தமிழ் எழுத்தாளன் (7)

நான் தான் ஸீரோ டிகிரி எழுதிக் கொடுத்தேன் என்று சொன்ன ஒரு நபர் திடீரென்று அவர் இருந்த உயரத்திலிருந்து வீழ்ந்து, குடும்பத்தால் துரத்தப்பட்டு, அனாதையாகி, சோற்றுக்கே வழியில்லாமல் தெருத் தெருவாக அலைந்து என்னிடமே வந்து “ஒரு வேலை வாங்கித் தர முடியுமா?” என்று கேட்டார்.  அவர் யார் யாரைச் சார்ந்து இருந்தாரோ அவர்களால் கை விடப் பட்டு நடுத்தெருவுக்கு வந்தார். இதை Poetic justice என்று சொல்வார்கள். முற்பகல் செய்தால் பிற்பகல் விளையும்.  அவ்வளவுதான்.  நீங்கள் கடவுளை … Read more

தமிழ் எழுத்தாளன் (6)

சரி, இப்போது விட்ட இடத்தைப் பிடிப்போம்.  ஒடிஸாவில் புபனேஸ்வரில் ஒருநாள் மாலையில் நடந்த இலக்கியச் சந்திப்பு பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன்.  இன்னொரு விஷயம்.  நீங்கள் இந்தக் கட்டுரையை தமிழ் எழுத்தாளன் (1) இலிருந்து படித்தால்தான் தொடர்ச்சி புரியும். அந்தச் சந்திப்பு ஒரு ஐந்து நட்சத்திர விடுதியில் நடந்தது.  அங்கே குழுமியிருந்த நூறு பேரையும் அறிமுகப்படுத்திய சௌம்யா பட்நாய்க் தன்னை யார் என்று  அறிமுகப்படுத்திக் கொள்ளவில்லை.  பிறகுதான் தெரிந்தது, அவர் ஒடிஸாவில் மூன்று முறை முதல் மந்திரியாக இருந்த … Read more

தமிழ் எழுத்தாளன் (5)

திரும்பவும் லஜ்ஜையுடனும் கூச்சத்துடனும் வெட்கத்துடனும்தான் எழுதுகிறேன்.  ஒரு விபச்சாரி கூட ஓசியில் வேலை பார்க்க மாட்டாள்.  இந்த உலகத்தில் எல்லா வேலைகளுக்கும் கூலி இருக்கிறது.  ஆனால் தமிழ் எழுத்தாளனுக்கு மட்டும் கூலியே இல்லை.  வெத்து ஓலு நித்திரைக்குக் கேடு என்பார்கள் கிராமப்புறங்களில்.  இந்த ஓலு கீலு என்ற வார்த்தைகளைப் படித்து விட்டு சாரு ஆபாசமாக எழுதுகிறான் என்று சில அன்பர்கள் அலறுவார்கள்.  அவர்களெல்லாம் வேஷதாரிகள்.  தமிழருவி மணியனின் காந்தீய வேஷம் சன் டிவி நேரடி ஒளிபரப்பில் எப்படிக் … Read more

தமிழ் எழுத்தாளன் (4)

நான் முன்பு சென்று எழுதிக் கொண்டிருந்த சேமியர்ஸ் ரெஸ்டாரண்ட்டில் இப்போது கூட்டம் மிகுதியாகி டீக்கடை போல் ஆகி விட்டது.  அதனால் இப்போதெல்லாம் ஒயிட்ஸ் சாலையில் உள்ள Amethyst-க்குச் சென்று கொண்டிருக்கிறேன். ஐரோப்பிய நாடு ஒன்றின் உணவு விடுதியைப் போல் இருக்கும்.  ஒருநாள் பின்மாலை நேரத்தில் உத்தமத் தமிழ் எழுத்தாளர் ஒரு இயக்குனரோடு பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்தேன்.  பக்கத்தில்தான் அமர்ந்திருந்தேன்.  ஆனால் சுற்றி வர செடிகொடிகள் இருந்ததால் அவர் என்னை கவனிக்கவில்லை.  ஏதோ ஒரு படத்தில் எம்ஜியார் சிக்கனை … Read more

kai po che

ஏதோ ஸ்கூலுக்குப் போவது போல் இப்போதெல்லாம் தினம் ஒரு சினிமா பார்க்க வேண்டி வந்து விடுகிறது.  இந்தப் பணியில் சில ஆச்சரியங்களும் சில விபத்துகளும் நேர்ந்து விடுகின்றன.  ஸ்பெஷல் 26 என்று ஒரு படம்.  பார்த்து விட்டு காது மூக்கெல்லாம் புகை வர இயக்குனரிடம் வந்து “இப்படி ஒரு போரான படத்தைப் பார்த்ததே இல்லை” என்று சொன்னால் “இந்தியா பூராவும் இந்தப் படம் சூப்பர் ஹிட்” என்கிறார்.  பிறகு தான் விசாரித்தேன்.  இந்தியாவின் பல நகரங்களிலும் படம் … Read more