கோவை: வாசகர் சந்திப்பு

மாசாணி அம்மனை தர்ஸித்து விட்டு 19-ஆம் தேதி மாலை கோவை வருவேன்.  20 முழுவதும் கோவையில் இருப்பேன்.  அப்போது வாசக நண்பர்களை சந்திக்கலாம் என்று திட்டமிட்டிருக்கிறேன். charu.nivedita.india@gmail.com

மாசாணி அம்மன்

17, 18, 19 தேதிகளில் மாசாணி அம்மனை தர்ஸிக்க ஆனைமலை செல்ல இருக்கிறேன்.  அந்தத் தேதிகளில் பொள்ளாச்சியில் இருப்பேன்.  ஆனைமலையில் கி.பி. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு சமண குகை இருப்பதாகவும் அறிகிறேன்.  அங்கேயும் போக வேண்டும்.  ஆதலால்,  இந்தத் தேதிகளில் என்னால் நண்பர்களை சந்திக்க முடியாது என்று நினைக்கிறேன்.  அதனால்  20, 21 தேதிகளில் கோவையில் தங்கலாமா என்று யோசிக்கிறேன்.  21-ஆம் தேதி விமானத்தைப் பிடித்து சென்னைக்கு வந்து விடலாம் என்று திட்டமிடுகிறேன்…  கோவை நண்பர்கள் … Read more

50 writers; 50 books: the best of indian writing

Pradeep Sebastian மற்றும் Chandra Siddan இருவரும் தொகுத்த இந்தப் புத்தகம் harpers collins மூலம் வெளிவந்துள்ளது. லிங்க்: http://www.harpercollins.co.in/BookDetail.asp?Book_Code=3730 another link: http://pinterest.com/pin/277675133247623713/ இந்தத் தொகுப்பில் தமிழிலிருந்து ஸீரோ டிகிரியும் தேர்ந்தெடுக்கப்பட்டு அதைப் பற்றிய கட்டுரை ஒன்றும் வந்துள்ளது.  கொஞ்சம் நேரம் முன்பு பெங்களூரிலிருந்து நண்பர் தியோடர் பாஸ்கரன் என்னை போனில் அழைத்து இந்தச் செய்தியைச் சொன்னார்.  இந்த சந்தோஷத்தை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

ஞானம் (2)

நேற்று அவசரமாக எழுதியதில் சில விஷயங்கள் விடுபட்டு விட்டன. இன்னமும் இதை எழுதிக் கொண்டிருக்கும் போது கூட அந்த அதிர்ச்சியிலிருந்து நான் மீளவில்லை.  கோபிநாத்தின் புத்தகம் இரண்டு லட்சம் விற்கிறது.  என் புத்தகம் இருநூறு பிரதி விற்கிறது.  என்னடா உலகம் இது என்ற அதிர்ச்சி.  அதில் இந்த ஆன்மீகவாதிகள் செய்யும் அக்குறும்பு வேறு சகிக்கவில்லை.  தியான வகுப்பு முடிந்து வந்திருந்த நாற்பது பேருக்கும் கோபிநாத்தின் புத்தகத்தை அன்பளிப்பு கொடுக்கும் கொடுமை!  இந்த ஆன்மீகவாதிகள் எப்படி ஆன்மீகத்தைப் புரிந்து … Read more

மாசாணி அம்மன்

மே மாதம் 17, 18, 19 தேதிகளில் நான் பொள்ளாச்சியில் தங்கி இருப்பேன்.  ஆனைமலையில் உள்ள மாசாணிஅம்மனை தரிசிப்பதற்காகச் செல்கிறேன்.  என்னோடு வர விருப்பம் உள்ளவர்கள் என்னைச் சந்திக்க விருப்பம் உள்ளவர்கள் என்னைத் தொடர்பு கொள்ளலாம். charu.nivedita.india@gmail.com

ஞானம்

அன்புள்ள சாரு, உங்களுக்கு தமிழ்நாட்டில் / இந்தியாவில் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று புலம்புவதை நீங்கள் என்றைக்கு நிறுத்தப் போகிறீர்கள்? கிராமத்து சந்தையில் பொருள் விலை போகவில்லை என்றால் ஒரு வியாபாரி என்ன செய்வான்? எங்கே விலை கிடைக்குமோ அங்குதானே கொண்டுபோவான்? உங்கள் எழுத்து உங்களுக்கு சம்பாதித்து தரவேண்டுமானால் நீங்கள் அதற்கான இடத்தில் விற்பனை செய்ய ஏன் முயற்சிக்கவில்லை? இன்றைய தேதியில் சினிமாதான் அதற்கு தோதான இடம். உங்கள் புலம்பலும் தற்பெருமையும் சகிக்கவில்லை. உங்கள் எழுத்துலக தொடர்புகளை … Read more