என் கருத்தும் இதேதான்…

சட்ட நடவடிக்கை என்ற கட்டுரையில் மட்டும் ஒரு சின்ன கருத்து முரண்பாடு எனக்கு உண்டு. அதில் சென்ற ஆண்டு ஜெ. மீது வழக்குத் தொடுத்த ஒருவரைப் பற்றி மிக உயர்வான கருத்துக்களை ஜெ எழுதியுள்ளார். அதில் எனக்கு உடன்பாடு இல்லை. எத்தனை படித்திருந்தாலும் ஒருவர் தன்னை கடவுள் போலவும் மற்றவர்களை அடிமை போலவும் நினைத்தால், அதுவும் அவர் மார்க்சிஸ்டாக இருந்தால், அதிகாரம் கிடைத்தால் அவர் ஹிட்லரைப் போலவே மாவோ போலவோதான் மாறுவார். ஏனென்றால், படிப்பு அவரிடம் ஆயுதமாகச் … Read more

பூச்சி 79

எனக்கு ஒரு கனவு வந்தது.  ஒரு ஆள் என்னிடம் பிச்சை கேட்கிறான்.  அவனை நான் கண்டபடி அடிக்கிறேன்.  நேர்வாழ்வில் அப்படியெல்லாம் நான் வன்முறையில் ஈடுபடும் ஆள் இல்லை என்றாலும் கனவில்தான் தர்க்கம் எதுவும் இருக்காதே?  ஓ, இதைக் கூட பயமாக இருக்கிறது.   நாளை என் மீது கம்யூனிஸ்டுகளோ இந்துத்துவவாதிகளோ பெரியாரிஸ்டுகளோ பிரச்சினை கொண்டு வந்தால் இவன் கனவில் பிச்சைக்காரனை அடித்தவன், மனித விரோதி என்று வக்கீல் நோட்டீஸ் அனுப்புவார்கள்.  கனவைக் கூட வெளியே சொல்ல பயமாக இருக்கிறது.  … Read more

To You Through Me (6)

டியர் சாரு, அன்று சி.சு. செல்லப்பா உரையை லைவ்-ஆகக் கேட்க முடியாத சூழ்நிலை. உரை ஆன்லைனில் கிடைக்கும் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன். உரைக்கான கட்டணம் ஜி-பே வழியாக அனுப்பியிருக்கிறேன். உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது உரைக்கான லிங்க் அனுப்புவீர்களானால் பயனடைவேன். எனக்கு சொந்த ஊர் வத்தலக்குண்டு. சி.சு. செல்லப்பாவின் தெரு இருந்த/இருக்கும் அதே தெருவில்தான் என் வீடும்.  எதிர் வரிசையில் இரண்டு மூன்று வீடுகள் தள்ளி அவர் வீடு. சின்ன வயதில் நாங்கள் எல்லாம் விளையாடுகையில் அவர் … Read more

பூச்சி 78

பூச்சி முடிந்து விட்டதாக நினைத்தேன்.  ஆனால் சமூகம் அதை முடிக்க விடாது போல் தெரிகிறது.  என்னோடு பழகிப் பார்த்தவர்களுக்குத் தெரியும், நான் எத்தனை அன்பானவன் என்று.  ஆனாலும் எழுத்தின் வழியே மட்டும் அறிந்தவர்கள் என்னை அப்படிச் சொல்ல மாட்டார்கள்.  மூர்க்கன், முரடன் இப்படியான பல பெயர்கள் உண்டு.  என் எழுத்தைக் கூர்ந்து கவனிப்பவர்களுக்குத் தெரியும்.  என் எழுத்தை மதிக்காதவர்களால் கூட சாரு அன்பானவர் என்று சொல்லப்படக் கூடிய ஒரு ஆள், எப்படி மூர்க்கன் என்றும் முரடன் என்றும் … Read more