புத்தகக் கண்காட்சியில் பேசுகிறேன்…

சென்னை நந்தனத்தில் நடக்கும் புத்தகக் கண்காட்சியில் 17.1.2014 அன்று )வெள்ளிக்கிழமை)  மாலை ஆறு மணியிலிருந்து ஏழு மணி வரை ஜீவா சிற்றரங்கத்தில் வாசகர்களுடன் கலந்துரையாடுகிறேன்.  வாசகர்களும், வாசகர் வட்ட நண்பர்களும் திரளாக வந்திருந்து சிறப்பிக்கும்படி அன்புடன் அழைக்கிறேன்.

ஆனந்த விகடன் பேட்டி

ஆனந்த விகடனில் இன்று என்னுடைய நேர்காணல் வெளியாகியுள்ளது.  என்னையும் என் பிரியத்துக்குரிய என் ஆருயிர் ஸோரோவையும் அழகான புகைப்படத்தில் காண்பித்ததற்கு விகடனுக்கு நன்றி.  பேட்டியில்  இரண்டு முக்கியமான விடுபடல்களை சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.  ஜெயலலிதா பற்றிய என் பதிலில் அவருடைய நிர்வாகம் நன்றாக உள்ளது;  ஆனால் ஊழலுக்குப் பழக்கப்பட்டு விட்ட அதிகார வர்க்கத்தையும், இலவசங்களுக்குப் பழக்கப்பட்டு விட்ட மக்களையும் ஒற்றை மனிதரால் மாற்றுவது கடினம்.  இலவசங்களை ஒழித்தால்தான் சீர்திருத்தம் பற்றி யோசிக்க முடியும் என்று குறிப்பிட்டிருந்தேன்.  ஆனால் … Read more

ஒரு முக்கியமான அறிவிப்பு

இன்று மதியம் ஒரு மணிக்கு சன் டிவியில் இன்றைய வாசிப்புப் பழக்கம் பற்றி ஒரு முக்கியமான பேட்டி அளித்திருக்கிறேன்.  சமீபத்தில் நான் அளித்த பேட்டிகளில் இதுவே எனக்கு மனநிறைவைத் தந்த பேட்டி ஆகும்.  இது பேட்டி என்பதை விட ஒரு உரையாடலாக அமைந்தது.  இதன் சிறப்புக்கு முழுக் காரணமும் சன் டிவி நெல்சனையே சாரும்.  தொடர்ந்து சொற்பொழிவு பாணியில் பேசுவதை விட கேள்விகள் கேட்பதன் மூலம் என்னிடம் உள்ள சிறப்பானதை நீங்கள் பெற்றுக் கொள்ள முடியும்.  இதைக் … Read more

புத்தகக் காட்சி

முந்தாநாள் புத்தகக் காட்சிக்கு திடீரென்று சென்றிருந்தேன்.  உயிர்மை ஸ்டாலில் ஒரு மணி நேரம் இருந்தேன்.  ரெண்டு பேருக்குக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தேன்.  பக்கத்தில் எஸ்.ராமகிருஷ்ணன் சுமார் ஐம்பது பேருக்கும், அராத்து சுமார் இருபது பேருக்கும் கையெழுத்துப் போட்டுக் கொண்டிருந்தார்கள்.  சந்தோஷமாக இருந்தது.  ஏன் என்றால் ஒருமுறை திருவனந்தபுரத்தில் Hey Literary Festival -இல் கலந்து கொள்ள அழைக்கப்பட்டிருந்தேன்.  அது ஒரு சர்வதேச விழா.  திருவனந்தபுரத்தில் எனக்கு ஒரு சினிமா நடிகருக்கு உரிய வரவேற்பு உண்டு.   என்னோடு புகைப்படம் … Read more

முகநூல் அடிமைகளுக்கு…

தொல்காப்பியரையும் திருமூலரையும் பல ஆண்டுகள் சென்று திரும்பவும்  வாசித்துக் கொண்டிருக்கிறேன்.  ஒரு பெண்ணுக்கு மாத விடாய் முடிந்து எத்தனை நாள் கழித்து உடலுறவு கொண்டால் கரு தரிக்கும் என்ற விபரத்தைக் கூட தொல்காப்பியர் எழுதியிருக்கிறார்.  பிரமிப்பாக உள்ளது.    திருமூலரின் கீழ்க்கண்ட பாடலைப் பாருங்கள்.  இதன் அர்த்தம் பற்றி யோசியுங்கள். அண்டம் எழுகோடி பிண்டம் எழுகோடி தெண்டிரை சூழ்ந்த திசைகள் எழுகோடி எண்டிசை சூழ்ந்த லிங்கம் எழுகோடி அண்ட நடஞ்செயும் ஆலயந் தானே