பூச்சி – 23

அன்புள்ள சாரு, கொரானவுக்கு முன்பு வரை உங்களது எழுத்துக்களை மிகுந்த உற்சாகத்துடன் திறந்த மனநிலையுடன் படித்து வந்தேன்,ஆனால் இப்பொழுதெல்லாம் உங்களது எழுத்துக்களை உற்சாகமின்றி குற்ற உணர்ச்சியுடன் படிக்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன். மோடியையும் இந்துத்துவாவையும் எதிர்த்துக் கொண்டே மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ உங்களது எழுத்துக்கள் அவர்களுக்கு வலு சேர்க்கும் விதமாக இருப்பதாக எனக்கு தோன்றுகிறது. தப்லீக் ஜமாத் பற்றிய உங்களது அனைத்து கருத்துகளும் ஊடகங்களின் வாயிலாக நீங்கள் பெற்ற தகவலாகத்தான் நான் பார்க்கிறேன்.  நீங்கள் கண்ணை  மூடிக்கொண்டு இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக எழுத வேண்டும் என்றெல்லாம் நான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. உங்களுக்கு எது சரியெனப்படுகிறதோ அதை எழுதுங்கள்.  … Read more

பூச்சி – 22

நேற்றைய தொடர்ச்சி புஷ்கரமூலம் வால்மிளகு முர்வா என்று சம்ஸ்கிருதத்தில் உள்ளது.  பெருங்குரும்பை என்று மலையாளத்திலும் தமிழில் பஞ்சுக்கொடி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.  சரியாகத் தெரியவில்லை. வேப்பிலை முருங்கை விதை அதிமதுரம் வேப்பிலை விதை தண்ணீர் முட்டான் கிழங்கு மரமஞ்சள் சிவப்புச் சந்தனம் பத்மாகா சீமை தேவதாரு வெட்டிவேர் லவங்கம் மூவிலை ஓமம் அதிவிஷம் வில்வப் பட்டை கருப்பு மிளகு லவங்கப் பத்திரி நெல்லிக்காய் அமிர்தவல்லி என்று அழைக்கப்படுகின்ற சீந்தில் கடுகி சித்திரமூலம் காட்டுப்பேய்ப் புடலை சித்திரப்பாலாடை இப்படி நான் … Read more

பூச்சி – 21

தில்லியில் ஐம்பது பேருக்கு மேல் கூடக் கூடாது என்ற தடை உத்தரவு இருந்தும் அதைச் சிறிதும் பொருட்படுத்தாமல், எங்கள் இஷ்டப்படி இருப்போம் என்ற மனோபாவத்துடன் நடந்து கொண்ட தப்லிக் ஜமாத்தின் செயல்பாடுகளின் விளைவு இன்று தில்லியில் 1069 பேர் கொரோனா வைரஸ் தாக்கப்பட்டவர்கள் என்றால் அதில் 712 பேர் தப்லிக் ஜமாத்தில் கலந்து கொண்டவர்கள்.  கடந்த 24 மணி நேரத்தில் பாஸிடிவ் முடிவு வந்தவர்களில் 128 பேர் – அதாவது 77 சதவிகிதம் பேர் தப்லிக் மாநாட்டில் … Read more

பூச்சி 20

இந்த அரசியல்வாதிகளின் லூட்டி இந்தக் கொரோனா காலகட்டத்திலும் அடங்க மாட்டேன் என்கிறது.  ஒரு அரசியல்வாதி பர்த்டே கொண்டாடுகிறார்.  கூட்டம் அள்ளுகிறது.  ஆளுக்கு ஆள் அரசியல்வாதிக்குக் கேக் ஊட்டுகிறார்கள்.  ஆமாம், கலி முற்றி உலகம் அழியப் போகிறதா என்ன?  இந்த அளவுக்கு ஆட்டம் போடும் ஒரு அரசியல்வாதியைக் கூட கொரோனா தூக்கவில்லை.  ஆனால் அப்பாவி மருத்துவர்களையும் ஏழைபாழைகளையும் தாக்குகிறதே?  ஒரு லாஜிக்கும் இல்லையே?  இன்னொரு புரியாத விஷயம்.  நீங்கள்தான் எனக்குச் சொல்ல வேண்டும்.  அது ஏன், அமெரிக்கா, ஐரோப்பா, … Read more

பூச்சி 19

”நான் அந்தப் பள்ளிக்கூடத்தின் கடைசி வரியில், மேசைக்குக் கீழ் தலையை விட்டு ஒளிந்துகொண்டு காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கும் ஒரு மாணவன் என்பதால் இதைச் சிறப்பாக relate பண்ண முடிகிறது. முதல் பாதி சிரிப்பு வெடி. இரண்டாம் பாதி படு சென்சிபிள் பிட்ச். டோட்டலி சாரு ஸ்கிரிப்ட். எழுத்திலும், இலக்கிய ஆடுகளத்திலும் காணும் சாரு அல்ல அவர் நிஜத்தில். ரைட் ஒப்போசிட். படு ஜாலியான ஆள். ஆனால், அந்தப் பேச்சு மெசினை ஸ்டார்ட் செய்யும் சூட்சுமம் நமக்குத் தெரிந்திருக்க வேண்டும். … Read more

குருஜி : ராம்ஜி நரசிம்மன்

இன்று முகநூலில் ராம்ஜி நரசிம்மனின் கீழ்க்கண்ட பதிவைப் படித்தேன். இந்த குருஜியிடம் தான் பழகிய அனுபவங்களை இது போன்ற 300 சம்பவங்களைக் கொண்டு அவர் விவரித்திருக்கிறார். அதையெல்லாம் ஒரு நாவலாக எழுதலாம் என்று இருந்தேன், Source ராம்ஜி என்று போட்டு. ஆனால் தாமதப்படுத்தி விட்டேன் போல. ஆனால் போகிற போக்கைப் பார்த்தால் இப்போது ராம்ஜியே அந்த நாவலை எழுதி விடுவார் போல் தெரிகிறது.  ஒரே ஒரு விஷயம்.  வாழ்கை.  அது ஏன் என் நண்பர்களில் பலர் வாழ்கை … Read more