Pithy thoughts – 15

நேற்று வந்த வெர்னரின் கடிதத்தைப் படித்ததிலிருந்து பாவ்லோ கொய்லோவின் சாகசத் தனிமை ஞாபகத்தில் வந்து மோதுகிறது தென் ஃப்ரான்ஸில் மனித வாடையற்ற ஒரு நிலப்பகுதியில் ஆறு மாதம் பிறகு ப்ரஸீலில் குடும்பத்தோடு ஆறு மாதம்  வால்டன் வனத்தில் தோரோ வாழ்ந்தது இரண்டு ஆண்டுகள் இரண்டு மாதங்கள் இரண்டு நாட்கள் வனம் அலுத்ததும் நகரத்துக்குச் சென்று விட்டார் தோரோ என் ஜெர்மானிய நண்பன் வெர்னர் முப்பத்து மூன்று வயது  ஆய்வு மாணவன் குடும்பமில்லை உற்றமில்லை சுற்றமில்லை தேசமுமில்லை பணம் … Read more

Pithy thoughts – 14

ஆயுதங்கள் மாறின தேசங்கள் மாறின குதிரை விமானமாயிற்று ஆனாலும் காதலில் தோல்வியுற்ற மனிதன் இன்னமும் மதுவைத்தான் நாடி ஓடிக் கொண்டிருக்கிறான் கணவனின் துரோகம் தாங்க முடியாத பெண் இன்னமும் அரளி விதையைத்தான் அரைத்துக் கொண்டிருக்கிறாள் இன்னமும் ஒரு குழந்தை தாயைத் தேடி அழுது கொண்டிருக்கிறது

172. டிஸம்பர் 18

அந்நியன் சமாச்சாரத்தை இனி ஒருபோதும் எழுத மாட்டேன்.  அது என் வாசகர்களுக்குக் கொஞ்சம் மனக்கிலேசத்தை அளிப்பதாக அறிகிறேன்.  இவர் ஏன் இதையெல்லாம் பொருட்படுத்திக் கொண்டிருக்கிறார் என்பதாகவே பல கடிதங்கள் வந்துள்ளன.  இனி அந்த சப்ஜெக்டைத் தொட மாட்டேன்.  அதுவே கடைசி.  நான் தீபாவளி அன்று ஊரில் இருக்கத் தேவையில்லை; பொங்கலுக்கும் இருக்க வேண்டாம்; ஏன், ஊரே கொண்டாட்டமாய்க் கிடக்கும் ஜனவரி ஒன்று கூட ஊரில் இல்லாமல் போனால் அத்தனை பிரச்சினை வராது.  ஆனால் டிசம்பர் 16 நான் … Read more

Pithy thoughts – 13

பால்வீதி பார்க்க அந்த அராபியப் பாலைவனத்துக்கு சகாக்களுடன் சென்றிருந்தேன் அரபுச் சட்டத்துக்கு அஞ்சி மதுபானம் எடுத்துப் போகவில்லை ஆனாலும் கில்லாடி பிரபு எனக்காகக் கொண்டு வந்திருந்த ஒரே ஒரு போத்தலை தீர்த்தம்போல் குடித்துத் தீர்த்தோம் எல்லாரும் மூத்தவன் என்பதால் என் பங்கு அதிகமாச்சு மணலில் படுத்தால் தேள் வரும் பாலைவனத் தேள் உயிரைக் குடிக்குமென்று உள்ளே போகச் சொல்லி கூடாரத்தைக் காண்பித்தான் பிரபு பால்வீதிக்கு முன்னால் உயிரும் மயிரும் ஒண்ணு என்று சொல்லி துண்டை உதறி மணலில் … Read more

171. அந்நியன் (2)

அசோகமித்திரன் மிக நெருக்கமாகப் பழகிய ஒரு இலக்கிய நண்பர் அழகியசிங்கர்தான்.  அவரை அசோகமித்திரனுக்கு ரொம்பப் பிடிக்கும். வயதான காலத்தில் அசோகமித்திரனுக்கு மிகவும் உதவியாக இருந்தார் சிங்கர்.  சிங்கரை அசோகமித்திரன் நெருக்கமாக உணர்ந்ததற்குப் பல காரணங்கள் உண்டு.  அழகியசிங்கர் பிரச்சினைகள் இல்லாதவர்.  அசோகமித்திரன் இருந்த மகன் வீட்டுக்கு (தி.நகர்) அடுத்த தெருவில் இருந்தார் அழகியசிங்கர். மட்டும் இல்லாமல் இருவரும் கலாச்சார ரீதியாக ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள்.  எதில் சாதி இல்லாவிட்டாலும் உணவில் வந்து விடுகிறதே, என்ன செய்வது?  நான் … Read more

170. அந்நியன்

காலையில் எழுந்ததும் ஒரு ஐந்து நிமிடம் எனக்கு வரும் மின்னஞ்சல்களைப் பார்ப்பேன்.  பொதுவாக எல்லாம் ங்கொம்மா ங்கோத்தா ரக கடிதங்கள்.  எப்போதாவது பாராட்டுக் கடிதங்கள்.  இரண்டையும் சமமாக பாவிக்கும் மனப்பக்குவப் பயிற்சியே அந்தக் காலை நேரக் கடித வாசிப்பு.  ஒருவர் ரேஷன் கடையில் கொரோனா நிவாரணமாகக் கொடுக்கும் ஆயிரம் ரூபாயை வாங்கி எனக்கு அனுப்புகிறார்.  இன்னொருவன் – அவன் எனது புதல்வர்களில் ஒருவன் என்பதால் ஒருமையில் சொல்கிறேன் – இப்போது பாதிரியாக ஆகி விட்டான்.  பாதிரி அங்கியின் … Read more