தேர்தலில் நிற்கப் போகிறாரா, பா. ராகவன்?

இப்படித்தானே இப்போதெல்லாம் பத்திரிகைகளில் தலைப்பு கொடுக்கிறார்கள்? அதே டெக்னிக்கை நானும் பின்பற்றினேன். பின்வருவது பாரா முகநூலில் எழுதியது. அதைத் தொடர்ந்து என் கருத்தை எழுதியிருக்கிறேன். பா. ராகவன்: அன்பின் பாரா, நீங்கள் ஏன் ஒரு கட்சி ஆரம்பித்து தேர்தலில் நிற்கக்கூடாது? நடிகர்கள் எல்லாம் கட்சி ஆரம்பித்து தேர்தலில் நிற்கும்போது எழுத்தாளர்கள் செய்யக்கூடாதா? தாராளமாகச் செய்யலாம். ஆனால் அதற்கெல்லாம் ஒரு வக்கு வேண்டும். இதுவே ஜெயமோகனைச் சொல்கிறீர்களா? நியாயம். கமலஹாசன் கட்சிக்கு இருப்பதைக் காட்டிலும் அதிகமான தொண்டர் பலம் … Read more

இஞ்சி, சுக்கு, கடுக்காய்…

இதுவரை ஸீரோ டிகிரி பதிப்பகத்தில் நான் கொடுத்துள்ள புதிய புத்தகங்கள்: மயானக் கொள்ளை – நாடகம் மாயமோகினி – கவிதைத் தொகுதி லத்தீன் அமெரிக்க சினிமா முகமூடிகளின் பள்ளத்தாக்கு (மொழிபெயர்ப்பு நாவல்) இப்போது கொடுக்கப் போகும் புதிய புத்தகம்: இஞ்சி, சுக்கு, கடுக்காய்.  ஆகஸ்ட் 2012 முதல் ஆகஸ்ட் 2013 வரை எழுதிய கட்டுரைகள்.  அதில் ஒரு கட்டுரை கனடாவில் வசிக்கும் என் சிநேகிதி சந்த்ரா ஸித்தன் பற்றியது.  சந்த்ராவுடன் எனக்கு அறிமுகம் ஏற்பட்டது ஒரு ஆச்சரியம்.  … Read more

என் கடன் பணி செய்து கிடப்பதே…

முகமூடிகளின் பள்ளத்தாக்கு முடிந்து எக்ஸைலில் வேலை செய்து கொண்டிருக்கிறேன்.  ஒரு ஆண்டு சுமையை இறக்கி வைத்து விட்டது போல் ஆசுவாசமாக இருக்கிறது.  இன்று வரை நான்கு புத்தகங்களை ஸீரோ டிகிரி பதிப்பகத்திடம் கொடுத்திருக்கிறேன்.  மயானக் கொள்ளை – நாடகம் மாயமோகினி – கவிதைத் தொகுதி லத்தீன் அமெரிக்க சினிமா முகமூடிகளின் பள்ளத்தாக்கு (மொழிபெயர்ப்பு நாவல்) இது எல்லாம் புத்தக விழாவிலேயே வந்து விடுமா என்று சொல்ல முடியாது.  வந்தால் நல்லது.  எல்லா எழுத்தாளர்களுமே புத்தக விழாவில் தம் … Read more

முகமூடிகளின் பள்ளத்தாக்கு (மீண்டும்)

அநேகமாக இனிமேல் முகமூடிகளின் பள்ளத்தாக்கு பற்றி எழுத மாட்டேன்.  புத்தகம் வெளிவந்த பிறகுதான்.  ஒரு விஷயத்தை மட்டும் மறந்து விடாதீர்கள்.  இப்படி ஒரு நாவலை என் வாழ்நாளில் நான் படித்ததில்லை.  ஓரளவுக்குப் பெருமையுடன் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு வாசித்திருக்கும் நான் தான் இப்படிச் சொல்கிறேன்.  பின்வரும் பகுதி நாவலின் கடைசி அத்தியாயத்தில் வருகிறது.  அதைப் படித்த பிறகு இது பூனைகளைப் பற்றிய நாவலோ என நினைத்து விடாதீர்கள்.  நாவலின் இந்தப் பக்கத்தில் மட்டுமே பூனைகள் – அதுவும் … Read more

பிறழ்வெழுத்து: சாபமும் விமோசனமும்

தி. ஜானகிராமனின் அம்மா வந்தாள் படித்திருப்பீர்கள்.  அப்புவின் அம்மா அலங்காரம்தான் கதையின் பிரதான பாத்திரம்.  அவளுடைய கணவன் தண்டபாணி ஒரு வேதவிற்பன்னர்.  அலங்காரத்துக்கு சிவசு என்ற பணக்கார நிலக்கிழாருடன் தொடர்பு.  ரகசியத் தொடர்பெல்லாம் இல்லை.  அலங்காரத்தின் வீட்டுக்கே வெளிப்படையாக வந்து போய்க் கொண்டிருப்பவர்தான்.  ஒருநாள் சிவசு அலங்காரத்தின் வீட்டுக்கு வந்திருக்கும்போது தண்டபாணி மேல்தளத்தில் குளித்துக் கொண்டிருக்கிறார்.  சிவசு வந்து ஊஞ்சலில் உட்கார்ந்து அலங்காரத்திடம் சத்தமாகப் பேசிக் கொண்டிருப்பது தண்டபாணிக்குக் கேட்கிறது.  தண்டபாணி குளித்து முடித்து விட்டார்.  வெளியே … Read more

முகமூடிகளின் பள்ளத்தாக்கு

முகமூடிகளின் பள்ளத்தாக்கு – இறுதிக் கட்ட வேலைகளை முடித்து விட்டேன்.  இரவு பகலாக அமர்ந்து இறுதிக் கட்ட பிழை திருத்தம், எடிட்டிங் எல்லாவற்றையும் இப்போதுதான் முடித்தேன்.  இந்த அளவு உழைப்பை நான் வேறு எந்தப் பிரதிக்கும் இதுவரை கொடுத்ததில்லை.  பன்னிரண்டு மணி நேரத்துக்கும் மேலாக இடைவிடாமல் தட்டச்சு செய்திருக்கிறேன்.  ஆனால் பிழை திருத்தம் என்பது வேறு.  மௌஸைப் பிடித்துக் கொண்டே வேலை செய்ய வேண்டும்.  பன்னிரண்டு மணி நேரம் வலது கையை ஒரே இடத்தில் வைத்து மௌஸை … Read more