பழுப்பு நிறப் பக்கங்கள்

பின்வரும் அறிவிப்பைப் போட்டு நாலைந்து நாள் ஆயிற்று. மூன்று பேர் பதில் எழுதியிருக்கிறார்கள். காலையில் நாகேஸ்வர ராவ் பூங்கா வாசலில் நின்று கொண்டு டெக்கான் க்ரானிக்கிளும், ஹிண்டுவும் இலவச பிரதி கொடுத்தால் தயங்காமல் வாங்கிக் கொள்கிறார்கள். பழுப்பு நிறப் பக்கங்கள் என்ற முக்கியமான தொகுதியை அனுப்புகிறேன்; அதை உங்கள் ஊர் நூலகத்தில் வையுங்கள் என்றால் மூணே பேர் பதில். என்ன நாடு ஐயா இது!!! *** ஒரு நண்பர் பழுப்பு நிறப் பக்கங்கள் தொகுதி மூன்றும் ஐம்பது … Read more

ஏ.ஆர். ரஹ்மான் விரும்பிக் கேட்ட என் பேச்சு

”இதனால்தான் நான் இந்து மதத்தை விரும்புகிறேன்” என்ற misleading-ஆன தலைப்பு இருந்ததால்தான் இந்த என்னுடைய பேச்சை இதுநாள் வரை உங்களிடம் நான் பகிர்ந்து கொள்ளவில்லை. இந்தப் பேச்சில் நான் வழக்கம்போல் சூஃபிகளைப் பற்றியும் இஸ்லாம் பற்றியும் பேசினேன். கூடவே இந்து மதத்தில் உள்ள கருத்துச் சுதந்திரம் பற்றியும் பேசினேன். அதை எடுத்துத் தலைப்பாகப் போட்டு விட்டதால் சற்று குழப்பம். இந்த என்னுடைய பேச்சை சுமார் இரண்டரை லட்சம் பேர் கேட்டிருக்கிறார்கள். இந்தப் பேச்சைக் கேட்டு விட்டுத்தான் ஏ.ஆர். … Read more

தேவையான நூல் பட்டியல்

சுமாராக ஒரு பத்து நண்பர்கள் எனக்கு அமெரிக்காவிலிருந்து புத்தகங்கள் வாங்கி அனுப்பி வருகிறார்கள். அவர்களின் புத்தக பட்ஜெட் தீர்ந்து விட்டதா இன்னும் இருக்கிறதா என்று தெரியாத நிலையில் இதை ப்ளாகிலேயே எழுதி விடுகிறேன். கீழ்க்கண்ட புத்தகங்கள் எனக்குத் தேவைப்படுகின்றன. உடனடியாக இவற்றை ஆர்டர் செய்து விடாமல் எனக்கு எழுதிக் கேட்டு விட்டு பிறகு ஆர்டர் செய்தல் நலம். ஏனென்றால், எழுதாமல் ஆர்டர் செய்தால் ஒரே புத்தகத்தை பலரும் ஆர்டர் செய்யக் கூடிய சாத்தியம் இருக்கிறது. அந்தோனியோ ஸ்கார்மேத்தா … Read more

கல்லூரி நூலகங்களில் பழுப்பு நிறப் பக்கங்கள்…

ஒரு நண்பர் பழுப்பு நிறப் பக்கங்கள் தொகுதி மூன்றும் ஐம்பது பிரதிகளுக்குப் பணம் தருவதாகச் சொன்னார். சுமாராக 50000 ரூ. ஆகும். ஐம்பது பிரதிகளையும் கல்லூரி நூலகங்களுக்கு அனுப்பினால் ஒரு பிரதியை குறைந்த பட்சம் பத்து மாணவராவது படிப்பார். இல்லையா? எந்தெந்த கல்லூரிகள் என்று வாசகர்கள் எனக்குப் பரிந்துரை செய்யலாம். எனக்கு இது பற்றி அதிகம் தெரியாது என்பதால் கேட்கிறேன். தனிநபர் படிப்பதை விட ஒரு நூலகத்தில் வைத்தால் பலரும் படிக்கலாம். நானெல்லாம் நூலகங்களால் உருவானவன் தான். … Read more

குட்பை மிஷ்கின்!

சைக்கோ making பிடித்திருந்தது. ஆனாலும் போலீஸை அவ்வளவு உபயோகமற்றவர்களாகக் காட்டியதை நம்ப முடியவில்லை. அது படத்தின் நம்பகத்தன்மையைக் கெடுத்தது. ஒரு மோப்ப நாயும் சிசிடிவியும் கொண்டு ஒன்றரை மணி நேரத்தில் பிடித்திருக்கக் கூடிய கொலையாளியை அவன் பல கொலைகள் செய்யும் வரை போலீஸால் பிடிக்கவே முடியவில்லை. படத்தில் நம்பகத்தன்மை இல்லாவிட்டால் படத்தோடு யாரும் ஒன்ற மாட்டார்கள். படம் படு தோல்வி அடைந்ததற்குக் காரணம் அதுதான். ஆனால் இது பற்றியெல்லாம் நான் எதுவும் எழுத விரும்பவில்லை.‘ஆனால் இன்றுதான் சில … Read more

பழுப்பு நிறப் பக்கங்கள் (தொடர்ச்சி)

எந்த விதத்தில் பழுப்பு நிறப் பக்கங்கள் முக்கியத்துவம் பெறுகிறது என்றால், இப்போது உங்களுக்குக் கிடைக்கும் ந. சிதம்பர சுப்ரமணியன், சி.சு. செல்லப்பா, க.நா.சு., தஞ்சை ப்ரகாஷ் போன்ற மூத்தவர்களின் புத்தகங்கள் எதுவும் பிழை திருத்தம் செய்யப்படாமல் வருகின்றன. சண்டைக்கு வராதீர்கள் பதிப்பக நண்பர்களே, பெரும்பாலான நூல்களைச் சொல்கிறேன். பிழை திருத்தம் செய்பவர்கள் தமிழில் இல்லை. இதுதான் எதார்த்தம். இதைப் பதிப்பகத்தினர்தான் செய்ய வேண்டும். தமிழ்ப் பேராசிரியர்களை நியமித்தால் அவர்கள் தி. ஜானகிராமனையும் செல்லப்பாவையும் க.நா.சு.வையும் கொன்று விடுவார்கள். … Read more