ஆதி பகவன்

அமீரின் யோகி பற்றி உயிர்மையில் கட்டுரை எழுதி அமீரின் நட்பை இழந்தேன்.  அதிலிருந்து தமிழ் சினிமா பார்ப்பதில்லை; பார்த்தாலும் எழுதுவதில்லை என்று சங்கல்பம் செய்து கொண்டிருந்தேன்.  இடையில் பார்த்த கும்கியைப் பற்றியும் தமிழ்நாடே புகழ்ந்து கொண்டிருந்த போதும் அந்தப் படத்தைப் பற்றி நான் எதுவும் எழுதவில்லை.  ஹீரோவைக் காப்பாற்ற ஹீரோ வளர்த்த யானை தன் காலில் கட்டப்பட்டிருக்கும் இரும்புச் சங்கிலியைப் பிய்த்துக் கொண்டு கிளம்பும்போது கேமரா அந்த இரும்புச் சங்கிலியை க்ளோஸ்-அப்பில் காட்டும்.  அதைப் பார்த்த பிறகும் … Read more

வாழ்க்கையில் வெற்றி பெறுவது எப்படி?

எந்த அடிப்படையில் எனக்கு இப்படிக் கடிதங்கள் வருகின்றன என்று தெரியவில்லை.  தினமும் ஒரு ஐந்து பேராவது தங்கள் பயோடேட்டாவை அனுப்பி வைத்து மணி ரத்னத்திடம், கமல்ஹாஸனிடம் உதவி இயக்குனராக என்னைச் சேர்த்து விடுவீர்களா என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.  உத்தமத் தமிழ் எழுத்தாளனுக்குப் போக வேண்டிய கடிதங்கள் விலாஸம் மாறி எனக்கு வந்து விடுகின்றனவா என்ன?  நானே இப்போதுதான் வசன கர்த்தா ஆகலாம் என்று முடிவு செய்து இயக்குனர் பாலாவிலிருந்து பாலாஜி சக்திவேல் வரை என்னுடைய பயோடேட்டாவை அனுப்பிக் … Read more

விஸ்வரூபம்

வாசகர் வட்டத்தில் பாலாஜி ஜி. சேகர் என்ற நண்பர் எழுதியது: கடைசியா விஸ்வரூபம் பார்த்தாச்சு.. ஆமாம். இனிமேல பார்க்கிறதா இல்லை.. அப்படியே பார்க்கறதா இருந்தா முதல் 40 நிமிஷம் மட்டும் பார்க்கலாம்.. அதுவரைக்கும்தான் அது கமல் என்கிற நடிகரின் படம். அதுக்குப்பிறகு அது டைரக்டர் கமலோட மத துவேஷ கைக்கு சென்றுவிடுகிறது. … தீவிர கமலின் ரசிகனாய் இருந்து இப்படி எழுத மனம் வரவில்லை.. எனக்கு வேறு வழியில்லை.. என்னடா நேத்து வந்த ரகுமான் 2 ஆஸ்கர் … Read more

சந்திப்பு

 கதா ஆண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக நான் 9-ஆம் தேதி அன்று புவனேஸ்வர் செல்கிறேன்.  இதற்குள் ஏதாவது ஒரு தினத்தில் நம் கெஸ்ட் ஹவுஸில் அல்லது மாமல்லபுரம் விடுதியில்  ஒரு இரவு சந்திக்கலாமா? எட்டாம் தேதி இரவு சாத்தியம் இல்லை.  4. 5. 6. 7 இந்த நான்கு தினங்களில் ஒரு நாள். யார் யார் வருகிறீர்கள்? வரும் அன்பர்கள்/நண்பர்கள் துரோகியைத் தொடர்பு கொள்ளவும். அல்லது, செல்வகுமாரை.  கர்னாடக இசை பற்றி நாலு மணி நேரம் லெக்சர் கொடுத்து … Read more

கடல்

நான் நீண்ட காலமாக சொல்லி வந்தது நிரூபணம் ஆகி விட்டது.  சினிமாவும் இலக்கியமும் ஒன்று சேர வேண்டும் என்பதே நான் சொல்லி வந்தது.  கமலும் பல ஆண்டுகளாக இதைத்தான் சொல்லி வருகிறார் என்றாலும் அதை அவர் செய்து பார்க்கவில்லை.  ஆனால் பாலாவுக்கு அடுத்தபடியாக மணி ரத்னம் இப்போது அதைச் செய்து காட்டி விட்டார். கடலில் மணி ரத்னத்தை மட்டும் பார்க்க முடியவில்லை.  பார்த்திருந்தால் அது பம்பாய் மாதிரியோ, ரோஜா மாதிரியோ அல்லது ராவணன் மாதிரியோ இருந்திருக்கும்.  கன்னத்தில் … Read more