Necrophilia

பெயரைக் குறிப்பிட்டு எழுதினால் எல்லோரும் சண்டைக்கு வருகிறார்கள்.  நான் சொல்ல வந்ததன் அடிப்படையையே புரிந்து கொள்ளாமல் திட்டி எழுதி விட்டேன், திட்டி எழுதி விட்டேன் என்றே அழுது புலம்புகிறார்கள்.  பத்து வயசுப் பொடியனிலிருந்து என்னை விட வயது முதிர்ந்தோர் வரை அதே ரகம்தான்.  ஒரு இருபது வயதுப் பையன் என்னை ஆறு மாதம் கழித்துச் சந்திக்கிறான்.  முதல் வார்த்தை ”எப்டி இருக்கீங்க அங்கிள்” இல்லை.  ”என்னை என்னா திட்டி எழுதியிருக்கீங்க?” என்னுடைய ஒரு எழுத்தைக் கூட படித்ததில்லை.  … Read more

நிரகரிப்பும் தடையும் (9)

அராத்து 16.03.2020 தமிழ் இந்துவில் ராஜன் சாரு நிவேதிதாவைப்பற்றி எழுதியதைத் தொடர்ந்து நான் எழுதியது நேற்று வெளிவந்து இருந்தது. தமிழ் இந்துவுக்கு எழுதி அனுப்பியதற்குப்பின் அந்தக் கட்டுரையில் எனக்குத் தோன்றிய விஷயங்களை இன்னும் சேர்த்துக்கொண்டே போனேன். மொத்தத்தையும் இங்கே ஷேர் செய்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். நன்றி : தமிழ் இந்து ! ஒரு சடங்கு போல நானும் முதலிலேயே கூறி விடுகிறேன். தமிழ் இந்துவில் வந்த சாரு நிவேதிதாவைப் பற்றிய ராஜனின் கட்டுரை மிக முக்கியமான ஒன்று. … Read more

A file for Mr. A.K. Arumugam

நண்பர்களை என் வீட்டில் சந்திப்பதில்லை; அவர்களோடு என் வீட்டில் ஒரு வார்த்தை கூடப் பேசுவதில்லை; ஃபோனிலும் தொடர்பு கொள்வதில்லை என்பது நான் பின்பற்றும் கடும் விதி. இதை நான் மீறினால் என்ன ஆகும் என்று நண்பர் தக்ஷிணாமூர்த்தியோடு என் வீட்டில் கதைத்தது பற்றி நேற்று எழுதியிருந்தேன். உண்மையில் அது பற்றி ஐம்பது அறுபது எழுபது பக்கம் எழுதலாம். அவ்வளவு மெட்டீரியல் கொடுத்திருக்கிறார் மூர்த்தி. ஆனால் எந்தத் தவறும் மூர்த்தியின் மீது இல்லை. எனவே அவர் இங்கே வந்து … Read more

உணவும் ஃபாஸிஸமும்

இஸ்கான் அமைப்பு (The International Society for Krishna Consciousness)  பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும்.  தெரியவில்லையெனில் இணையத்தில் தேடிப் படித்துக் கொள்ளலாம்.  என்னுடைய மிக நெருங்கிய நண்பர்கள் சிலர் இஸ்கான் அமைப்பைச் சேர்ந்தவர்கள்.  மிக நெருங்கிய நண்பர்கள் என்றால், என் உயிருக்காகவும் என் வாழ்வுக்காகவும் நான் கடன்பட்டவர்கள் என்று பொருள்.  அவர்களோடு நான் இஸ்கான் பற்றி ஒருபோதும் விவாதித்ததில்லை.  விவாதிக்கப் போவதும் இல்லை.  பொதுவாகவே நெருக்கமான நண்பர்களோடு நான் முரண்படும் விஷயங்கள் பற்றி விவாதிப்பதில்லை என்ற பழக்கத்தை … Read more

தமிழ்

பூனைகளும் நானும் என்ற கட்டுரைக்கு சரியான எதிர்வினை இல்லை. என் நண்பரும் ஒளிப்பதிவாளருமான செழியன் இது ஒரு நாவல் மெட்டீரியல் மற்றும் சினிமா என்றார். அராத்துவும் அதையே சொன்னார். எனக்கும் அதேதான் தோன்றியது. மற்றபடி மாதாமாதம் நான்கு பேர் பூனை உணவு அனுப்புவார்கள். அதே நான்கு பேர் இந்த மாதமும் அனுப்பினார்கள். சமயங்களில் தோன்றும், ’இந்த வேலையெல்லாம் நமக்கு எதற்கு? எந்தப் பூனை எப்படிப் போனால் நமக்கு என்ன?’ என்று. ஆனால் இந்தத் தன்மானச் சிந்தனையெல்லாம் பூனைகளின் … Read more

குடியுரிமைச் சட்டமும், அதைத் தொடர்ந்த படுகொலைகளும்…

பல சமயங்களில் என் கருத்துக்கள் திரிக்கப்பட்டு புரிந்து கொள்ளப்படுகிறது. அதற்கு நான் ஒரு விளக்கம் கொடுக்கிறேன். ஆனாலும் அந்த விளக்கம் காற்றில் விடப்பட்டு என்னுடைய திரிக்கப்பட்ட கருத்தே நிலைபெற்று விடுகிறது. ஐந்து ஆண்டுகள் கடந்தும் கூட சாரு ஒரு எழுத்தாளனின் படுகொலையை நியாயப்படுத்தினார் என்று சக எழுத்தாளர்கள் தங்கள் நேர்காணல்களில் சொல்ல நேர்கிறது. பிறகு நான் அதற்கும் ஒரு விளக்கம் கொடுக்க நேர்கிறது. எப்படி? ஐந்து ஆண்டுகளுக்கு முன் சொன்ன விளக்கத்தையே. இப்படியே என் திரிக்கப்பட்ட கருத்தே … Read more