்துரையாடல் நடந்த போது அந்தக் கூட்டத்தில் நான் ஒரு அந்நியனாகவே உணர்ந்தேன்.  அங்கிருந்த எல்லோருமே எழுத்தாளர்கள்.  ஆனால் அவர்கள் பேசியவை எல்லாமே ஏதோ பாரதிராஜாவின் படத்தில் வரும் பாடல் காட்சியில் வரும் ஹீரோவைப் போன்ற மன உணர்ச்சியோடு தங்கள் ஊரைப் பற்றியும் உறவுகள் பற்றியும் ரொமாண்டிக்காக ஏதேதோ பேசிக் கொண்டிருந்தனர்.  அவர்கள் சொன்ன ஊர்களெல்லாம் வெறும் குப்பைக் காடுகள்.  அந்த ஊர்களின் பஸ் ஸ்டாண்டில் ஒரு நிமிடம் … Read more

டிஸம்பர் 18

டிஸம்பர் 18 அன்று என்னுடைய பிறந்த நாளை வாசக நண்பர்களுடன் கொண்டாடுவதற்காக மஹாபலிபுரத்தில் கூடினோம். பிரியமுடன் துரோகி (என் தளபதி; வீட்டிலிருந்து கோழி வறுவல் கொண்டு வந்திருந்தார்) செல்வகுமார் & கருப்பசாமி (ஏகப்பட்ட பண்டங்களைக் கொண்டு வந்திருந்தனர்.  வெங்காய வடாம் பிரமாதமாக இருந்தது.  தம்பி உடையான்; படைக்கஞ்சான் என்ற பழமொழிக்கேற்ப என் பக்கத்தில் நிற்பவர்கள்) அராத்து (இவர் பற்றி எழுதினால் பெண்களிடமிருந்து ‘மாத்து’ விழும் என்பதால் வேண்டாம்) முகிலன் (திருச்சி) பிறகு சொல்கிறேன்.  செம மேட்டர் உள்ளது. … Read more

அராத்து : அத்தனைக்கும் ஆசைப்படு!

நீங்கள் ஏன் ட்விட்டரில் நுழைந்து ட்வீட்டுகளைப் போடக் கூடாது என்று என்னிடம் அடிக்கடி கேட்டுக் கொண்டிருப்பார் அராத்து.  எனக்கு அந்த ஆசை இல்லை என்பேன்.  ஏனென்றால், என் நாவலில் வரப் போகும் வாக்கியங்களை எடுத்து நான் ட்விட்டருக்கு தானமாக அளிக்கக் கூடாது.    இந்த நிலையில் அராத்து ட்விட்டரில் கலக்கிக் கொண்டிருக்கிறார்.  அவருடைய ட்வீட்டுகளையெல்லாம் ஏன் புத்தகமாகத் தொகுத்துப் போடக் கூடாது என்று அவரிடம் நான் அடிக்கடி கேட்டுக் கொண்டிருப்பேன்.  அதன்படி இப்போது அராத்துவின் ட்வீட்டுகள் புத்தகமாக … Read more

சிலே

மார்ச் 10 இலிருந்து 17 வரை Valparaiso நகரில் இருப்பேன்.  பாப்லோ நெரூதாவின் ஊர்.  ஸந்த்தியாகோவும் பயணத் திட்டத்தில் உண்டு.  யாரேனும் நண்பர்கள் சிலேயில் இருந்தால் என்னைத் தொடர்பு கொள்ளவும்.  அல்லது, உங்கள் நண்பர்கள் இருந்தாலும் அறிமுகப்படுத்தலாம்.   மலேஷிய நண்பர் முஸ்தஃபாவுடன் தான் செல்வதால் நல்ல வசதியான ஓட்டலில்தான் தங்குவேன்.  இருந்தாலும் சிலேவில் இருப்பவர்கள் தெரிந்தால் வால்பராய்ஸோவிலிருந்து ஃபால்க்லேண்ட் தீவுக்கு எப்படிச் செல்லலாம் என்பது போன்ற ஓரிரு விபரங்களைக் கேட்டுக் கொள்ளலாம். இன்னொரு விஷயம்.  கோணல் பக்கங்களை … Read more

நரேந்திர மோடி

இதை நான் நீண்ட நாட்களாக எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இதைப் படிக்கும் உங்களுக்கு சிறிது அதிர்ச்சியாகக் கூட இருக்கலாம்.  ஆனால் என்னைப் பொறுத்தவரை, இன்று இந்தியாவின் மிகப் பெரிய பிரச்சினை ஊழல்தான்.  மற்ற நாடுகளை ஒப்பிடும் போது இந்தியா மத்திய காலத்தில் ஒரு கொடுங்கோல் மன்னனின் ஆட்சியில் இருப்பது போலவே இருக்கிறது.  சரியான சாலைகள் இல்லை; தண்ணீர் இல்லை; மின்சாரம் இல்லை; கல்வி இல்லை; மருத்துவம் இல்லை.  அரசியல்வாதிகள் கோடிக் கணக்கில் ஊழல் செய்வதால் … Read more