பழுப்பு நிறப் பக்கங்கள் மூன்றாம் பாகம் முன்பதிவு

https://tinyurl.com/pazhuppu3 பழுப்பு நிறப் பக்கங்கள் மூன்றாம் பாகத்துக்கு இரண்டாம் பாகம் அளவுக்கு வரவேற்பு இல்லை. காரணம், இரண்டாம் பாகத்துக்கு நான் ஒவ்வொரு நண்பராக போன் செய்து ஞாபகப்படுத்தினேன். இப்போது அப்படிச் செய்யவில்லை. நான் போன் பண்ணாவிட்டாலும் என்னுடைய மிக நெருங்கிய நண்பர்களான 500 பேர் வாங்கி விடுவார்கள் என்ற நம்பிக்கையே காரணம். உண்மையில், மூன்றாம் பாகம் இரண்டாம் பாகத்தை விட முக்கியமானது. சி.சு. செல்லப்பா, கு.ப.ரா. ஆகிய இருவரும் இதில்தான் இருக்கிறார்கள். மேலும், ப. சிங்காரம். அவருடைய … Read more

ஒரு காட்டுமிராண்டி சமூகத்தில்…

ஒரு காட்டுமிராண்டி சமூகத்தில் நடக்கும் காட்டுமிராண்டித்தனமாக காரியங்களுக்கு எதிர்வினைகள் மட்டும் நியாயமான, தர்மமான முறையில் நடக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனம், மடத்தனம் மட்டுமல்ல; அதர்மமும் கூட. எனவே 17 பேருக்கு எதிராக முடிவு செய்திருக்கும் வக்கீல்களின் முடிவு சரியானதுதான். இதை நாம் அந்த பாதிக்கப்பட்ட சிறுமியின் கோணத்திலிருந்து மட்டுமே பார்க்க வேண்டும். அது எத்தனை முறையற்றதாக இருந்தாலும். 17 பேருக்கும் அவர்கள் சாகும் தினம் வரை ஆயுள் தண்டனை கொடுக்கப்பட வேண்டும். எக்காரணம் கொண்டும் பரோல் … Read more

மன்னியுங்கள் நண்பர்களே…

ஆர்ட் ரெவ்யூ ஏஷியாவில் தொடர்ந்து இந்தியா பற்றிக் கடுமையாக விமர்சித்தே எழுதுகிறீர்கள்.  இந்த முறையாவது அப்படி எழுத வேண்டாம் என்று சில நண்பர்கள் என்னைக் கேட்டுக் கொண்டனர்.  எனக்கும் அவர்கள் சொன்னதில் நியாயம் தெரிந்தது.  ஆனால் தொடர்ந்து தினசரிகளில் வரும் செய்திகளைப் பார்க்கும் போது என்னால் இந்தியாவில் உள்ள நல்ல விஷயங்கள் பற்றி எழுத முடியாது என்றே தோன்றுகிறது.  இந்தியா என்றால் என்ன?  அதன் மக்கள்தானே?  அதன் மக்கள் தொகையில் கணிசமான பேர் ரேப்பிஸ்டுகளாக இருக்கும் போது … Read more

சாருவும் நானும் – பிச்சைக்காரன்

அப்போது சாருவுடன் எனக்கு பழக்கம் இல்லை… ஒரு புத்தக கண்காட்சியில் அவரைப் பார்த்தேன்.. அப்போது வலைப்பூ எழுத ஆரம்பிபித்த கால கட்டம். அவரை ஒரு பேட்டி எடுத்து எழுதலாமே என நினைத்து அவரை அணுகினேன் – வணக்கம் சார் .. சில கேள்விகள் -ம்ம்.. கேளுங்க – உங்க பார்வையில் இலக்கியம் என்றால் என்ன ? அவர் என்னை மேலும் கீழும் பார்த்தார் … எதுவும் சொல்லவில்லை சரி.. சொல்ல தெரியல போல… இன்னொரு கேள்வி கேட்போம் … Read more

பழுப்பு நிறப் பக்கங்கள் பாகம் மூன்று

பழுப்பு நிறப் பக்கங்கள் பாகம் மூன்று ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டிய ஆவணம். இதன் கதாநாயகன், இந்த நாவலை எழுதிய சி.சு. செல்லப்பாதான். அத்தனை பாத்திரங்களும் நிஜம். கீழே வருவது ஜார்ஜ் ஜோசஃப் என்பவரைப் பற்றி: அது அவனுக்கு வெறும் சரித்திரப் புஸ்தகம் அல்ல. ஒரு மானிட ஜாதியின் வாழ்வு பற்றியது. அதன் உரிமை பற்றியது. ரோம் தேசத்து அடிமைகளைப் பற்றிப் படித்திருந்தான். ‘பென்ஹர்’ சினிமா பேசாத படம் சென்ற வாரம்தான் சிட்டி சினிமாவில் அவன் பார்த்தான். அடிமைகள் … Read more