அற்புதன்…

பல கவிதைத் தொகுப்புகளைக் கொடுத்த புகழ் பெற்ற கவிஞன்.  ஏகப்பட்ட வாத்தியக் கருவிகளை வாசிக்கத் தெரிந்தவன்.  ஜாஸ் இசைக் கலைஞன்.  பியானோவில் அற்புதங்கள் கொடுத்தவன்.  பெத்ரோ அஸ்நார்.  Pedro Aznar.  அர்ஹெந்த்தினா.  பழங்களில் எனக்கு ஆகப் பிடித்தது நாவல் பழம்.  இசைக் கருவிகளில் பியானோ.  அஸ்நாரின் மயக்கும் குரலில் இந்தப் பாடலைக் கேளுங்கள்.  நமது நாடி நரம்புகளையெல்லாம் சுண்டி இழுக்கும் பியானோவை இசைத்தவாறு பாடுகிறான் அஸ்நார். https://www.youtube.com/watch?v=ScSt2GGFoQw    

விடிவெள்ளி

தென்னமெரிக்காவிலிருந்து நமக்கு கார்ஸியா மார்க்கேஸ், பாப்லோ நெரூதா போன்ற ஒரு சிலரைத் தெரிந்தாலும் தென்னமெரிக்க கண்டம் முழுக்கவுமே இந்தியாவில் அறியப்படாத இடமாகவே இருக்கிறது.  முக்கியமாக அவர்களின் சினிமா மற்றும் இசை.  ஃபாபியானா காந்த்திலோ (Fabiana Cantilo) அர்ஹெந்த்தினாவில் எனக்குப் பிடித்த பாடகி.  அவரது எளிமை வசீகரமானது.  ஒயின் அருந்திக் கொண்டே மிகத் தனிமையாகக் கேட்க அற்புதமான அனுபவம் தரும் பாடகி…   கொஞ்சம் நேரம் உங்கள் இசைக் கடவுளை மறந்து விட்டுக் கேட்டுப் பாருங்கள்…   இந்தப் பாடலின் பெயர் … Read more

மேலும் கொஞ்சம் மாயை…

சில மாதங்களாக தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்தில் 588-ஆவது சூத்திரத்தில் ஒரு சந்தேகம்.  மக்கள் தாமே ஆறறிவுயிரே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.  மனிதர்களைப் போல் இந்தப் பிரபஞ்சத்தில் வேறு யார் இருக்க முடியும் என்பதே சந்தேகம்.  ஒரு பேராசிரியரிடம் கேட்டேன்.  தெரியவில்லை.  அவர் என் எதிர் முகாமில் இருக்கும் பெண் கவிஞர்.  எனவே தெரிந்தும் தெரியவில்லை என்று சொல்லியிருக்கலாமோ என இன்னொரு சந்தேகம்.    அதற்கப்புறம் எக்ஸைலில் விழுந்தேன்.  இரண்டு தினங்கள் முன்பு  எக்ஸைலில் அந்த இடம் வந்ததும் சந்தேகத்தைத் … Read more

just illusions…

Pasha, Dublin, 10 Downing  எல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிடுகிறாற்போல் ஒரு பப் வந்துள்ளது.  ராதாகிருஷ்ணன் சாலையையும் மைலாப்பூரையும் இணைக்கும் சந்திப்பில் உள்ளது.  கடைசி கடைசியில் என் மைலாப்பூரிலேயே இப்படி ஒரு சொர்க்க பப் வந்தது ரொம்ப சந்தோஷமாக உள்ளது.  உள்ளே நுழைந்தால் ஏதோ கந்தர்வ லோகத்தில் நுழைந்தாற்போல் உள்ளது.  (ஆனால் நான் லிஃப்டில் மட்டும் ஏறுவதில்லை).  Illusions என்று பெயர். Queen of french pop என்று கருதப்படும் இந்த அழகியைக் கேட்கும் போதெல்லாம் எனக்கு Illusions … Read more

எக்ஸைல் பற்றி – குழலோன்

அன்புள்ள திரு.சாரு நிவேதிதா அவர்களுக்கு, குழலோன் எழுதிக்கொள்வது. உங்களின் இத்தனை ஆண்டு கால எழுத்துப் பணிக்கு மரியாதையும், பணிவும் செலுத்தி இக்கடிதத்தைத் (கட்டுரையைத்) துவங்குகிறேன். ****—-***— வடிவ ரீதியாகவும், தகவல் கூறுகளின் அடிப்படையிலும் அனுபவங்களைத் தெளிவாக சொல்ல முடியுமா? கடினமான மொழியினால் மட்டுமே ஒரு நிலப்பரப்பையோ அல்லது ஒரு மனித சமூகத்தையோ விரிவுபடுத்த வேண்டுமா? மேற்கண்ட இந்த இரண்டு கேள்விகளுக்கும் முறையே வரிசையாக “சொல்ல முடியும்” மற்றும் “அதன் மூலமாக மட்டுமே விரிவுபடுத்த வேண்டியதில்லை”என்று உங்களுடைய எக்சைல் பதில் சொல்லுகிறது. வடிவ நேர்த்தியில் … Read more

புதியவர்கள் (2)

சாரு ஆன்லைனை ரொம்பப் பேர் ஆர்வத்துடன் வாசிக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.  புதியவர்களை எழுதி முடித்த அரை மணி நேரத்தில் ஒரு கடிதம்.     ”நீங்கள் வராவிட்டாலும் அவந்திகா வீட்டைப் பூட்டி விட்டுக் கிளம்பலாமே?”  அட்ரா சக்கை.  தம்பி, நான் இரண்டு நாய்களை வளர்க்கிறேன்.   பப்பு, ஸோரோ.  இரண்டையும் வீட்டில் அப்படியே விட்டு விட்டு வீட்டைப் பூட்டி விட்டு அவந்திகா கிளம்ப மாட்டாள்.  நான் வந்தால்தான் கிளம்புவாள்.  நான் அப்படி இல்லை.  இரண்டையும் விட்டு விட்டுக் கிளம்புவேன்.  அதிக … Read more