(2)

விருந்தோம்பலில் கொங்கு நாட்டு மக்களுக்கு நிகராக யாருமே வர முடியாது என்பது என் அனுபவம்.  அதனால்தான் அடிக்கடி அங்கே சென்று கொண்டிருக்கிறேன். முதலில் ஈரோடு ஆடிட்டர் ரமேஷ்.  ஒரு குழந்தையைப் போல் பழகுவார். அராத்துவுக்குப் பிறகு, அன்பை செயலிலும் காட்டுபவர்.  பொள்ளாச்சிக்கு அருகில் கேரளா எல்லையில் ஆம்பராம்பாளையம் என்ற ஊர் உள்ளது.  இங்கே உள்ள Ambrra River Resort-இல் ஒரு நாள் தங்கினோம்.  ஒரு மாபெரும் தென்னை வனத்தின் நடுவே கட்டப்பட்டுள்ளது இந்த விடுதி.  அதைத் தோப்பு … Read more

ஒரு சிறிய பயணம் (1)

பயணம் முடிந்து சென்னை வந்து சேர்ந்து விட்டேன்.  ராமனாதபுரத்தில் டிமிட்ரியின் திருமணம் இனிதே முடிந்தது. தம்பதியர் தேன் நிலவுக்குக் கிளம்பியிருப்பார்கள் என்று நினைக்கிறேன்.  மதுரையில் என்னை கவனித்துக் கொண்டவர் பூர்ணசந்திரன்.  ராணி மங்கம்மாள் சத்திரத்தில் தங்கியிருந்தோம்.  நல்ல வசதியான இடம்.  பல நண்பர்கள் வந்து பார்த்தனர்.  இரவு நெடுநேரம் பேசிக் கொண்டிருந்தோம்.  மதுரையில் எனக்கு சபரீஸை விட கௌரி கங்கா உணவகம் தான் பிடித்திருந்தது.  முந்தின இரவு வெறும் பழங்கள்தான் சாப்பிட்டிருந்தேன்; அதுவும் ரொம்பக் கொஞ்சமாக என்பதால் … Read more

கடவுளின் முன்னே மனிதனின் கீழ்மை

’உத்தமத் தமிழ் எழுத்தாளர்’ சொல்லும் பொய்களுக்கும் செய்யும் ஏமாற்று வேலைகளுக்கும் அளவே இல்லாமல் போய் விட்டது.  இமயமலையைப் பார்த்த போது எங்கள் குழுவில் இருந்த அத்தனை பேரும் சொல்லையும் செயலையும் இழந்து கடவுளின் முன்னே நிற்பது போல் உணர்ந்தோம்.  நானோ அப்படியே சாஷ்டாங்கமாக விழுந்து விழுந்து கும்பிட்டேன். ஜிஸ்பா என்ற இடத்தில் சுமார் முப்பது குடும்பங்கள் இருந்தன.  அங்கேயும் மூச்சு விட சிரமம்தான்.  ஒரு பெண் என்னைப் பார்த்து எங்கிருந்து வருகிறீர்கள் என்று கேட்டார்.  உடனே பக்கத்திலிருந்த  … Read more

ஒரு சிறிய நடவடிக்கை

என் இயக்கத்தின் தளபதிகளாக இருக்கும் ராஜ ராஜேந்திரன் மற்றும் பிச்சைக்காரன் இருவரையும் சாரு நிவேதிதா வாசகர் வட்டத்திலிருந்து நீக்குகிறேன்.  அவர்கள் இருவரும் என்னைச் சந்திக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்…

எக்ஸைல் (புதிது)

எக்ஸைல் முடித்து விட்டேன்.  மொத்தம் 850 பக்கங்கள்.  ஒரு லட்சத்து அறுபதாயிரம் வார்த்தைகள்.  இன்னும் கடைசி அத்தியாயம் எழுத வேண்டும்.  அதை ஒரு பத்து பக்கங்களில் முடிப்பேன் என்று நினைக்கிறேன்.  எங்கேனும் ஒரு நதிக்கரையில்தான் அதை எழுத வேண்டும்.  இரண்டு நண்பர்களிடம் படிக்கக் கொடுக்க இருக்கிறேன்.  ஒருவர் எனக்குப் பிடித்த இலக்கியவாதி.  இன்னொருவர் இலக்கியவாதி என்று அடையாளத்தை வெறுக்கும் இலக்கியவாதி.  ராஸ லீலாவை விட நன்றாக வந்திருக்கிறது என்று நினைக்கிறேன்.  நண்பர்கள் இருவரும் தாங்கள் என்ன நினைத்தாலும் … Read more

இன்று ஒன்று நன்று : அராத்து

மோட்டார் விகடன் பத்திரிகையில் அராத்து ஒரு தொடர் எழுதி வருவது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம்.  அதே பத்திரிகையின் இன்று ஒன்று நன்று என்ற தொலைபேசிப் பேச்சு பகுதியில் அராத்து செப்டம்பர் மாதம் முழுவதும் தினமும் பேசுகிறார்.  044-66802916 என்ற எண்ணுக்கு டயல் செய்தால் அவர் பேச்சைக் கேட்கலாம்.  ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தலைப்பில் பேசுகிறார்.  எழுத்தில் தான் வளைத்துக் கட்டி அடிக்கிறார் என்றால் பேச்சிலுமா என்று நினைத்துக் கொண்டேன்.  நானெல்லாம் பேச்சில் ஏ.ஆர். ரஹ்மான் மாதிரி.  எல்லாப் புகழும் … Read more