மேடையில் அவர் கடவுள்

என்னுடைய கட்டுரை நூல்களில் நான் எழுதியுள்ள விஷயங்களை வைத்து நீங்கள் ஆராய்ச்சி செய்து கொண்டு போனால் உங்களுக்கு ஒரு ஆயுள் போதாது.  மேடையில் அவர் கடவுள் என்று உதய் ஷங்கரைப் பற்றி எழுதியிருக்கிறேன்.  அந்தக் கட்டுரையைப் படிப்பதோடு விட்டு விடாதீர்கள்.  உதய் ஷங்கர் இயக்கி நடித்த கல்பனா என்ற படத்தைத் தேடிப் பாருங்கள்.  அப்போது நான் எழுதியிருப்பது புரியும்.  கீழே ஒரு வாசகர் கடிதம்: அன்புள்ள சாரு… இன்று விடியற் காலை 5.30 இருக்கும் சற்று மன … Read more

உண்ணாவிரதம்

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மெரீனா பீச்சில் இலங்கைத் தமிழர்களுக்காக இருந்த இரண்டு மணி நேர உண்ணாவிரதப் போராட்டத்தை நாம் அறிவோம்.  ஆனால் நிஜமாகவே தன் உயிரையும் மதிக்காமல் நாள் கணக்கில் உண்ணாவிரதம் இருக்கிறார் ஒருவர். பெயர் சசி பெருமாள்.  அவர் கோருவது பூரண மது விலக்கு.  உண்ணாவிரதம் எவ்வளவு கேலிக் கூத்தாகி விட்டது என்பதற்கு இது ஒரு உதாரணம்.  ஒருவர் தற்கொலை செய்து கொள்வது சட்டப்படி குற்றம் என்றால் சசி பெருஉண்ணாவிரதப் போராட்டமும் தற்கொலை முயற்சிதான்; சட்டப்படி … Read more

தமிழ் எழுத்தாளன்

இதை நான் மிகுந்த தயக்கத்துடனும் எழுதலாமா எழுதாமல் விட்டு விடலாமா என்ற குழப்பத்துடனும் மன உளைச்சலுடனும் தான் எழுதுகிறேன்.  ஆனாலும் இதை எழுதித் தான் ஆக வேண்டும் என்று என் மனம் சொல்லுகிறது.  நம் எல்லோருடைய மனசாட்சி என்ன சொல்லுகிறதோ அதுதான் சரியாக இருக்கும் என்பதால் இதை எழுதத் துணிந்து விட்டேன்.  இதை எழுதுவதால் பாதிக்கப்படப் போவது நான் தான்.  நான் மட்டும்தான்.  ஆனாலும் யாரேனும் ஒருவர் பூனைக்கு மணி கட்டித்தானே ஆக வேண்டும்?  எனவே எப்போதும் … Read more

தனிமை

(1) டிஸம்பரிலிருந்துராப்பகலாகசெய்துவந்தவேலைநேற்றுஇரவுமுடிந்தது. yes… தேகம் Corpus-ஆகஆங்கிலமொழிபெயர்ப்புநேற்றோடுமுடிந்துவிட்டது. மிகப்பெரியரிலீஃப். அராத்துகெஸ்ட்ஹவுஸில்ஒயின்சாப்பிடலாம்என்றுஅராத்துவைஅழைத்தேன். நீங்களும்நானும்மட்டும்என்றால்நான்வரவில்லை. நம்மோடு மேலும் ரெண்டுபேராவதுசேர்ந்தால்தான் நன்றாக இருக்கும்என்றார்.  ஏன்என்றால்அவர்குடிப்பதைநிறுத்திவிட்டார். அதனால்நாலுபேருக்குபோன்போட்டேன். நாலுபேருமேஎடுக்கவில்லை. இப்போதுதனியாகஒயின்அருந்திக்கொண்டிருக்கிறேன். (2) இது போன்ற சந்தர்ப்பங்களில்தான் தனிமை உணர்வு மனதைக் கவ்வுகிறது. நான் ஆறு மாதமாக யாருக்குமே போன் செய்யவில்லை என்றால் அந்த யாருமே ஆறு மாதமாக எனக்கும் போன் செய்ய மாட்டார்களா என்ன? அப்படித்தான் என் வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்கிறது.  கேட்டால், ஒரே பதில். உங்களைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்றுதான் போன் … Read more

ஆதி பகவன்

நேற்று ஆதி பகவன் பார்த்ததிலிருந்து மன உளைச்சல் தாங்க முடியவில்லை.  நானே ஒரு படத்தை இயக்கினால் மட்டுமே இந்த மன உளைச்சலிலிருந்து மீள முடியும்.  கிட்டத்தட்ட பைத்தியம் பிடித்தது போல் இருக்கிறேன்.  இப்படியெல்லாம் கூட படம் பண்ண முடியுமா என்பதே என் மன உளைச்சலுக்குக் காரணம்.  ஒரு படம் இயக்கியே தீருவது என்று நேற்றே கங்கணம் கட்டி விட்டேன்.  ஆர்ட் ஃபில்ம் அல்ல;  மக்கள் ரசிக்கக் கூடிய நல்ல படம்.  அதாவது, தேவ்.டியைப் போல்.  ஐந்து ஆண்டுகளில் … Read more