திருத்தம் செய்வது குறித்து…

செல்வா தனது முகநூல் பக்கத்தில் பின்வருமாறு எழுதியிருந்தார்.  அதைப் படியுங்கள்.  பிறகு நான் அது பற்றி எழுதுகிறேன்.    ஏன் இப்படி நடப்பதில்லை? புதியவர்கள், நாவல், சிறுகதை / கவிதை தொகுப்பு வெளியிடும் போது எழுதி முடித்த சூட்டோடு பதிப்பகத்தைத் தேடாமல் தான் சார்ந்த அல்லது நம்பும் இலக்கியவாதியை அணுகி, தன்னுடைய படைப்பைப் படிக்கக் கொடுத்து கருத்து கேட்டுவிடலாமே. கவிதையில் திருத்தங்கள் செய்வது சங்கடம்தான். ஆனால், நாவலில் திருத்தங்கள் சாத்தியம்தானே? தகுதியான விமர்சகர் அல்லது எடிட்டர் இல்லாத … Read more

படித்ததில் பிடித்தது

அர்விந்த் கேஜ்ரிவால் பற்றி நான் எழுதியிருந்தால் இப்படித்தான் எழுதியிருப்பேன்.  இந்தக் கட்டுரையில் உள்ள ஒவ்வொரு வார்த்தையையும் நான் ஆமோதிக்கிறேன்.  மோடி அல்ல, மோதி என்றும் பத்ரியின் கட்டுரையிலிருந்து தெரிந்து கொண்டேன்.  ஹிந்தியில் மோதி என்றே எழுதுகிறார்கள்… http://www.badriseshadri.in/2013/12/blog-post_24.html

அராத்து டிப்ஸ்…

அராத்துவின் மீது கேஸ் போடலாமா என்று இருக்கிறேன்.  நீங்கள் எதையாவது யாரிடமிருந்தாவது கற்றால் அதை அக்நாலட்ஜ் பண்ண வேண்டுமா இல்லையா?  அக்நாலட்ஜ் பண்ணாமல் எழுதியிருக்கிறார்.  அநியாயம்.  படித்துப் பாருங்கள். மனைவியிடம் மாட்டிக்கொள்ளாமல் கேர்ள் ஃபிரண்டு மெயிண்டெயின் செய்வது எப்படி ? (படிக்க ரொம்ப சிம்பிளாத்தான் இருக்கும் E=MC*2 போல ) அராத்து 1) நோ எஸ் எம் எஸ் 2) வீட்டில் இருக்கும்போது கால் செய்யவே கூடாது. இப்போ கால் பண்ணலாம் என கவுண்ட் டவுனை ஆரம்பிச்சிட்டு … Read more

மன்னிப்பு (9)

ஓநாய் குலச்சின்னம் நாவல் பற்றிய என் கட்டுரை ஏஷியன் ஏஜ்/டெக்கான் கிரானிக்கிள் தினசரிகளில் மே 2012-இல் வெளிவந்தது.  தமிழில் அந்த நாவல் இப்போதுதான் படிக்கக் கிடைத்திருக்கிறது.   மேலும், இப்படி ஒரு நாவலைத் தேர்வு செய்து படிக்கவும், அதைப் பற்றி எழுதவும் நான் அதற்கு முன் 20 நாவல்களையாவது படிக்க வேண்டியிருக்கிறது.  எதற்குச் சொல்கிறேன் என்றால், படிப்பு வாசனையே இல்லாத வாண்டுகள் எல்லாம் நமக்குப் பாடம் சொல்லிக் கொடுக்க முனைகிறார்கள்.  ஓநாய் குலச்சின்னத்திலும் இனவாதம் இருக்கிறது.  ஆனால் அது … Read more

மன்னிப்பு (8)

அராத்து எழுதியதைப் படித்து விட்டீர்களா?  இப்போது இது பற்றி நான் இன்னும் கொஞ்சம் சொல்ல வேண்டியிருக்கிறது.  ஆனால் ஒரு வருத்தமும் இருக்கிறது.  அராத்துவின் தற்கொலைக் குறுங்கதைகளுக்குத்தான் இப்படிப்பட்ட சர்ச்சை ஏற்பட வேண்டும் என்று நினைத்தேன்.  ஆனால் தகுதியில்லாத ஒரு புத்தகத்துக்கு அதிர்ஷ்டம் அடித்து விட்டது.  பரவாயில்லை.  எனக்கு உற்றமும் சுற்றமும் இலக்கியம்தான்.  உடன்பிறந்தவர்களோடு எந்தத் தொடர்பும் இல்லை.  சண்டையும் சரி, சமாதானமும் சரி, இலக்கியவாதிகளோடுதான்.  ஷோபா சக்தியின் பதிவில் நீங்கள் அதை ஓரளவு யூகித்திருக்கலாம்.  என் வீட்டில் … Read more