மாயா இலக்கிய வட்டம் – ஞாயிறு சந்திப்பு

Maya Ilakkiya Vattam is inviting you to a scheduled Zoom meeting. Topic: Maya Ilakkiya Vattam’s Zoom MeetingTime: May 10, 2020 06:00 PM Singapore Join Zoom Meetinghttps://us04web.zoom.us/j/77904041480… Meeting ID: 779 0404 1480Password: 015564 சென்ற வாரம் போலவே நாளை ஞாயிறு மாலை இந்திய நேரம் மூன்றரை மணிக்கு, சிங்கப்பூர் நேரம் ஆறு மணிக்கு நான் உரையாற்றுகிறேன். உரையைத் தொடர்ந்து கலந்துரையாடலும் நடைபெறும். முதல் ஒரு பத்து … Read more

பூச்சி 52

முன்பே இதை எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.  இப்போதுதான் இதற்கான நேரம் அமைந்தது.  மோடி ஒரு ஃபாஸிஸ்ட் என்பதற்கான காரணங்களை எழுதியிருந்தேன்.  ஃபாஸிஸத்தின் முக்கியமான அடையாளங்களில் ஒன்று, ஒழுக்கம்-கலாச்சாரம் ஆகியவற்றின் பேரில் மனித உடலை ஒடுக்குவது.  ஒரு பிரிவினரின் உணவுப் பொருட்களில் ஒன்றாக மாட்டுக் கறியை உண்பதற்கு அச்சப்படும் நிலையை உருவாக்கியதை இங்கே நினைவுபடுத்திக் கொள்ளலாம்.  வட இந்தியாவில் மாட்டுக் கறி உணவுக்குப் பேர் போன உணவகங்கள் பல கோழிக் கறிக்கு மாறியது பற்றியும் நான் … Read more

பூச்சி 51

சென்ற கட்டுரையின் தொடர்ச்சியாக இன்னும் ஒருசில விஷயங்கள்.  வெகுளியாக இருந்து கொண்டு நாம் செய்யும் சில காரியங்கள் உண்மையில் அடுத்தவரை மிகவும் பாதிக்கக் கூடியதாக, அடுத்தவரின் வெளியில் அத்துமீறுவதாக இருந்து விடுகிறது.  சுருக்கமாகச் சொன்னால், rudeness.  சீனியுடன் பேசிக் கொண்டிருந்த போதுதான் இந்த வெளிச்சம் எனக்குக் கிடைத்தது.  ஒரு இளம் எழுத்தாளர் சீனியைத் தற்செயலாக சந்திக்க நேர்ந்த போது அவர் எழுதிய புத்தகம் ஒன்றைப் படிக்கச் சொல்லி சொல்லியிருக்கிறார்.  இதில் என்ன தப்பு என்றுதான் உங்களுக்கும் எனக்கும் … Read more

பூச்சி 50

அப்படி இப்படி பூச்சி ஐம்பதை நெருங்கி விட்டோம்.  இப்போது ஒரு இலக்கியப் பிஸாது.  நாகூர் பாஷையில் பிஸாது என்றால் கிசுகிசு.  ஒரு அன்பர்.  அவர் எழுதிய சிறுகதைத் தொகுதியைக் கொடுத்தார்.  ஓ, அதற்கு முன் ஒரு விஷயம்.  ”சாரு கிசுகிசு எழுத லாயக்கில்லை; இன்னாரின் வீட்டு முகவரியைத் தவிர மற்ற எல்லா விபரங்களையும் கொடுத்து விடுகிறார்” என்பது மாதிரி ஜெயமோகன் முன்பு எழுதியிருந்தார்.  அதையே சவாலாக எடுத்துக் கொண்டு இதை எழுதுகிறேன்.  இப்போது சம்பந்தப்பட்ட ஆசாமிகளாலேயே இதைக் … Read more

பூச்சி – 49

இந்த அய்யங்கார்களைப் பற்றின என் பதிவுகளுக்குக் காரணமே சீனியின் தவப்புதல்வன் ஆழிமழைக் கண்ணன்தான்.  ஆழியின் பேச்சுக்களை வைத்து சீனி புத்தகமே போட்டு விட்டார்.  சகலகலா வல்லவன்.  நன்றாகப் பாடுகிறான்.  எனக்கு இப்படி “என் பையன்/பெண் நல்லா பாடுவான்/ள்” என்று சொல்லும் ஆட்களைக் கண்டாலே பிடிக்காது.  ஏனென்றால், உடனே இளையராஜா பாட்டை எடுத்து விடுவார்கள் பிள்ளைகள்.  அது ஏதாவது முதலிரவு சல்லாபப் பாடலாக இருக்கும்.  இல்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது ஜனனி மனனி என்று.  ஆனால் ஆழி பாடினான் பாருங்கள் … Read more

பூச்சி – 48

சென்ற ஆண்டு நான் வெப்சீரீஸிலேயே மூழ்கிக் கிடந்த போது மெஸையா என்ற ஒரு தொடரைப் பார்த்தேன்.  அது பற்றி யாரும் குறிப்பிடாதது எனக்கு ஒரு ஆச்சரியம்.  அந்தத் தொடரைப் பார்த்தவர்களால் அதை மறக்கவே இயலாது.  அதன் கதை அப்படி.  இயேசு கிறிஸ்து இப்போது மீண்டும் தோன்றினால் எப்படி இருக்கும் என்பதே கதை.  என்ன ஒரு கற்பனை! அதற்காகவே இந்தத் தொடரைப் பார்க்கலாம்.   அரபியில் மெஸ்ஸி மெஸ்ஸி என்றே அழைக்கிறார்கள்.  மெஸ்ஸி என்பது மெஸையா போல.  யேசுவின் அற்புதங்களையெல்லாம் … Read more