என் தாயும் ஆனவள்…

இன்றுடன் அவந்திகாவுடனான மண வாழ்க்கை 17 ஆண்டுகளைத் தொடுகிறது.  இந்த உலகில் எந்தப் பெண்ணாலும் சாதிக்க முடியாத ஒரு விஷயத்தைச் சாதித்து விட்டாள் அவள்.  ஆம்; என்னோடு எந்தப் பெண்ணாலும் இத்தனை காலம் சேர்ந்து வாழ்ந்திருப்பது சாத்தியமே இல்லை.  நான் ஒரு எழுத்தாளனாக இல்லாமல் இருந்திருந்தால் என்னைப் போல் ஒரு அற்புதமான கணவனைப் பார்க்கவே முடியாது.  தினந்தோறும் சமையலில் நான் உதவி செய்வேன்.  வெங்காயம் (சின்னது), இஞ்சி, தக்காளி, கொத்தமல்லிக் கீரை, காய்கறிகள் எல்லாவற்றையும் நறுக்கித் தருவேன்.  … Read more

வாசகர் வட்டச் சந்திப்பு – ஏப்ரல்

ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் நமது வாசகர் வட்டச் சந்திப்பு நிகழ உள்ளது.  சென்னைக்கு அருகில் கோவளம் அருகில்.  இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் துரோகியைத் தொடர்பு கொள்ளலாம்.  99419 59211  அல்லது, என்னை: charu.nivedita.india@gmail.com

django unchained

நண்பர்கள் என் சிரமத்தைக் குறைக்கிறார்கள்.  கருந்தேள் எழுதிய விமர்சனம் இது.  மிகவும் ரசித்தேன். http://karundhel.com/2013/03/django-unchained-2012-english.html

அட பகவானே!

django unchained க்காக ஆன்லைன் டிக்கட் முன்பதிவு செய்ய வேண்டும்.  கடந்த ஐந்து ஆண்டுகளாக எனக்கு சினிமா டிக்கட் ஆன்லைனிலேயே முன்பதிவு  செய்து கொடுத்துக் கொண்டிருந்த  நண்பர் இப்போதெல்லாம் ரொம்ப பிஸி.  என் போனைக் கூட எடுக்க அவருக்கு நேரம் இல்லை.  ஐந்து ஆண்டுகளாக எனக்கு உழைத்தவர்.  ஒரு வார்த்தை பேசினாலும் எனக்குப் பாவம் சேரும்.  அதனால் இன்னொரு நண்பரை நேற்று இரவு ஒன்பதரைக்கு அழைத்தேன்.  அவர் கார் ஓட்டிக் கொண்டிருந்ததால் அவரது துணைவியார் எடுத்தார்.  ”சரி, … Read more

தியானம்

நான் தினமும் காலையில் நான்கிலிருந்து நான்கரைக்குள் எழுந்து தியானம் செய்வதற்கு முன் எனக்கு வந்துள்ள மின்னஞ்சல்களைப் பார்ப்பது வழக்கம்.  பத்து கடிதம் இருந்தால் அதில் பாதி படு மோசமான வசை கடிதங்களாக இருக்கும்.  சாந்தமாக வாழ்வது எப்படி என்ற கலையை அந்த வசைக் கடிதங்களே எனக்குக் கற்றுக் கொடுப்பதால் அதையும் நான் ஒரு தியானப் பயிற்சியாகவே கொண்டிருக்கிறேன்.  ஆனால் இன்று ஒரே ஒரு கடிதம்தான் வந்திருந்தது.  அது எனக்கு வேறு விதமான தியானப் பயிற்சியை அளித்தது.  ஆப்ரஹாம் … Read more