144. ஓர் எதிர்வினை : வளன் அரசு

SPB விஷயத்தில் சாரு சொல்ல வருவதைப் புரிந்துகொள்ளாமல் பதிலடி தருகிறேன் பேர்வழிகள் அனைவரும் ஒருவிதமான பதற்றத்துடன் இருப்பதைக் காண முடிகிறது. ஒட்டு மொத்த சமூகமும் சிந்திக்காமல் ஒரு எழுத்தாளனை இப்படிப் பந்தாடுவதைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. பயத்தினால் ஒரு எழுத்தாளன் சொல்ல வருவதைப் புரிந்துகொள்ளாமல் தாக்கலாமா? உண்மையில் தமிழ் சமூகம் வெட்கப்பட வேண்டும். சாருவை வசை பாடுவதன் வழி மீண்டும் மீண்டும் சாருவின் குற்றச்சாட்டை நிரூபித்துக் கொண்டேயிருக்கிறது இந்த சமூகம். ஒரு சமூகம் எப்படியிருக்கிறது என்பதன் அடையாளம் எழுத்தாளன். … Read more

முன்னோடிகள் : 26

இது ஒரு முக்கியமான கடிதம்.  பாலம் புத்தகச் சந்திப்பை ஏழு ஆண்டுகளாக நடத்தி வரும் சஹஸ்ரநாமம் எவ்வளவு பெரிய உன்னதமான பணியை மேற்கொண்டிருக்கிறார் என்பது அவர் தன்னைப் பற்றி எதுவும் சொல்லாமலேயே எனக்குத் தெரிந்து விட்டது.  அவர் தன்னைப் பற்றி எதுவுமே சொன்னதில்லை.  ஏழு ஆண்டுகளாக வாரம் தவறாமல் நடத்திக் கொண்டிருக்கிறோம் என்றார்.  நடத்திக் கொண்டிருக்கிறேன் என்றுதான் சொல்லியிருக்க வேண்டும்.  படித்த பண்பு அவரது ‘ஓம்’இல் தெரிந்தது.  முன்பெல்லாம் நான் மாதம் ஒருமுறை சேலத்துக்குப் போவேன்.  அங்கே … Read more

143. ந. முத்துசாமி ந. முத்துசாமி என்று ஒர்த்தர்…

என்ன இருந்தாலும் பொதுஜனம் பொதுஜனம்தான், எழுத்தாளர் எழுத்தாளர்தான் என்பதை பொதுஜனமும் நிரூபித்து விட்டது, எழுத்தாளர்களும் நிரூபித்தி விட்டார்கள்.  பொதுஜனம் என்னைத் திட்டாத திட்டு இல்லை.  எடுத்து எடுப்பில் செத்துப் போ, புழுத்துப் போய் சாவாய்.  ஆஹா.  யாமார்க்கும் குடியல்லோம், நமனை அஞ்சோம் பரம்பரையிடம் வந்து செத்துப் போ செத்துப் போ என்றால் என்ன பயம் வரும்.  இந்தப் புழு மேட்டர்தான் கொஞ்சம் நடுங்க வைக்கிறது.  ரொம்பத் தாங்க முடியாமல் போனால் நிறைய டாக்டர் நண்பர்கள் இருக்கிறார்கள்.  ஒரு … Read more

142. ஒரு (கடைசி) விளக்கம்

ஒருத்தர் என்னை சீப் பப்ளிசிட்டி தேடுகிறேன் என்று சொல்லியிருக்கிறார்.  எது மலினமான விளம்பரம்?  அடுத்து பாருங்கள்: நீ புழுத்துதான் சாவாய்.   இப்படி ஒரு லட்சம் பேரால் சபிக்கப்படுவதைத்தான் ஒருத்தர் விளம்பரம் என்கிறார்.  எல்லார் வாயிலும் சாபம் பெறுவதா விளம்பரம்?  ஒன்றுமில்லை.  ஒரு குப்பையான கமர்ஷியல் படம்.  அஜித் படம்.  அதை யூட்யூபில் விமர்சித்தேன்.  அஞ்சு நிமிடம்.  ஒரு வெப்சைட்டுக்காக.  பிரபலமான வெப் தளம் அது.  அதற்கு ஆயிரக்கணக்கான அஜித் ரசிகர்கள் எனக்கு எழுதியிருந்த பின்னூட்டங்களைப் படித்தேன்.  புழுத்து … Read more

141. இன்னும் கொஞ்சம் கனத்த இதயம்…

மன்னிக்கவும் சாரு , நீங்கள் என்ன காரணம் சொன்னாலும் ஒரு கலைஞநின் இறப்பை மக்கள் தங்கள் துக்கமாக நினைப்பது தவறெனில் நாளை உங்களுக்கும் உங்கள் பதிவே பதில்.மீண்டும் மன்னிக்கவும். இப்படியாக என் பதிவுக்கு ஒரு பதில் வந்துள்ளது.  நீங்கள் சொல்வதில் உறுதி இருந்தால் பிறகு எதற்கு இரண்டு முறை மன்னிப்புக் கேட்க வேண்டும்?  நீங்கள் என் கட்டுரையை சரியாகவே படிக்கவில்லை.  அடுத்த வீட்டில் துக்கம் என்றால், என் வீட்டில் அன்று தீபாவளி என்றால் கூட பட்டாசு கொளுத்த … Read more

140. கனத்த இதயத்துடன் எழுதுகிறேன்…

இதை எழுத்தாளர்களைத் தவிர வேறு யாரும் படிக்க வேண்டாம்.  மனம் பதற்றமடையும்.  என் மீது கோபம் வரும்.  அது உங்களுக்கும் அனாவசியம்.  எனக்கும் தேவையற்ற பிரச்சினை.  இதை எழுதுவது எழுத்தாளர்களுக்கு மட்டுமே.  மனசு கேட்காமல்தான் எழுதுகிறேன்.  அதுவும் இன்னும் நாலே மணி நேரத்தில் கோபி கிருஷ்ணன் பற்றிய உரை இருக்கிறது.  மூன்று மணி நேரம் பேச வேண்டும்.  அப்படிப்பட்ட நிலையில் இதை எழுதுகிறேன்.  நீங்களெல்லாம் (எழுத்தாளர்கள்) ஏன் பட்டுக்கோட்டை பிரபாகர் மாதிரியும் புஷ்பா தங்கதுரை மாதிரியும் அல்லது … Read more