பூச்சி 116 – Toy Boy

(இந்தப் பதிவு முப்பது வயதுக்குக் குறைவானவர்களுக்கு மட்டுமே.  பெரியவர்கள் இதைப் படிக்க வேண்டாம்.  படித்தால் தொடர்பு படுத்திக் கொள்ள முடியாது.) Toy Boy என்று ஒரு வெப்சீரீஸ்.  வெப்சீரீஸ் பற்றி எழுதுவதில்லை என்று உறுதி எடுத்திருப்பதால் டாய் பாய் பற்றி எழுதவில்லை.  இல்லாவிட்டால் ஒரு ஐம்பது பக்கம் எழுதும் அளவுக்கு விஷயம் உள்ள சீரீஸ் அது.  இதன் கதை  Male Strippers-ஐ சுற்றி வருவதால் இரண்டு விஷயங்கள் அதிக கவனம் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.  இந்த ஆண் நடிகர்கள் … Read more

முன்னோடிகள் – 18

கோபி கிருஷ்ணனின் உலகுக்குள் நுழைந்து விட்டேன்.  இனி பத்து நாட்கள் நான் கோபியாகவே இருப்பேன்.  அதற்கு இடையில் என் உயிர் நண்பனின் ஒரு நாவலை எடிட் பண்ணிக் கொண்டிருப்பதாக அவ்வப்போது சொன்னேன் அல்லவா, அந்தப் பணியில் கடந்த ஐந்து மாதமாக ராப்பகலாக உழைத்தேன்.  மூன்று தினங்களுக்கு முன் முடித்தும் விட்டேன்.  பதிப்பகத்திடம் கொடுக்கும் நிலையில் இன்னும் நிறைய வேலை இருப்பதாகத் தெரிந்து, இப்போது காயத்ரியும் நானும் ஸூம் மூலமாக தினம் ஐந்து மணி நேரம் அந்தப் பணியைச் … Read more

பூச்சி 115

நேற்றைய கட்டுரையை பூச்சி 114 எனக் கொள்ளவும்.  அதற்கு முன்னால் மொழிபெயர்ப்புப் பிரச்சினைகள் பற்றி எழுதியிருந்தேன்.  அந்தப் பதிவு மிகவும் மூர்க்கமாக இருப்பதாகவும், அப்படி எழுதுவதெல்லாம் ரொம்ப அதிகம், அதை நீக்கி விட வேண்டும் என்றும் ஒரு நண்பர் ஆலோசனை சொன்னார்.  அவரைப் புரிந்து கொள்கிறேன்.  நான் இப்போது இருக்கும் இடத்துக்கு அது பொருந்தாது.  எல்லாம் புரிகிறது.  ஆனால் தமிழ் எனக்கு தெய்வத்தைப் போல.  அதற்காகத்தானே இப்படி உழைத்துக் கொண்டிருக்கிறோம்?  க.நா.சு.வுக்கும், அசோகமித்திரனுக்கும் ஆங்கிலம் தமிழ் அளவுக்குத் … Read more

சாருவை வாசிப்பது எப்படி? அபிலாஷ் சந்திரன்

என் எழுத்து குறித்து அபிலாஷின் பேச்சை நீங்கள் கேட்டீர்களா? முகநூலில் இருக்கிறது. கேட்க விரும்புபவர்கள் கேட்கலாம். என் எழுத்து குறித்த பல்வேறு சந்தேகங்களுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் அபிலாஷ் விளக்கம் சொல்லியிருக்கிறார். இது பற்றி விரிவாக எழுத விஷயம் இருக்கிறது. எடுத்துக் கொண்டிருக்கும் வேலையை முடித்து விட்டு எழுதுவேன். அபிலாஷின் உரையை அவர் பேசும்போதே கேட்டேன். வெகுவாக ரசித்தேன். பல சந்தேகங்களுக்கு அவர் கொடுத்த பதில் நான் கொடுத்திருக்கக் கூடிய பதில்களுக்கு நேர் எதிர் நிலையில் இருந்தாலும் அவையெல்லாம் ஒப்புக் … Read more

பூச்சி – 113

ரொம்ப காலத்துக்குப் பிறகு இங்கே வருவது போல் உள்ளது.  எடுத்த வேலை இன்னும் முடியவில்லை.  இன்று காலை நாலு மணிக்கே எழுந்து கரதலையாக உட்கார்ந்து முடித்து விடுவோம் என்று ஆரம்பித்தேன்.  எடுத்ததுமே ஆப்பு.  வேர்டில் இருந்த ஃபைலைத் திறக்க முடியவில்லை.  எர்ரர் என்று வந்தது.  மணி நாலு.  என் பையன்கள் முத்துக்குமாருக்கும் பாக்யராஜுக்கும் மெஸேஜ் கொடுத்தேன்.  எழுந்தவுடன் அழையுங்கள்.  ஒன்பது மணிக்கு முன்னதாக அழைக்க மாட்டார்கள் என்று தெரியும்.  இருந்தாலும் கொடுத்து வைத்தேன்.  எடிட்டிங் வேலையை முடித்து … Read more