சென்னை புத்தக விழா – 1

ராஸ லீலா கலெக்டிபிள் தயாராகி விட்டது. அதை புத்தக விழாவில் என்னிடம் வாங்கிக் கொள்ள விருப்பம் உள்ளவர்கள் எனக்கு மின்னஞ்சல் செய்யலாம். மற்றவர்களுக்கு என் கையெழுத்துடன் கொரியரில் அனுப்பி வைக்கப்படும். charu.nivedita.india@gmail.com 2. புத்தக விழாவுக்கு தினமும் வருவேன். சென்ற ஆண்டைப் போல் மதியம் மூன்று மணிக்கே வந்து வெட்டியாக மோட்டுவளையைப் பார்த்துக் கொண்டிருக்க விருப்பம் இல்லாததால் தினமும் மாலை ஐந்து மணிக்கே வரலாம் என்று இருக்கிறேன். எனவே என்னைச் சந்திக்க நினைப்பவர்கள் மாலை ஐந்து மணிக்கு … Read more

ஒரு உதவி

யு.எஸ்.ஸிலிருந்து சில நூல்களை சென்னைக்கு எடுத்து வர வேண்டும். வெய்ட் அதிகம் இருக்காது. மொத்தமே ரெண்டு கிலோதான் இருக்கும். சென்னை வந்ததும் ஃபோன் செய்தால் நண்பர்களை அனுப்பி வாங்கிக் கொள்வேன். அல்லது, கொரியர் செய்து விடலாம். யு.எஸ்.ஸிலிருந்து யாரும் இங்கே வருகிறீர்களா? எழுதவும். charu.nivedita.india@gmail.com

அடுத்த நூற்றாண்டின் கவிதை

இந்த நூற்றாண்டின் கவிதை என்பார்கள் இல்லையா, அதுபோல இது அடுத்த நூற்றாண்டின் கவிதை… 30)மேக் புக் ப்ரோ குப்பையான அறையில் அமர்ந்து நள்ளிரவில் எழுதிக்கொண்டு இருந்தேன். எங்கிருந்தோ ஓடி வந்த பூரான் ஒன்று மேக் புக் ப்ரோவின் பின் பதுங்கிக்கொண்டது. பூரான் தூங்கும் நேரம் பற்றி ஒருக்கணம் சிந்தித்தாலும், அதைக் கொல்ல முடிவு செய்தேன். அறையெங்கும் தேடினாலும், புத்தகத்தைத் தவிர வேறெதுவும் அடிக்க அகப்படவில்லை. ஒரு க்ளாஸிக் புத்தகத்தை எடுத்துக்கொண்டு மேக் புக் ப்ரோவின் பின்னால் வந்தேன். … Read more

Marat/Sade

U.S.இல் வசிக்கும் நண்பர்களுக்கு: The Persecution and Assassination of Jean-Paul Marat as Performed by the Inmates of the Asylum of Charenton Under the Direction of the Marquis de Sade என்ற தலைப்பில் ஒரு நாடகம் உள்ளது. இந்த நாடகத்தை யு.எஸ்.ஸில் பலமுறை அரங்கேற்றி உள்ளனர். அந்த நாடகம் அப்படியே படம் பிடிக்கப்பட்டு டிவிடியாகவும் கிடைக்கிறது. அந்த டிவிடியை யாரேனும் வாங்கி அனுப்ப இயலுமா? நீண்ட தலைப்பாக இருப்பதால் … Read more

ஒரு கேள்வியும் பதிலும்…

இன்று புத்தாண்டு என்பதே மறந்து போய் கொஞ்ச நேரத்துக்கு முன்புதான் ராம்ஜி இன்று ப்ரிண்ட் போட முடியாது, அந்த ஆஃபீஸ் விடுமுறை என்று சொன்னதால், இன்று என்ன விடுமுறையாயிருக்கும் என்று யோசித்து டக்கென்று புத்தாண்டு என்று புரிந்தது. காரணம், நேற்றிலிருந்து ராப்பகலாக ஒரு வேலையில் ஈடுபட்டிருக்கிறேன். என்னுடைய மிக முக்கியமான புத்தகங்களில் ஒன்று ஊரின் மிக அழகான பெண் என்ற மொழிபெயர்ப்புத் தொகுதி. தமிழில் இப்போது ஏகப்பட்ட மொழிபெயர்ப்பு நூல்கள் வந்து கொண்டிருக்கின்றன. அதற்கெல்லாம் 25 ஆண்டுகளுக்கு … Read more

உணவு என்ற மதம்

என்னுடைய எல்லா நண்பர்களையும் விட எனக்கு ஏன் அராத்துவைப் பிடிக்கிறது? என் வாழ்க்கைக்கு இப்போதைய நிலையில் பணம்தான் பிரதான தேவையாக இருக்கிறது. அதுவும் என்னுடைய அத்தியாவசியத் தேவை கருதி அல்ல. இரண்டு காரணங்களுக்காக எனக்குப் பணம் தேவைப்படுகிறது. ஒன்று, பயணம். இரண்டு, பூனை உணவு. என் அன்றாட வாழ்வை விட இந்த இரண்டு விஷயங்களும் எனக்கு முக்கியம் என்பதால் பணத்தின் முக்கியத்துவம் அதிகமாகிறது. ஆனால் அராத்து எனக்கு இதுவரை ஒரு பைசா கொடுத்ததில்லை. (அவரிடம் இல்லை; அதனால் … Read more