கட்டுக்கதை

இந்த தேசமும் இதன் பழம்பெரும் பாரம்பரியமும் நம்பிக்கைகளும் எந்த அளவுக்குக் கீழே விழுந்து சாக்கடை சகதியில் மாட்டிக் கொண்டு விட்டது என்பதை இன்று நான் போட்ட பதிவுக்கு வந்த இரண்டு எதிர்வினைகளைப் பார்த்துத் தெரிந்து கொண்டேன். விஞ்ஞானம் என்ற விஷயம் நமக்கு எத்தனையோ வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.  எத்தனையோ விஷயங்களைப் புரிய வைத்திருக்கிறது.  அதன் காரணமாக நான் அடைந்த அறிவு, என் பாட்டனையும் பூட்டனையும் அவமானப்படுத்துவதற்கு ஆயுதமாக இருக்கலாகாது. என் முகநூல் நட்பு வட்டத்தில் இதுவரை சுமார் … Read more

சினிமா ஒரு மதம்…

தமிழ்நாட்டில் சினிமா ஒரு மதம் இல்லையா? அதில் ரஜினி ஒரு கடவுள். கமல் ஒரு கடவுள். இளையராஜா ஒரு கடவுள். கடவுளை விமர்சித்தால் என்ன ஆகும்? அதை இந்த விடியோவின் பின்னூட்டங்களில் பார்க்கலாம். இதை விட அதிக வசைகளையெல்லாம் ஓரான் பாமுக் அவர் தேசத்தில் வாங்கியிருக்கிறார். கேட்டு மகிழுங்கள்.

நான்கு மணி நேர நேர்காணல் : இரண்டாம் பகுதி

ரஜினி, கமல் பற்றிப் பேசிய என் பேச்சை ஒரே நாளில் 15000 பேர் பார்த்து திவ்ய வார்த்தைகளால் அர்ச்சனை செய்தார்கள் இல்லையா?  இதைப் பாருங்கள்.  இதுவரை 350 பேர் பார்த்திருக்கிறார்கள்.  இதுவரை நான் கொடுத்த நேர்காணல்களிலேயே ஆகச் சிறந்தது இதுதான் என்று சென்ற வாரம் குறிப்பிட்டிருந்தேன்.  மொத்தம் நான்கு மணி நேர நேர்காணல்.  இது இரண்டாம் பகுதி thanks to Arun (Tamil Studios) and his students  

சென்னை தினத்தை முன்னிட்டு கிழக்கு பதிப்பகம் நடத்தும் சிறுகதைப் போட்டி – 2018

வணக்கம். சென்னை தினம் (மெட்ராஸ் டே) சென்னையால் கொண்டாடப்படும் ஒரு சிறந்த கூட்டு நிகழ்வாகும். இந்நிகழ்வை முன்னிட்டு ஒரு சிறுகதைப் போட்டியை நடத்த கிழக்கு பதிப்பகம் முடிவெடுத்துள்ளது. அனைவரும் இந்த சிறுகதைப் போட்டியில் பங்குகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம். * சிறுகதைகள் தமிழில் மட்டுமே இருக்கவேண்டும். * சிறுகதைப் போட்டிக்கு தங்கள் படைப்புகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் ஜூலை 20, 2018. * வெற்றி பெற்ற சிறுகதைகள் பற்றிய அறிவிப்பு ஆகஸ்ட் 4ம் வாரம் அறிவிக்கப்படும். * … Read more

பெரிய கலகம் வரப்போகிறது : மனுஷ்ய புத்திரன்

பெரிய கலகம் வரப்போகிறது ……….. மனுஷ்ய புத்திரன் …………. பொம்மை அரசனின் படைகளுக்கு வீரம் இப்போது அதிகரித்துவிட்டது கடமை இப்போது அதிகரித்துவிட்டது அவர்கள் இப்போது சோளக்காட்டு காவல் பொம்மைகளையும் கைது செய்து அழைத்துச் செல்கிறார்கள் எனது ஒரு துண்டு நிலத்தை தரமாட்டேன் என்று சொன்ன மூதாட்டியை இருபது காவலர்கள் புடைசூழ இழுத்துச் செல்லும் புகைப்படங்கள் இன்று காணகிடைக்கின்றன எங்கள் காற்றை நஞ்சாக்காதே என்று சொன்ன ஒரு சிறுவனின் முதுகை சில நாட்களுக்கு முன்னர்தான் அவர்கள் உரித்திருந்தார்கள். அவர்களுக்கு … Read more

460 புத்தகங்களில் கையெழுத்திட்டேன்…

நேற்று ஒரு வித்தியாசமான நாள்.  மொத்தம் 460 புத்தகங்களில் கையெழுத்திட்டேன்.  பழுப்பு நிறப் பக்கங்கள் பாகம் 2.  அப்போது அதன் பதிப்பாளர் ராம்ஜியும் நானும் சிலவற்றைக் கதைத்தோம்.  காயத்ரி உட்பட எல்லோருக்கும் மகிழ்ச்சி.  ஆனால் எனக்கு ஆசை அதிகம்.  ஆசை அதிகம் இருப்பவரைத் திருப்தி செய்ய முடியாது.  இந்தப் புத்தகம் தயாரிப்பில் தமிழ்ப் புத்தக உலகைப் பொறுத்த வரை முதல் தரம்.  ஆனாலும் தில்லி தாம்ஸன் பிரஸ் மாதிரி யாராலும் செய்ய இயலாது.  அங்கே அச்சடித்தால் விலை … Read more