பூச்சி 125 : இரண்டு சொற்கள்

திங்கள்கிழமை பரீட்சையாக இருக்கும், ஞாயிற்றுக்கிழமை தண்ணி அடித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீரங்கம் கும்பல்.  நான் பார்த்த ஸ்ரீரங்கம் அப்படி.  அப்படித் தண்ணி அடித்தவர்கள் அனைவரும் இப்போது இன்ஃபோஸிஸ் போன்ற நிறுவனங்களில் மூன்று லகரம் சம்பாதித்துக் கொண்டு இருக்கிறார்கள்.  அவ்வப்போது முகநூலிலும் விமர்சனம் எழுதி தமிழின் தலை சிறந்த விமர்சகர் என்ற விருதும் வாங்குகிறார்கள்.  அவர்கள் கல்லூரிப் பாடப் புத்தகங்களைத் தொட்டது கூட இல்லை.  எல்லாம் வகுப்பில் கேட்டதுதான்.  அதை வைத்தே டிஸ்டிங்ஷன்.  எல்லாம் அய்யங்கார் மூளை.  இப்படிச் சொன்னால் … Read more

பூச்சி – 123

ந. சிதம்பர சுப்ரமணியன் பற்றி பழுப்பு நிறப் பக்கங்களில் எழுதியிருக்கிறேன்.  அவருடைய மண்ணில் தெரியுது வானம் நாவலை சுமாராக இருபது லட்சம் பேர் படிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.  அந்த நாவலைப் படித்தவர்கள் அதற்கு முன்பு அவர்கள் எப்படி இருந்தார்களோ அப்படி இருக்க முடியாது.  அவர்களது வாழ்வியல் கண்ணோட்டத்தில் ஒரு சிறிதளவு மாற்றத்தையாவது கொண்டு வரக் கூடிய மந்திரஜாலத்தைக் கொண்ட ஒரு நாவல் மண்ணில் தெரியுது வானம்.  நாவல் தலைப்பின் அர்த்தம் உங்களுக்கெல்லாம் தெரிந்ததுதான்.  இந்த பூலோகத்திலேயே … Read more

என்னுடைய எல்லா புத்தகங்களும் ஒரே இடத்தில்…

இதுவரை வெளிவந்துள்ள என்னுடைய எல்லா புத்தகங்களும் ஸீரோ டிகிரி பப்ளிஷிங்கில் கிடைக்கின்றன. பல்வேறு இடங்களில் அலைந்து திரிவதை விட இது ஒரு நல்ல ஏற்பாடு. பயன்படுத்திக் கொள்ளுங்கள். வாசிப்பில் ஆர்வமுள்ளவர்களுக்கும் இந்தத் தளத்தை அறிமுகப்படுத்துங்கள். https://zerodegreepublishing.com/collections/charu-nivedita

பூச்சி 122

மாணவர்கள் பணம் அனுப்ப வேண்டாம் என்று சொல்லியும் சில மாணவர்கள் மாதம் ஐநூறும் முன்னூறும் அனுப்புகிறார்கள்.  ஆனால் அதை விட ஆச்சரியம் என்னவென்றால் – இங்கே ஆச்சரியம் என்ற வார்த்தைப் பிரயோகம் அபத்தம், ஆனால் வேறு வார்த்தை போட்டால் பணம் அனுப்பும் அந்த நண்பர்களுக்கு மரியாதை இல்லை, உப்பிட்டவரை உள்ளளவும் நினை என்பது நம் மரபு, அதனால் ஆச்சரியம் என்றே வாசியுங்கள் –  பத்துப் பதினைந்தாயிரம் ரூபாய் சம்பாதிப்பவர்களெல்லாம் மாதம் முன்னூறு ரூபாய் அனுப்புகிறார்கள்.  வேண்டாம் என்று … Read more

பூச்சி 121: டாண்டெக்ஸ் ஜட்டியும் கோடீஸ்வர நண்பனும்

என் வாழ்நாளில் ஒரு இரண்டு வருட காலம் பணப் பிரச்சினை என்றால் என்னவென்றே தெரியாமல் இருந்தேன்.  பணத்தைப் பற்றி யோசிக்கவே இல்லை.  காரணம், ஒரு நண்பர்.  கற்பனைப் பெயராக வினோத் என்று வைப்போம்.  அடா பொடா நண்பர்.  அவரைப் பொறுத்தவரை டேய் சாரு என்பதுதான் என் பெயரே.  என் மீது பேரன்பு கொண்டவர்.  வேலைப் பளு காரணமாக நான் ஒரு மாதம் அவரை அழைக்காவிட்டாலும் அவரே அழைப்பார்.  அப்படி அவர் வாழ்வில் அவராக அழைக்கும் ஒரே ஆள் … Read more

24. நாளும் நேரமும்

அன்புள்ள  சாரு.. உங்கள் மூன்று மணிநேர உரையை இரண்டாகப் பிரித்து இரு நாட்கள் நடத்தலாம் என்ற யோசனை நல்லதல்ல என்பது என் கருத்து ஏன் ? உங்களது எழுத்தும் உங்கள் பேச்சும் அறிமனதுடன் உரையாடுவதை விட அறிமனதில் அறிந்ததை உடைத்து ஆழ்மனதைத் தொடுபவை. அனைத்தையும் மிகவும் அறிவுபூர்வமாகக் கட்டமைக்க முயலும் இந்தப் பைத்தியக்கார உலகில் தாக்குப் பிடிக்க நமக்கு ஒரு madness தேவை என்கிறார் கொர்த்தசார் உங்களது உரை  கல்லூரிப் பேராசிரியர் உரை அன்று.  மனோதத்துவ செயல்பாடு … Read more