மஹாபாரதம்

The Walls of Delhi என்ற புகழ் பெற்ற நூலை எழுதிய உதய் ப்ரகாஷும் நானும் ஒரிஸாவின் கிராமம் ஒன்றில் சென்று கொண்டிருந்தபோது ஒரு பெட்டிக் கடையில் காரை நிறுத்தி வெற்றிலைப் பாக்கு வாங்கினேன்.  கடையில் ஒரு பதினைந்து வயதுப் பையன் இருந்தான்.  இந்தப் பட்டிக்காட்டில் எதைப் பார்க்க வந்தீர்கள் என்று கேட்ட அவனிடம் நாங்கள் எழுத்தாளர்கள் என்றார் உதய் ப்ரகாஷ்.  எழுத்தாளர் என்பதற்கு அவர் சொன்ன லேகக் என்ற சுத்த ஹிந்தி அந்த ஒரிஸா பையனுக்குப் … Read more

விகடனைப் புறக்கணிக்க முடிவு

நேற்றுதான் விகடனில் என்னுடைய சிறிய பேட்டி ஒன்று வெளிவந்திருந்தது. அதுவே விகடனில் வெளிவரும் என் கடைசிப் பேட்டி. இனிமேல் விகடனில் எதுவும் எழுத மாட்டேன் என்று நான் எழுதினால் அதில் ஒரு கருத்துப் பிழை இருக்கும். துணுக்கு மாதிரிதான் ஆடிக்கொரு முறை அமாவாசைக்கு ஒருமுறை அதில் என்னை அணுகுவார்கள். விகடன் தடத்தில் ஒரு நீண்ட பேட்டி வந்தது. அந்த மாதிரி பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும். இனிமேல் அப்படிப்பட்ட விபரீதங்கள் நடக்காது. விகடனை நான் இனி முழுமையாகப் … Read more

சி.சு. செல்லப்பா

சார் வணக்கம்,  என்னுடைய கேள்வி:   சி.சு. செல்லப்பா முதற்கொண்டு அசோகமித்திரனின் அம்மா வரை என் ஊரை (வத்தலகுண்டு ) பூர்விகமாகக் கொண்டவர்கள். இது போன்று சுப்ரமணியம் சிவாவும் இப்பகுதியைச் சார்ந்தவர்தான்.  ஆனால் இதை எல்லாம் நினைத்துப் பெருமைப்படும் அளவு தற்போதைய ஊர் நிலவரம் இல்லை.   இவர்களை எடுத்துச் சொல்லி எவரிடமும் வாயார பெருமை கூட அடித்துக் கொள்ள முடியாது.  இவர்கள் அனைவருக்கும் எந்த ஒரு குறைந்த பட்ச அறிமுகம் கூட மக்களிடம் இல்லை.  இந்த ஊரில் இருந்து … Read more

பூச்சி 67

நான் சந்தேகித்தபடியே அம்மா வந்தாள் நாவலில் உல்ட்டாவாகத்தான் எழுதி விட்டேன்.  உள்ளது உள்ளபடி கீழே: அம்மா வந்தாள் – தி. ஜானகிராமன் தண்டபாணிக்கு ஹைகோர்ட் ஜட்ஜெல்லாம் சிஷ்யர்கள். வேதத்தில் சந்தேகம் என்றால் அவரிடம்தான் கேட்பார்கள். மெத்தப் படித்தவர். அவர் மனைவி அலங்காரம். மூத்த பிள்ளை அவனுடைய மனைவி, மகள் காவேரி, இளைய புதல்வர்கள் கோபு, வேம்பு – இவர்கள்தான் அந்தக் குடும்ப உறுப்பினர்கள். வேதம் படிக்க சென்றிருக்கும் அப்பு இரண்டாவது மகன். இந்தக் குடும்பத்தில் நுழைகிறான் சிவசு … Read more

சில குறிப்புகள்

கடைசியில் கொடுத்துள்ள விபரங்களைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.  மீட்டிங் ஐடி, பாஸ்வேர்ட் எல்லாம் அதிலேயே உள்ளன.  என் பேச்சைப் பதிவு செய்த விடியோவை மறுநாள் யூட்யூபில் போடுவது பற்றி ஸ்ரீராம் என்னோடு பேசினார்.  பேசுகின்ற நேரத்தில் கலந்து கொள்பவர்கள் நூறு பேர்தான் என்றாலும் மறுநாள் அதை யூட்யூபில் இரண்டாயிரம் மூவாயிரம் பேர் பார்க்கிறார்கள்; அது முக்கியம் இல்லையா, எழுத்து ஜனநாயகப்படுத்தப்பட வேண்டாமா, பலரையும் சென்றடைய வேண்டாமா, மட்டுமல்லாமல் நீங்கள் தரும் ஞானம் வெறும் நூறு பேருக்கு மட்டும்தானா … Read more