பூச்சி – 27

எதை எழுதுவது எதை விடுவது என்றே தெரியவில்லை.  என் அம்மா அசைவ உணவுப் பழக்கம் கொண்டவர்தான்.  எங்கள் வீட்டில் வாரம் மூன்று நாளாவது மீன் இருக்கும்.  நைனா காய்கறி வாங்கினதாக எனக்கு ஞாபகமே இல்லை.  ஊரில் அப்போது காய்கறிக் கடையும் இல்லை.  தெருவிலும் யாரும் காய் விற்றுக் கொண்டு போய் பார்த்ததில்லை.  முதல் விஷயம் ஐம்பதுகளில் நாகூரைப் போன்ற ஒரு சிற்றூரில் காய்கறியெல்லாம் கடைகளில் வாங்கக் கூடியது என்றே எங்களுக்குத் தெரியாது.  வீட்டுக் கொல்லையில் விளையும் காய்கறிகள்தான்.  … Read more

பூச்சி – 26

கணேஷுக்கான பதிலை எழுத இன்னும் ஆரம்பிக்கவே இல்லை. அதற்குள் பத்தரை ஆகி விட்டது. தூக்கம் கண்களைச் சுழற்றுகிறது. நாளை மதியத்துக்குள் இதன் தொடர்ச்சியை எழுதி விடுவேன். படியுங்கள்: மாட்டு இறைச்சியையோ பூனை நாய் உண்பவர்களையோ நான் கொடூரமானவர்களாக நினைக்கவில்லை.  எப்படி நாயை உண்கிறார்கள் என்ற பதற்றத்தையே நான் அப்படி வெளிப்படுத்தினேன்.  மீனும் நாயும் ஒன்று அல்ல.  மீனும் மாடும் ஒன்று அல்ல.  மீனும் யானையும் ஒன்று அல்ல.  மீனும் குதிரையும் ஒன்று அல்ல.  மீனும் ஒட்டகமும் ஒன்று … Read more

பூச்சி – 24

“எனக்கு சில சந்தேகங்கள் உள்ளன. உங்களது பார்வையில் எனது சந்தேகம் அபத்தமாகக்கூடத் தோன்றலாம். புரிதலுக்காக மட்டுமே கேட்கிறேன். மனிதன் இயற்கையை அழிக்கிறான் என்னும் உங்களது கருத்துடன் நூற்றுக்கு நூறு உடன்படுகிறேன். அந்த வருத்தமும் ஆற்றாமையும் எனக்கும் உண்டு. அதே சமயம் மாட்டு இறைச்சி உண்பவர்களையும், பூனை, நாய் உள்ளிட்டவற்றை உண்பவர்களையும் கொடூரமானவர்கள் போல சித்தரிப்பதை என்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் மாடுகளைக் கொடூரமாக கொல்கின்றார்கள் என்று குறிப்பிட்டிருந்தீர்கள். ஒரு உயிரைக் கொல்வதே கொடூரம்தான்! மனிதன் … Read more

பூச்சிக்கு இடையே ஓர் இடைச்செருகல்:

முகநூலில் பின்வருமாறு ஒரு உரையாடல்: கலை என்பதை அது தொடர்பான நிபுணர்கள் அதாவது கலைஞர்கள் தான் உருவாக்குகிறார்கள் என்று சொல்லப்படுகிறது. அப்படியானால் ஒவ்வொருவருடைய வாழ்வும் கலை இல்லையா?ஒரு வீடோ அல்லது ஒரு விளக்கோ கலைப் பொருளாகக் கருதப்படும்போது நமது வாழ்க்கை ஏன் கலை என அங்கீகரிக்கப்படவில்லை?” – மிஷேல் ஃபூக்கோ தமிழில்: ரவிக்குமார். தன்னிலையும் அதிகாரமும்: ( அராத்து: கலைக்கு கற்பனை தேவை. படைப்பூக்கம் இருக்கும். நம் அன்றாட வாழ்வில் என்ன பெரிய கற்பனையும் படைப்பூக்கம் இருக்கிறது. … Read more