142. ஒரு (கடைசி) விளக்கம்

ஒருத்தர் என்னை சீப் பப்ளிசிட்டி தேடுகிறேன் என்று சொல்லியிருக்கிறார்.  எது மலினமான விளம்பரம்?  அடுத்து பாருங்கள்: நீ புழுத்துதான் சாவாய்.   இப்படி ஒரு லட்சம் பேரால் சபிக்கப்படுவதைத்தான் ஒருத்தர் விளம்பரம் என்கிறார்.  எல்லார் வாயிலும் சாபம் பெறுவதா விளம்பரம்?  ஒன்றுமில்லை.  ஒரு குப்பையான கமர்ஷியல் படம்.  அஜித் படம்.  அதை யூட்யூபில் விமர்சித்தேன்.  அஞ்சு நிமிடம்.  ஒரு வெப்சைட்டுக்காக.  பிரபலமான வெப் தளம் அது.  அதற்கு ஆயிரக்கணக்கான அஜித் ரசிகர்கள் எனக்கு எழுதியிருந்த பின்னூட்டங்களைப் படித்தேன்.  புழுத்து … Read more

141. இன்னும் கொஞ்சம் கனத்த இதயம்…

மன்னிக்கவும் சாரு , நீங்கள் என்ன காரணம் சொன்னாலும் ஒரு கலைஞநின் இறப்பை மக்கள் தங்கள் துக்கமாக நினைப்பது தவறெனில் நாளை உங்களுக்கும் உங்கள் பதிவே பதில்.மீண்டும் மன்னிக்கவும். இப்படியாக என் பதிவுக்கு ஒரு பதில் வந்துள்ளது.  நீங்கள் சொல்வதில் உறுதி இருந்தால் பிறகு எதற்கு இரண்டு முறை மன்னிப்புக் கேட்க வேண்டும்?  நீங்கள் என் கட்டுரையை சரியாகவே படிக்கவில்லை.  அடுத்த வீட்டில் துக்கம் என்றால், என் வீட்டில் அன்று தீபாவளி என்றால் கூட பட்டாசு கொளுத்த … Read more

140. கனத்த இதயத்துடன் எழுதுகிறேன்…

இதை எழுத்தாளர்களைத் தவிர வேறு யாரும் படிக்க வேண்டாம்.  மனம் பதற்றமடையும்.  என் மீது கோபம் வரும்.  அது உங்களுக்கும் அனாவசியம்.  எனக்கும் தேவையற்ற பிரச்சினை.  இதை எழுதுவது எழுத்தாளர்களுக்கு மட்டுமே.  மனசு கேட்காமல்தான் எழுதுகிறேன்.  அதுவும் இன்னும் நாலே மணி நேரத்தில் கோபி கிருஷ்ணன் பற்றிய உரை இருக்கிறது.  மூன்று மணி நேரம் பேச வேண்டும்.  அப்படிப்பட்ட நிலையில் இதை எழுதுகிறேன்.  நீங்களெல்லாம் (எழுத்தாளர்கள்) ஏன் பட்டுக்கோட்டை பிரபாகர் மாதிரியும் புஷ்பா தங்கதுரை மாதிரியும் அல்லது … Read more

அசோகா : வெளிவர இருக்கும் புதிய நாவல்

அதிக பட்சம் இன்னும் மூன்று மாதங்களில் வெளிவந்து விடும், நான் இப்போது எழுதிக் கொண்டிருக்கும் அசோகா என்ற புதிய நாவல். இது பற்றி குமுதம் இதழில் எழுதியிருக்கிறேன். இந்த வாரம் குமுதத்தில் வெளிவந்த கட்டுரை இது. பொதுவாக குமுதத்தில் எழுதுவதை என் தளத்தில் வெளியிட மாட்டேன். விதிவிலக்காக, இது என் புதிய நாவல் பற்றிய அறிவிப்பாக இருப்பதால் வெளியிடுகிறேன். குமுதம் ஆசிரியருக்கு என் நன்றி. எனவே இந்த மூன்று மாதங்களில் என்னை எந்தப் பணியிலும் ஈடுபடுத்தாதீர்கள் என்று … Read more

நாளைய சந்திப்பு: நினைவூட்டல்

நாளை 26-ஆம் தேதி இந்திய நேரம் மாலை ஏழு மணிக்கு கோபி கிருஷ்ணன் பற்றிய என் உரைக்கு நேரம் ஒதுக்கி விட்டீர்களா? அன்றைய தினம் கோபி தவிர வேறு ஒரு முக்கியமான நபரைப் பற்றிய கதையையும் சொல்ல இருக்கிறேன். பெரும்பாலானவர்களுக்குத் தெரியாத கதை. ஒரே ஒரு க்ளூ தருகிறேன். தாசிகளையெல்லாம் ஒழிக்க வேண்டும் என்று கோரிக்கை கிளம்பியபோது வைஸ்ராயின் மாத ஊதியத்தை விட என் ஒருநாள் நிகழ்ச்சிக்கான கட்டணம் அதிகம், அவர் எப்படி என்னை ஒழிக்க முடியும் … Read more

பூச்சி 139: பெயரைச் சொல்ல வெட்கம் (தொடர்ச்சி)

இரண்டு எதிர்வினைகள்: அன்புள்ள சாரு, நீங்கள் கேட்டுக்கொண்டபடி உங்களுடைய மிக முக்கியமான உரையை இப்பொழுதுதான் கேட்டு முடித்தேன்.கந்தப்பன், தி.ஜ. ரங்கநாதன் பற்றி நீங்கள் குறிப்பிட்ட சம்பவங்களை கேட்டு என்னுள் கிளம்பிய துக்கம் என் தொண்டையை அடைத்தது. உரையை நிகழ்த்திக்கொண்டிருக்கையில்  நீங்கள் துக்கம் விலக தண்ணீர் அருந்தியபொழுது இந்த உரை ஏன் மிக முக்கியமான உரை என்று புரிந்து கொண்டேன். பாலாம்மாள் கலைஞனை சாதனம் , திறமை , பக்தி , அனுக்கிரஹம் என்ற நான்கு நிலைகளாக வர்ணித்தார். … Read more