லெபனான்

லெபனான் அவர் மைலாப்பூர்வாசி.  மற்றொரு மைலாப்பூர்வாசியின் மூலம் 35 ஆண்டுகளுக்கு முன் அறிமுகம்.  தொலைக்காட்சி மூலம் அரசியலை அலசும் சமூக ஆர்வலர்.  அப்படிப்பட்ட ஆர்வலர்களுக்கெல்லாம் இவர் முன்னோடி.  மற்றபடி அவரைப் பற்றி எனக்கும் என்னைப் பற்றி அவருக்கும் எதுவும் தெரியாது.  முகம் தெரியும்.  பெயர் தெரியும்.  என்னிடம் கடந்த 15 ஆண்டுகளாக வீட்டில் தொலைக்காட்சி இல்லை.  தொலைக்காட்சி வந்த நாளிலிருந்தே அதைப் பார்த்ததும் இல்லை என்பதால் அவ்விஷயத்தில் நான் ஒரு பத்தொன்பதாம் நூற்றாண்டு ஆள்.  அதனால் சமூக … Read more

பிரார்த்தனை/தொழுகை

அன்புக்குரிய சாரு, முகநூலில் நீங்கள் விடுத்த அன்புக் கட்டளையை ஏற்று ‘தொழுகையின் அரசியல்’ வாசித்தேன். இறுதிப் பகுதியை வாசித்து முடிக்கும் வரை, இந்த படைப்பை ‘புனைகதை’ என்றே நான் நினைத்தேன். மொராக்கோவில் நடந்த உண்மைச் சம்பவம் என்ற தகவலை பின்குறிப்பில்தான் தெரிந்து கொண்டேன். சிறந்த வாசிப்பு அனுபவம் தந்த இந்தப் படைப்பின் சாரம் ‘தொழுகை’. “உங்களின் ‘தொழுகை’ உங்கள் ‘எழுத்து’ தான்” என்ற உணர்வு, இந்த படைப்பைப் படித்து முடித்தவுடன் எனக்கு ஏற்பட்டது. உடனடியாக நான் கண்ட … Read more

புத்தக விழா

நேற்று ஷார்ஜா புத்தக விழா சென்றேன்.  இது ஒரு சர்வதேசப் புத்தக விழா இல்லை.  மத்திய கிழக்கு நாடுகள், மக்ரிப் நாடுகள் மற்றும் கேரளம் தமிழ்நாடு மட்டுமே கலந்துகொள்ளும் விழா.  அதிலும் மக்ரிப் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில்தான் இன்றுபெருமளவில் இலக்கிய நூல்கள் எழுதப்படுகின்றன. அவை அனைத்தும் இந்தவிழாவில் கலந்து கொண்டும் மருந்துக்குக் கூட ஒரு ஆங்கில நூல் இல்லை.  அரபிநூல்கள் மட்டுமே உள்ளன.   தமிழ் அரங்கில் என் நூல்கள் வைக்கப்பட்டுள்ளன.  ஆனால் தமிழர் யாவரும் திருவள்ளுவர் மற்றும் வைரமுத்துநூல்களையே வாங்கினர்.  ஆனால் போட்டோ மட்டும் என்னுடன் எடுத்துக் கொண்டனர்.  நல்லவேளை, திருவள்ளுவர் வைரமுத்து நூல்களில் என் கையெழுத்து வாங்கவில்லை.  கேட்டிருந்தால் ஒரு கையெழுத்துக்கு200 திர்ஹாம் வாங்குவதாகப் பொய் சொல்லியிருப்பேன்.  

எதார்த்தம் 5

இளங்கோவனுக்கு என் எதிர்வினை டியர் இளங்கோவன் I can’t ask Ramjee or Gayathri to write to Ubud because zero degree publishing publishes a lot many writers and I never mix friendship with Literary affairs. 66 வயது வரை என்னை UBUD அமைப்பினர் அழைக்காததையே நான் அவமானமாகக் கருதும் போது – அதிலும் நானே விழா அமைப்பாளர்களுக்குக் கூச்சத்தை விட்டுக் கேட்டும் ஒரு பதிலும் வராத நிலையில் … Read more