அக்கப்போர் (திருத்தியது)

மா சே துங் நான் ஐம்பது புத்தகத்துக்கு மேல் எழுதியிருப்பதாக எழுதியிருக்கிறார். நான் எழுதிய நூல்களின் எண்ணிக்கை என்னிடம் இல்லை. ஆனால் எண்பதுக்கு மேல் இருக்கும். அவற்றில் அறுபது புத்தகங்கள் இப்போதும் கிடைக்கின்றன. எண்பதும் ஐம்பதுக்கு மேற்பட்ட எண்ணிக்கைதான் என்று அவர் சொல்ல மாட்டார் என்று நினைக்கிறேன். மேலும் கடந்த பத்து ஆண்டுகளாக நான் எழுதியவை எதுவுமே புத்தகமாகத் தொகுக்கப்படவில்லை. அதையும் வெளியிட்டால் இன்னும் இருபது புத்தகம் வரும். ஜெயமோகன், எஸ்.ரா. எல்லாம் முன்னூறு புத்தகங்கள் எழுதியிருப்பார்கள். … Read more

சிந்தனைத் துறையில் இந்தியா…

சிந்தனைத் துறையில் இந்தியா மிக மிகப் பின் தங்கிய நிலையில் இருப்பதற்குக் காரணம், கல்வித் துறை. எல்லோரும் பெரும் பணம் சம்பாதித்துத் தரக் கூடிய வேலைக்குத் தகுதியாக்கிக் கொள்கிறார்கள். மாதம் ஐந்து லட்சம் சம்பாதிக்கிறார்கள். ஆனால் அவர்கள் மாணவப் பருவத்தில் கார்ப்பொரேட் குருமார்களிடம் உரையாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்தியாவில் உள்ள அத்தனை elite கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களும் – உதாரணமாக, IIT, IIM – ஜக்கியை வரவழைத்து உரையாடுகிறார்கள். ஆன்மீகம் தேவையா என்று ஒரு மாணவன் கேட்கிறான். … Read more

புத்தகங்கள் தேவை…

எனக்குப் புத்தகங்கள் தேவைப்படும் போதெல்லாம் என் வாசக நண்பர்கள்தான் வாங்கி அனுப்புகிறார்கள். அதேபோல் சில புத்தகங்கள் இப்போது தேவைப்படுகின்றன. வாங்கி அனுப்பக் கூடியவர்கள் என்னைத் தொடர்பு கொண்டால் நலம். எழுதுங்கள்.charu.nivedita.india@gmail.com

லெபனான்

சென்ற ஆண்டு ஷார்ஜா புத்தக விழா என்னைப் பெரிதும் ஏமாற்றி விட்டது.  என்னிடம் சமகால அரபி எழுத்தாளர்கள் மிக அபூர்வமான நாவல்கள் உள்ளன.  இல்லாதவை பல.  அவர்களின் படைப்புகளைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.  உதாரணமாக, இப்ரஹீம் நஸ்ரல்லாவின் Prairies of Fever என்ற நாவல்.  நஸ்ரல்லா ஜோர்டானில் வசிக்கிறார்.  அரபு இலக்கியத்தின் பின்நவீனத்துவ அடையாளம் நஸ்ரல்லா.  இந்த நாவலை ஜோர்டான் அரங்கில் தேடினேன்.  அரபியில் இருந்தது.  ஆங்கிலத்தில் இல்லை.  இதேபோல் நான் தேடிய எழுத்தாளர்கள் ஐம்பது பேர் இருப்பார்கள்.  … Read more

Locked Up

லக்ஷ்மி சரவணகுமாரின் பரிந்துரையின் பேரில் Locked Up என்ற வெப்சீரீஸ் பார்த்துக் கொண்டிருக்கிறேன். முதல் சீஸனின் சஸ்பென்ஸ் தாங்க முடியாமல் நாலைந்து எபிசோடுகளுக்குப் பிறகு நேராக நாலாவது சீஸனுக்கு வந்து விட்டேன். எடிட்டிங்கில் பின்னியெடுத்திருக்கிறார்கள். இந்த அளவு சிறப்பான எடிட்டிங்கை நான் சினிமாவிலோ வேறு சீரீஸிலோ பார்த்ததில்லை. இதுதான் உச்சபட்சம். இம்மாதிரி எடிட்டிங்கை நான் ஸீரோ டிகிரியில் பயன்படுத்தியிருக்கிறேன். மரியோ பர்கஸ் யோசா அவரது Conversation in the Cathedral நாவலில் பயன்படுத்தியிருக்கிறார். இம்மாதிரி எடிட்டிங் மூலம் … Read more

சந்திப்பு

என் எழுத்தில் பரிச்சயம் உள்ளவர்களுக்குத் தெரியும், ஏற்கனவே சொன்ன உதாரணம் இது. மைலாப்பூர் டெலபோன் டைரக்டரி போடுகிறார்கள் அல்லது ஒவ்வொரு வீடாக ஒவ்வொரு மனிதருக்கும் ஆதார் கார்டு கொடுக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். மைலாப்பூரில் வசிக்கும் என் பெயர் மட்டும் டைரக்டரியில் இருக்காது. அல்லது, பக்கத்து வீட்டுக்காரனுக்கு ஆதார் கார்டு கொடுக்கப்படும். எதிர்வீட்டுக்காரனுக்குக் கொடுக்கப்படும். பின்வீட்டுக்காரனுக்கு கொடுக்கப்படும். என்னை விட்டு விடுவார்கள். டேய் தம்பி, நான் என்ன தீண்டத்தகாதவனாடா? இதே காரியத்தை நீயும் உன் சகாக்களும் சுமார் … Read more