தள்ளுபடி விலையில் என் நூல்கள்

ஸீரோ டிகிரி பதிப்பகத்தில் என் புத்தகங்கள் அனைத்தும் இப்போது பெரும் தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளும்படி வாசகர்களையும் என் நண்பர்களையும் கேட்டுக் கொள்கிறேன். இந்தச் செய்தியை ஈடுபாடு உள்ள மற்ற வாசகர்களிடமும் பகிர்ந்து கொள்ளவும். கீழ்வரும் சுட்டியில் என் நூல்கள் அனைத்தும் உள்ளன.

பூச்சி 128 அடியேன் சொன்ன பொய்

அராத்துவின் மயிர்க்கூச்செறிதல் கதையை என் தளத்தில் வெளியிட்டிருந்தேன்.  ஆனால் அது பற்றி என் கருத்து எதையும் எழுதவில்லை.  என் தளத்தில் வெளியிட்டாலே அந்தக் கதை பற்றிய என் கருத்து தெரிவிக்கப்பட்டு விட்டது என்றே பொருள் என்று நினைத்தேன்.  மேலும், அந்தக் கதை பற்றி நான் உயர்வாக எழுதினால் அதைக் குப்பை என்று நினைப்பவர்களின் சுதந்திரமான மனப்போக்கைத் தடை செய்ததாகவோ அல்லது இடையூறு செய்ததாகவோ ஆகும் என்று நினைத்தும் அப்படியே விட்டு விட்டேன்.  என் நெருங்கிய நண்பரிடம் பொதுவாக … Read more

ஊரின் மிக அழகான பெண்

மேற்கண்ட தலைப்பில் என்னுடைய ஒரு மொழிபெயர்ப்பு நூலை ஸீரோ டிகிரி பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. மறுபதிப்பாக இருந்தாலும் இதில் ஜான் பால் சார்த்ர் எழுதிய சிறுகதை சுவர் சேர்க்கப்பட்டுள்ளது. சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு மொழிபெயர்த்த சிறுகதை அது. படிகள் பத்திரிகையில் வெளிவந்தது. கீழே சார்ல்ஸ் ப்யூகோவ்ஸ்கி எழுதிய ஊரின் மிக அழகான பெண் சிறுகதை. புத்தகத்தை வாங்குவதற்கான விவரங்கள்: ஊரின் மிக அழகான பெண் சார்ல்ஸ் ப்யூகோவ்ஸ்கி அந்த ஐந்து சகோதரிகளில் காஸ்தான் மிகவும் அழகானவள். இளையவள். … Read more

பூச்சி 127: பாஸ்டனில் இட்லி கிடைக்குமா?

அப்பா, பூச்சி 125 படித்தேன். ஒருசில விஷயங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ளத் தோன்றியது. பிஸ்கட் பற்றி எழுதியிருந்தீர்கள். இப்போது கொஞ்சம் பத்தியத்தைக் கடைபிடிப்பதால் இங்கே நான் பிஸ்கட் (அமெரிக்காவில் குக்கீஸ்) சாப்பிடுவதை நிறுத்தியிருக்கிறேன். நீங்கள் இன்று ஞாபகப்படுத்திவிட்டீர்கள். இந்தியாவிலே எனக்கு இரண்டே இரண்டு குக்கீஸ்தான் பிடிக்கும்: அவற்றுள் இரண்டாம் இடம் குன்னூரில் கிடைக்கும் பட்டர் பிஸ்கட். நீங்கள் சொன்னதுபோல உப்பு பிஸ்கட்தான். குன்னூரில் இந்தியன் பேக்கரியில் கிடைக்கும் பிஸ்கட்டை பெருமளவில் புகழ்வார்கள். ஆனால் பெட்ஃபோர்டுக்கு அருகில் குறுகிய சந்து … Read more

முன்னோடிகள் 25: பெரியோரைப் புகழ்தலும் இலமே…

ந. சிதம்பர சுப்ரமணியன் பற்றிய உரை சிறப்பாக முடிந்தது.  இந்த இரண்டு தினங்களில் மூவாயிரம் பேர் பார்த்திருக்கிறார்கள்.  நல்ல எண்ணிக்கை.  இதுவே கட்டண உரை என்றால் இவ்வளவு பேர் பார்க்க வாய்ப்பு இல்லை.  ஆனாலும் நம்முடைய மாதாந்திர ஸூம் சந்திப்புகள் மகத்தான வெற்றி என்றே சொல்ல வேண்டும்.  எந்த நேரத்தில் வைத்தாலும் நூறு பேர் வந்து விடுகிறார்கள்.  ஆனால் அந்தப் பேச்சை ஏதோ கொஞ்சம் காசு கொடுத்து வாங்கிக் கொள்ளுங்கள் என்றால் மேலும் ஒரு பத்து இருபது … Read more

பூச்சி 126

வணக்கம்.  என்னை உங்களுக்கு தெரியாது. உங்களது பேச்சுக்களை கேட்டு புத்தகங்களையே வாசித்திராதவன். எனக்கு 16வயது. நீங்கள் எனக்கு ஷ்ரூதி டிவி காணொலிகளின் மூலம் அறிமுகமானவர். இலக்கியத்தை பற்றி நான் உங்களிடமிருந்து தான் தெரிந்து கொண்டேன். கீழுள்ள சிறுகதை நான் எழுதியது தான்.அடியேன் உங்களை வாசிக்கச்சொல்லி வற்புறுத்தவில்லை!… இலக்கியம் என்று தவறாக கற்பிக்கப்படுவதன் சித்தரிப்பே இச்சிறுகதை.இலக்கிய பிழைகள் இருப்ந்தால், அடியேன் ஒரு 11ஆம் வகுப்பு மாணவன் என நினைவில் கொள்ளுங்கள். *** இப்படி ஒரு கடிதம்.  கடிதத்தோடு சிறுகதை.  … Read more