ராஞ்ஜனா: தனுஷ்: மூங்கில் தோட்டம்

நேற்று தனியாகப் போய் சத்யம் தியேட்டரில் ராஞ்ஜனா படம் பார்த்தேன்.  நான் அதிகம் சினிமா பார்ப்பதில்லை.  தனுஷுக்காகப் போனேன்.  காரணம், இந்தி சினிமாவுக்குப் போன கமல், ரஜினி இருவரும் ஜெயிக்கவில்லை.  படு தோல்வி என்று சொல்லலாம்.  காரணம் புரியவில்லை.  இவர்கள் இருவரும் பல இந்தி நடிகர்களை விட நன்றாக நடிக்கக் கூடியவர்கள்.  அதிலும் ரஜினி ஒரு அற்புதமான நடிகர்.  சிவாஜி கணேசனைப் போலவே ரஜினியையும் தமிழ் மசாலா சினிமா விழுங்கி விட்டது.  (இதற்கு ரஜினிதான் காரணம்.  அமிதாப் … Read more

அம்மா வந்தாள் (2)

இந்தப் பதிவுக்கு அம்மா வந்தாள் (2) என்று தலைப்பிட்டிருந்தாலும் அந்த நாவலுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை.  அம்மா வந்தாள் பற்றி நம் ஜாம்பவான்கள் என்ன எழுதியிருக்கிறார்கள் என்பதைக் கொஞ்சம் வாசித்து விடலாம் என்று தேடிய போது முதலில் வந்தது உ.த.எ. எழுதியது.  உடனே தொடர்ந்து அவர் என்னைப் பற்றி எழுதியிருப்பதையும் வாசித்து சிரித்தேன்.  அதைப் படித்ததும் எனக்கு உடனே ஞாபகம் வந்தது, நான் போஸ்டல் டிபார்ட்மெண்டில் வேலை செய்து கொண்டிருந்த போது தினமும் என் மேஜையின் அருகே … Read more

அம்மா வந்தாள் (1)

சமீபத்தில் கொஞ்சம் ஓய்வு வேண்டி இணையத்தில் மேய்ந்து கொண்டிருந்த போது தி. ஜானகிராமனின் “அம்மா வந்தாள்” நாவலிலிருந்து ஒரு அத்தியாயம் வெளியிட்டிருப்பதைக் கண்டு படிக்க ஆரம்பித்தேன்.  பிரமாதமாக இருந்தது.  அது எனக்கு ஆச்சரியமாகவும் இருந்தது.  ஏனென்றால், என் கல்லூரிப் பருவத்தில் தி. ஜானகிராமனின் புகழ்பெற்ற நாவல்களான மோகமுள், அன்பே ஆரமுதே, உயிர்த்தேன், செம்பருத்தி, மரப்பசு ஆகிய நாவல்களைப் படித்து அவை எதுவும் என்னைக் கவராதது மட்டும் அல்லாமல் சராசரித்தனமாகவும் இருந்ததால் தி.ஜா.வை எப்போதுமே என் விருப்பத்துக்குரிய எழுத்தாளர் … Read more

வர்றியா… வர்றியா…

ஃபேஸ்புக்கில் என் பெயர் மறுபடியும் இழுக்கப்பட்டிருக்கிறது.  தமிழில் ஃபேஸ்புக்கில் 90 சதவிகிதம் கிரிமினல் மனம் கொண்டவர்களே அலைந்து கொண்டிருக்கிறார்கள்.  எனக்கு இவர்களோடெல்லாம் உரையாடிக் கொண்டிருப்பதில் விருப்பம் இல்லை; முக்கியமாக நேரமும் இல்லை. மனுஷ்ய புத்திரன் திரு மு. கருணாநிதியை அவரது பிறந்த நாள் அன்று வாழ்த்திப் பேசினார் என்ற விஷயம் இணையத்தில் படு சூடான விவாதமாக மாறியது பற்றி நண்பர்கள் மூலம் அறிந்தேன்.  எனக்கு இதைப் படிக்கவோ இதில் கலந்து கொள்ளவோ விருப்பம் இல்லை; நேரம் இல்லை. … Read more