தமிழ் எழுத்தாளன் (3)

நண்பர் யாரேனும் குடிப்பதை நிறுத்தி விட்டால் அவருக்கும் எனக்கும் தொடர்பு அறுந்து போகிறது.  ஒரு நண்பர் குடிப்பதை நிறுத்தி விட்டார்.  அதனால் எங்கள் சந்திப்பும் நின்று விட்டது.  ஒருநாள் அவருக்கு ஃபோன் போட்டு, ”பார்த்து நாள் ஆயிற்றே; எங்காவது காஃபி ஷாப்பிலாவது சந்திக்கலாமா?” என்று கேட்டேன்.  ஓ என்றார்.  நல்லவேளை, சரவண பவனில் சந்திக்கலாம் என்று சொல்லவில்லை. சந்தித்தோம்.  பேசினோம்.  நாவல் எழுதவில்லை; தாய்லாந்து பயணக் கட்டுரை எழுதவில்லை; மலேஷியா பயணக் கட்டுரை எழுதவில்லை.  இப்படி என் … Read more

இன்றைய நிகழ்ச்சி

பல தொலைக்காட்சி சேனல்கள் என்னுடைய அன்பான வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு விட்டன.  (புதிய தலைமுறையோடுதான் இன்னும் போராடிக் கொண்டிருக்கிறேன்).  அந்த சேனல்களுக்கு நன்றி… இன்று இரவு ஒன்பதிலிருந்து பத்து வரை சன் நியூஸில் நடக்கும் விவாதத்தில் கலந்து கொள்கிறேன்.  முடிந்தால் பாருங்கள்…

மேடையில் அவர் கடவுள்

என்னுடைய கட்டுரை நூல்களில் நான் எழுதியுள்ள விஷயங்களை வைத்து நீங்கள் ஆராய்ச்சி செய்து கொண்டு போனால் உங்களுக்கு ஒரு ஆயுள் போதாது.  மேடையில் அவர் கடவுள் என்று உதய் ஷங்கரைப் பற்றி எழுதியிருக்கிறேன்.  அந்தக் கட்டுரையைப் படிப்பதோடு விட்டு விடாதீர்கள்.  உதய் ஷங்கர் இயக்கி நடித்த கல்பனா என்ற படத்தைத் தேடிப் பாருங்கள்.  அப்போது நான் எழுதியிருப்பது புரியும்.  கீழே ஒரு வாசகர் கடிதம்: அன்புள்ள சாரு… இன்று விடியற் காலை 5.30 இருக்கும் சற்று மன … Read more

உண்ணாவிரதம்

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மெரீனா பீச்சில் இலங்கைத் தமிழர்களுக்காக இருந்த இரண்டு மணி நேர உண்ணாவிரதப் போராட்டத்தை நாம் அறிவோம்.  ஆனால் நிஜமாகவே தன் உயிரையும் மதிக்காமல் நாள் கணக்கில் உண்ணாவிரதம் இருக்கிறார் ஒருவர். பெயர் சசி பெருமாள்.  அவர் கோருவது பூரண மது விலக்கு.  உண்ணாவிரதம் எவ்வளவு கேலிக் கூத்தாகி விட்டது என்பதற்கு இது ஒரு உதாரணம்.  ஒருவர் தற்கொலை செய்து கொள்வது சட்டப்படி குற்றம் என்றால் சசி பெருஉண்ணாவிரதப் போராட்டமும் தற்கொலை முயற்சிதான்; சட்டப்படி … Read more