ஒரு ஆலோசனை

சுமார் ஒரு லட்சம் வார்த்தைகள். எடிட்டிங் பணி. உயிர் நண்பன். முந்தாநாள் முடித்தேன். இப்போது கடைசியாகத் திரும்பப் படித்துக் கொண்டிருக்கிறேன். இன்று முடித்து விடுவேன். தினமும் பத்துப் பன்னிரண்டு மணி நேரம் வேலை செய்ய வேண்டியதாயிற்று. மராமத்துதானே என்று நினைத்தேன். அப்படி இல்லை. மொழிபெயர்ப்பு என்பதால் மொழியில் அதிகவனம் செலுத்த வேண்டியதாயிற்று. பூச்சிக்கு எழுத படை மாதிரி இருக்கின்றன விஷயங்கள். நாளை எல்லாம் வரும். ஆச்சரியம் என்னவென்றால், நான் மௌனமானதும் வாசகர்களும் மௌனம். ஒரு மின்னஞ்சல் இல்லை. … Read more

சொல் தீண்டிப் பழகு – 1,2

ஒரு முக்கியமான எடிட்டிங் பணியினால் பூச்சி வரவில்லை. ஆனால் எழுத எக்கச்சக்கமாகக் கிடக்கிறது. நாளை அந்தப் பணி முடிந்து விடும். நாளையிலிருந்து நமது ஃபாக்டரி ஆரம்பித்து விடும். அதற்கு இடையில் நீங்கள் படிக்க, நான் குமுதத்தில் எழுதி வரும் தொடரின் சில அத்தியாயங்களைத் தருகிறேன். 25 ஆண்டுகளாக – ஏன், அதற்கு மேலேயே இருக்கும் – லத்தீன் அமெரிக்க நாடுகளுக்குப் போய் வர வேண்டும் என்பது என் லட்சியமாக இருந்து வந்தது.  அது என்ன லட்சியம்?  கனவு … Read more

சாரு நிவேதிதா கொண்டாடும் இசைக் கலைஞர்கள் – R. P. ராஜநாயஹம்

சாரு நிவேதிதா கொண்டாடும் இசைக் கலைஞர்கள் – நம் தேசத்து செவ்வியல் இசை வடிவங்கள் – R. P. ராஜநாயஹத்துடன் ஒரு கலந்துரையாடல். நன்றி ஸ்ருதி டிவி.

சாரு நிவேதிதாவை ஒரு பிரதியாக வாசித்தல்: அபிலாஷ் சந்திரன்

கீழே உள்ள குறிப்பு அபிலாஷ் சந்திரன் எழுதியது. தேதியையும் நேரத்தையும் குறித்துக் கொள்ளுங்கள். 9-ஆம் தேதி ஆகஸ்ட். இந்திய நேரம் மாலை ஆறு மணிக்கு சாரு நிவேதிதாவை ஒரு பிரதியாக வாசித்தல் என்ற தலைப்பில் அபிலாஷ் சந்திரன் முகநூலில் பேசுகிறார். நானும் கலந்து கொள்வேன். எல்லோரும் கலந்து கொள்ளலாம். விதிமுறைகள் கிடையாது. குறுக்கே பேசக் கூடாது என்ற சாதாரண நடைமுறை மட்டும்தான். கேள்விகள் இருந்தால் மேலே கண்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். முடிந்தவர்கள் கலந்து கொள்ளுங்கள். நண்பர்களே,சாருவை … Read more