புத்தக விழா

நடுக்குப்பத்தில் உள்ள மீன் மார்க்கெட்டுக்கு இப்போதுதான் போய் வந்தேன்.  கடலில் மீன் பிடிக்க இந்த மாதம் தடை என்பதால் அவ்வளவாக மீன் வரத்து இல்லை.  இருந்தாலும் பப்பு, ஸோரோவுக்காக சுறா மீன் வாங்கி வந்தேன்.  அப்போது பக்கத்தில் புத்தகத் திருவிழா என்ற பேனரைப் பார்த்தேன்.  வீட்டுக்கு வந்ததும் ஒரு வேலையாக மனுஷ்ய புத்திரனை அழைத்தேன்.  அவரும் அந்தப் புத்தகத் திருவிழா பற்றி சொன்னார்.  அதனால் உயிர்மை ஸ்டாலுக்குப் போகலாம் என்று இருக்கிறேன்.  மாலை ஐந்து மணி அளவில் … Read more

அவமானம்

குருடர்களின் உலகில் ஒவியனாக இருப்பது பற்றி என் நாவல் எக்ஸைலில் எழுதியிருக்கிறேன். நான் எழுதுவது அப்படித்தான்.   தமிழில் எழுதுவது டயரியில் எழுதுவது போன்றது.  எக்ஸைல் நாவல் ஒரு லட்சம் பிரதிகள் விற்கும் என்று எதிர்பார்த்தேன்.  3000 விற்றது.  அப்போதுதான் ஆங்கிலத்தில் எழுதலாம் என்று முடிவு செய்தேன்.  தமிழ் என் தாய்.  தாயை உதறித் தள்ளலாம் என்று முடிவு செய்தேன்.  சுஜாதாவுக்குப் பிறகு சுஜாதாவைப் போல் சுவாரசியமாக எழுதும் ஒரே எழுத்தாளன் நான் தான்.  என் எழுத்தைப் … Read more

விலாசம் மாறி வந்த கடிதம்

திரு கமல்ஹாசன் மற்றும் மிஷ்கின் ஆகியோருக்குச் சென்றிருக்க வேண்டிய கடிதம் விலாசம் மாறி எனக்கு வந்து விட்டது.  கடிதம் எழுதியிருக்கும் நண்பர்  நிச்சயம் கமல் மற்றும் மிஷ்கினை நேரில் சந்தித்து இந்தக் கேள்விகளைக் கேட்க வேணுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.  கடிதமாக எழுதி விடாதீர்கள்.  எப்பாடுபட்டாவது அவர்களை நேரில் சந்தித்துக் கேளுங்கள்.  வண்ணக்கம் சாரு சார், எனக்கு உங்களை பற்றி எதுவுமே தெரியாது. உங்களை பற்றி ஜஸ்ட் கேள்வி பட்டுருக்கிறேன். “நாம் கோமாளிகளாக மாறவேண்டும்” என்ற தலைப்பில் … Read more

ஒரு இன்ப அதிர்ச்சி

பொதுவாக 011 என்று தொடங்கும் போன் அழைப்பு எதையும் நான் எடுப்பதில்லை.  தில்லியிலிருந்து ஏதாவது ஒரு கால் செண்டரிலிருந்து ஒரு பெண் “ஆர் யூ மிஸ்டர் ஆ…றீ… வா… ஸா… கா…” என்று நீட்டி முழக்குவதற்குள் நான் போனை கட் பண்ணி விடுவேன்.  தில்லிக்காரர்களுக்கு அறிவழகன் என்ற பெயரை உச்சரிப்பதற்குள் வேர்த்து விறுவிறுத்து விடும்.  அதனால்தான் நான் தில்லியில் உத்தியோகத்தில் இருந்த போது என் பெயரை ரவி என்று வைத்துக் கொண்டேன். நேற்று காலை தில்லியிலிருந்து ஒரு … Read more

நினைவின் தாழ்வாரங்கள்

கலாப்ரியா எழுதிய நினைவின் தாழ்வாரங்கள் என்ற அற்புதமான நூலுக்கு எனக்குப் பிடித்த கவிஞரான ஷங்கர் ராமசுப்ரமணியன் எழுதிய முன்னுரை இந்த இணைப்பில் உள்ளது.  முன்னுரையும் நூலைப் போலவே பிரமாதமாக இருந்தது.  இந்த நூல் பற்றி விரைவில் எழுதுவேன். http://azhiyasudargal.blogspot.in/2010/11/blog-post_23.html