தமிழ்க் கேணியில் இதற்கு மேல் இறைக்க முடியாது: அபிலாஷ்

வர வர அபிலாஷின் அதகளம் அதிகரித்துக் கொண்டே போகிறது. இப்போதுதான் முகநூலில் அவரது இந்தப் பதிவைப் படித்தேன். அவருடைய அனுமதி இல்லாமலேயே இங்கே எடுத்துப் போடுகிறேன். எதாவது புக்கர் கிக்கர் கொடுத்தான்கள் என்றால் இதற்கான கட்டணத்தை அவரிடம் கொடுத்து விடுகிறேன். அதுவரை அபிலாஷுக்கு வெறும் நன்றி மட்டுமே. சமீபத்தில் நான் மிகவும் ரசித்துப் படித்த பதிவு இது. சார்த்தர் இதைத்தான் living intensely என்கிறார். அபிலாஷ் சொல்லும் இன்பத்தை ஒத்திப் போடுதல் (postponing the pleasure) பற்றியும் … Read more

ஸீரோ டிகிரி பதிப்பகத்தில் தள்ளுபடி விலையில் என் புத்தகங்கள்…

ஸீரோ டிகிரி பதிப்பகத்தில் என்னுடைய புத்தகங்கள் தள்ளுபடி விலையில் இன்னும் எட்டு நாட்களுக்குக் கிடைக்கும். புத்தக விழாவில் கூட பத்து சத தள்ளுபடிதான். ஆனால் இப்போது 25 சதவீதத்திலிருந்து நாற்பது சதவீதம் வரை தள்ளுபடியில் கிடைக்கிறது. உதாரணமாக, ராஸ லீலாவின் விலை 900 ரூ. அது தள்ளுபடியில் 600 ரூபாய்க்குக் கிடைக்கிறது. ஒருசில நூல்களுக்கு நாற்பது சதவிகிதத் தள்ளுபடியை விட அதிகம். இதைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

பூச்சி 130: ecstasy

டேன்ஸ் மங்கி என்ற இந்தப் பாடலை Toni Watson சென்ற ஆண்டு பாடினார்.  Tones and I என்பது இவர் புனைப்பெயர்.  ஆஸ்திரேலியன்.  இந்தப் பாடலின் சிறப்பு என்னவென்றால், உலகம் பூராவும் கொரோனா பரவியதைப் போல் இவரது டேன்ஸ் மங்கி பரவியது.  இந்தப் பாடலைக் கேட்காதவரே இல்லை.  தெருவில் சும்மா நடந்து செல்பவர் கூட இந்தப் பாடலைக் கேட்டால் உடம்பில் ஒரு நடன அசைவு ஏற்பட்டு விடுகிறது.  இந்தப் பாடலைப் பாடாத பாடகரே இல்லை.  இந்த சாக்ஸைக் … Read more

பூச்சி 129: சமகால எழுத்தின் முன் உள்ள சவால்கள்

அராத்துவின் மயிர்க்கூச்செறிதல் சிறுகதை நல்லதொரு விவாதத்தையும் சர்ச்சையையும் கிளப்பி விட்டது.  இப்படித்தான் இருக்க வேண்டும்.  என்ன ஆச்சரியம் என்றால், அராத்துவுக்குப் பெரிய ஒரு ஆர்மியே இருப்பதுதான்.  ஆர்மியில் இளம் பெண்களின் கூட்டம் அதிகமாக இருப்பது வேறு பொறாமையைக் கிளப்புகிறது.  கதை பற்றி என் நண்பரும் பேராசிரியருமான ராஜா ஒரு கடிதம் எழுதியிருந்தார்.  அந்தக் கடிதம்: அன்புள்ள சாரு, மயிர்க்கூச்செறிதல் கதையைப்படித்துவிட்டு நான் படித்ததில் மிகச் சிறந்த கதைகளில் இதுவும் ஒன்று என என் மனைவியிடம் கூறினேன். அவள் சந்தேகத்துடனே அதைப் படிக்க … Read more

உலகின் மிகச் சிறந்த நாவல்

நான் தொழில்நுட்ப சமாச்சாரங்களில் பூஜ்யம். ஆனால் இளவட்டங்கள் என்னை விடவும் கீழே இருக்கின்றன. நீங்கள் குறிப்பிட்ட பிடிஎஃப் வேலை செய்யவில்லை என்று இருபது கடிதங்கள். கடவுளே, வேலை செய்யாவிட்டால் என்ன? இடைவெளியின் பிடிஎஃப் கிடைக்கிறது என்ற தகவல்தானே முக்கியம்? இடைவெளி நாவல் PDF என்று கூகிளில் தட்டினால் கண் முன்னே வந்து நிற்கிறது நாவல். இதில் என்ன சிரமம் இளைஞர்களுக்கு? இருபது கடிதங்கள். அதில் ஒரே ஒருவர்தான் லிங்கைக் கொடுப்பதற்குப் பதிலாக லிங்க் முகவரியைக் கொடுத்து விட்டீர்கள் … Read more