கடிதம் குறித்த எதிர்வினைகள்…(1)

அன்புள்ள சாருவுக்கு, நீங்கள் கமலுக்கு எழுதிய கடிதம் படித்தேன். மிகுந்த  மனவருத்தம் அடைந்தேன். எப்படி இந்த அளவுக்கு ஒருவரை உதாசீனம் செய்ய முடியும் என்று தெரியவில்லை. அன்பின்  மொத்த உருவம் நீங்கள் என்பது உங்கள் எழுத்தைப் படித்தவர்களுக்கு நன்கு தெரியும். சில விஷயங்களை அதிகம் யோசித்தால் நிம்மதி குலையும். இந்த சம்பவமும் அப்படிப்பட்ட  ஒன்று. எனது பணிவான கோரிக்கை இதுவே – தயவு செய்து எந்த “பெரிய” மனிதரிடமும் நீங்கள் அன்பை காட்ட வேண்டாம் என்று நினைக்கிறேன். இதனை மிகுந்த மன … Read more

சிறுத்தொண்டர்

அன்புள்ள சாரு, வணக்கம். அந்தி மழை  மின் இதழில்  வரும் தங்கள் கேள்வி பதில் (6) இன்று படித்தேன். சிறுத் தொண்டரும் அவரது மனைவியும் தங்கள் பிள்ளையை  இறைவனுக்கு உணவாகப் படைக்கச்செய்த ஏற்பாடுகள்   பற்றிய புராணச் செய்யுளுடன்  நீங்கள் எழுதியிருந்த விதம் என் கண்களில் நீர் வரச் செய்தது.   அதுவும் சக எழுத்தாளர்  ஜெயலக்ஷ்மி   அவர்களைப் பாராட்டி எழுதிய தங்களின் பண்பு  நன்று. ஒரு வேண்டுகோள். இது போன்ற தமிழ் இலக்கியச் சுவைகளை … Read more

கமல்ஹாசனுக்கு ஒரு கடிதம்…

அன்புள்ள கமல்ஹாசன் அவர்களுக்கு, வணக்கம். கடந்த சனிக்கிழமை அன்று (13.9.2014) அன்று மாலை புக்பாய்ண்ட் அரங்கத்தில் திரு.பி.ஏ. கிருஷ்ணன் எழுதிய மேற்கத்திய ஓவியங்கள் என்ற புத்தகத்திற்கான அறிமுகக் கூட்டத்துக்கு கிருஷ்ணனின் அழைப்பின் பேரில் வந்திருந்தேன்.  கிருஷ்ணனின் இன்னொரு புத்தக அறிமுகக் கூட்டத்துக்கும் சென்றிருக்கிறேன்.  சக எழுத்தாளர்களால் வெறுக்கப்படும் என்னையும் மதித்து தன் நூல் அறிமுகக் கூட்டங்களுக்கு அழைப்பவர் கிருஷ்ணன் என்பதால் அவர் அழைத்தால் மறுப்பு சொல்லாமல் போய் விடுவது என் வழக்கம்.  நான் சமீப காலமாக வேலைப் … Read more

மாண்டலின் ஸ்ரீனிவாஸ் – அஞ்சலி

அன்புள்ள சாரு, இன்று காலை கர்னாடக இசைக் கலைஞர் மாண்டலின் ஸ்ரீனிவாசின் உடலுக்கு அஞ்சலி செலுத்தச் சென்றிருந்தேன். அந்த வீடே மிகவும் அமைதியாக இருந்தது. மக்கள் வந்து கொண்டே இருந்தனர். ஆனால் சிறிதும் குழப்பம், கூச்சல் ஒன்றுமே இல்லை. இதனைப் பார்க்கும்போது பாலுமகேந்திராவின் சாவு தான் நினைவுக்கு வந்தது. ஒரு நாள் முழுவதும் ஒரு இடத்தில் கூச்சல், குழப்பம் நிலவ முடியும் என்று அன்று தான் பார்த்தேன். இத்தனைக்கும் பாலு மிகவும் அமைதியான, அன்பான மனிதர். மாண்டலின் … Read more

ஸ்வான் லேக்…

டாக்டர் ஸ்ரீராம் அந்திமழை கேள்வி பதில் பற்றி இப்படி எழுதியிருந்தார்: ஹாய் சாரு, அந்திமழையில் இதைப் படித்ததும் தானாக கண்ணீர் வந்து விட்டது. “ஒருநாள் அவர் ஒரு நிமிடம் ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்த போது ராகவன் அவரிடம் சென்று இது ட்சைக்காவ்ஸ்கியின் ஸ்வான் லேக் தானே என்று கேட்டதும் அவர் நெகிழ்ந்து விட்டார்.  அந்த மனிதர் எதற்காக இதையெல்லாம் வாசிக்கிறார்?  அந்தப் பூங்காவில் உள்ள அத்தனை விருட்சங்களுக்காகவும்தான்.  அந்த விருட்சங்கள் அவருடைய சங்கீதத்தை ரசிப்பதை நான் உணர்கிறேன்.  அவரும் … Read more