பூச்சி 63

பூச்சியை முடித்து விட்டு வேறு வேலையைப் பார்க்கலாம் என்றால், இதை இன்னும் ஆரம்பித்தது போலவே இல்லை என்கிறாற்போல் இருக்கிறது.  இந்த உணர்வு வரும் போதெல்லாம் எனக்கு இரண்டு பேரின் ஞாபகம் தொற்றும்.  அசோகமித்திரன், ஜான் பால் சார்த்தர்.  86 வயதில் அவர் காலமாகும் வரை – ஏன், சாகும் தருணத்தில் கூட அசோகமித்திரன் நம்மிடம் சொல்வதற்குப் புதிது புதிதாகக் கதைகள் வைத்திருந்தார்.  ஆச்சரியம் என்னவென்றால், அந்தக் கதைகள் அவரது இளம் பிராயத்துக் கதைகளாக இருந்தன.  ஜெமினி ஸ்டியோவில் … Read more

அமேஸிங் அனுபவங்கள் – செல்வேந்திரன்

எப்போதுமே எனக்குப் பிடித்தவைகளுக்கு நான் லைக் போடுவதில்லை. அவற்றை என் பக்கத்தில் ஷேர் செய்து விடுவேன். ஆனால் செல்வேந்திரனின் இந்தக் கட்டுரை மிக முக்கியமானது. புத்தக விற்பனை, புத்தகம் வாசகரைச் சென்றடைதல் என்ற செயல்பாட்டில் சில புரட்சிகர மாற்றங்கள் நடந்திருப்பதை ஆதாரபூர்வமாகச் சொல்கிறார் செல்வேந்திரன். கவனமாகப் படியுங்கள். இனி செல்வேந்திரன்: அமேஸிங் அனுபவங்கள் என் நெடுநாள் விருப்பமெல்லாம் நாவல் எழுதுவது. அதை எனக்குப் பிடித்தமாதிரி எழுதுவது. அதற்குரிய தன்னம்பிக்கை இன்றும் வந்துவிடவில்லை. தமிழில் டைப்படிக்கத் தெரியும் ஒரே … Read more

பூச்சி 62

காயத்ரி ஆசைப்பட்டதும் அவள் வீட்டுக்குக் கடவுள் அனுப்பி வைத்த பூனை பற்றிய ஒரு முக்கியமான விஷயம், அது ஒரு காலிகோ பூனை.  காலிகோ பூனைகள் அதிர்ஷ்டமானவை என்பது ஜப்பான், ஜெர்மனி, அமெரிக்கா போன்ற நாடுகளில் நிலவும் நம்பிக்கை. காலிகோ பூனைகள் மஞ்சள், கறுப்பு, வெள்ளை ஆகிய மூன்று வண்ணங்களில் இருக்கும்.  அநேகமாக காலிகோ பூனைகள் பெண் பூனைகளாகவே இருக்கும்.  எங்கள் வீட்டு ஸிஸ்ஸி அதன் முதல் பிரசவத்தில் இரண்டு குட்டிகளைப் போட்டு – அப்போது அது எங்கள் … Read more

Zoom meeting

வரும் 31-ஆம் தேதி (31.5.2020) இந்திய நேரம் காலை ஆறு மணி முதல் எட்டரை வரை வாசகர்களை Zoom meeting-இல் சந்திக்க இருக்கிறேன்.  இதுவரை மாயா இலக்கிய வட்டம் (சிங்கப்பூர்) சார்பாக நடந்த சந்திப்புகள் இந்திய நேரம் மாலை மூன்று மணிக்கு நடந்ததால் அதில் அமெரிக்க வாசகர்கள் கலந்து கொள்ள இயலவில்லை.  அங்கே அவர்களுக்கு அதிகாலையாக இருக்கும்.  அதை உத்தேசித்து அவர்களுக்காகவே இந்த நேரத்தைத் தேர்ந்தெடுத்தேன்.  எட்டரைக்கு மேல் இங்கே cat factory ஆரம்பமாகி விடும்.  பாத்திரம் … Read more

பூச்சி 61

மது விற்பனைக்குத் தடை கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் வெற்றியும் பெற்ற ஃபாஸிஸ்டுகள் இப்போது நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாவார்களா?  உச்சநீதி மன்றம் டாஸ்மாக் கடைகளைத் திறக்கலாம் என்று சொல்லி விட்டது.  எங்கேயாவது ஒரு நாகரீகமான சமூகத்தில் மதுக்கடைகளை மூடச் சொல்லி நீதிமன்றத்தில் தடை வாங்குவார்களா?  இதைச் செய்தவர்களில் ஒருவர் சினிமா உலகில் புத்திஜீவி என்று கருதப்படும் கமல்ஹாசன்.  இவர்கள் அதற்கு சொன்ன காரணம், கொரோனா ஊரடங்கு காலத்தில் கடையில் குடிகாரர்களெல்லாம் கூட்டமாகக் கூடுகிறார்கள் என்பது.  ஊரடங்கு … Read more

பூச்சி 60

இப்போதெல்லாம் ஒரு புதிய வழக்கம் உண்டாகி இருக்கிறது.  ஆனால் அதற்கு முன்னால் வேறொரு சம்பவத்தைச் சொல்ல வேண்டும்.  என் நண்பரின் மகன் – அவன் எனக்கும் நண்பன் தான் – அங்கிள், தமிழ்ல எத்தனை ரைட்டர்ஸ் இருப்பிங்க என்று கேட்டான்.  வாஸ்தவத்தில் அவன் என்னைக் கேட்ட கேள்விகளையெல்லாம் மறந்து விடாமல் தொகுத்திருந்தால் அராத்துவின் ஆழி கதைகளைப் போல் கேஷவின் கேள்விகள் என்று ஒரு புத்தகமே கொண்டு வந்திருப்பேன்.  தோன்றாமல் போயிற்று.  அத்தனை கேள்விகள் கேட்டிருக்கிறான்.  அவனுடைய நண்பனும் … Read more