Pithy thoughts – 22

10 Downingஇல் எட்டு ரவுண்டு டகீலா அப்புறம் கொஞ்சம் ஆட்டம் எல்லாம் முடித்து வோலாவில் தெரேஸாவை அனுப்பி விட்டு ஆட்டோவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது பக்கத்தில் ஒரு ஆள் யாரென்று புரியவில்லை எட்டு ரவுண்டு டகீலாவும் ஆடியதில் போய் விட்டதே யார் நீர் என்றதற்குக் கடவுள் என்று பதில் வந்தது சமீபத்தில் புதுமைப்பித்தனைப் படித்து பித்தமாகி விட்டதா என ஐயத்துடன் என்னய்யா உளறுகிறீர் அதெல்லாம் கதையில்தான் நடக்குமென்றேன் நிஜத்திலும் நடக்கும் என்ன வரம் வேண்டும் கேள் என்றார் … Read more

Pithy thoughts – 21

நீ எங்கும் நிறைந்தவள் என்பதை மறந்து விட்டு இங்கே வந்து விட்டேன் நீ சிந்தனைக்கு அப்பாற்பட்டவள் என்பதை மறந்து விட்டு உன்னைப் பற்றிச் சிந்தித்து விட்டேன் நீ வார்த்தைகளுக்குள் அடங்க மறுப்பவள் என்பதை மறந்து விட்டு உன்னைப் பற்றி எழுதிக் கொண்டிருக்கிறேன்                                               (Source: Adi Shankara)

Pithy thoughts – 19

அவனும் அவளும்  போகம் துய்த்தார்கள் துய்ப்பின் உச்சத்தில் அவனுயிர் பிரிந்தது இப்போது அவளுக்கு அவனுடல் தொட அச்சம்

Pithy thoughts – 18

அன்னையாகி நின்ற ஸ்மாஷன் தாராவிடம் என் தந்தையைக் காண்பி எனக் கேட்டேன் மூன்று ஆண்டுகள் மசானத்திலே சவ சாதனம் செய்தேன் மனமிரங்கிய தாரா தந்தையைக் காணும் மந்திரம் தந்தாள் அதைப் பார்த்த நகரசபை ஊழியரொருவர் மந்திரவாதியெனச் சொல்லி எனை அடித்து விரட்ட இந்தப் பெருநகரம் சவ சாதனத்துக்கு ஆகாதென மணிகர்ணிகா மகாமசானம் சென்றேன் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் இந்த மகாமசானத்தில் பிரேதம் எரியாத ஒரு கணமில்லை மசானத்தை சும்மா எட்டிப் பார்த்து விட்டுப் போனால் உனக்கு வரும் மசான … Read more