ஊருக்கே சொந்தமானவன்…

எந்த ஆணுமே தன் மனைவிக்கு ஹீரோ அல்ல என்று ஒரு நண்பர் பார்க்கில் வைத்து சொன்னார். அதை ஒரு நண்பர் ஆமோதித்தார். எனக்கு அது பொருந்தாது என்றேன். அவந்திகா எனக்கு பல நிபந்தனைகளை விதித்திருந்தாலும் (குடிக்காதே, அராத்துவடன் சேராதே, இன்ன பிற) அவளுக்கு நான் ஹீரோ தான் என்று மனதில் நினைத்துக் கொண்டேன். நேற்று மாலை மீண்டும் கொடூரமாக ட்ரில்லிங் போட்டார்கள். ஐயோ, அவந்திகாவை பாதிக்குமே என்று நினைத்தே பதற்றத்தில் எனக்கு நெஞ்சு வலி வந்து விட்டது.  … Read more

நாகூர் நேஷனல் ஹை ஸ்கூல்…

செப்டம்பர் 5-ஆம் தேதி ஆசிரியர் தினமாம்.  அன்றைய தினம் காலை பத்து மணிக்கு நாகூர் நேஷனல் ஹைஸ்கூலில் 9, 10, 11, 12-ஆம் வகுப்பு மாணவர்களிடையே உரையாற்றுகிறேன்.  பழைய மாணவர் சந்திப்பு என்றுதான் பழைய மாணவர்கள் சொன்னார்கள்.  50 ஆண்டுக்குப் பிறகு சந்திக்கிறோம். ஆனால் நான் ஒரு எழுத்தாளன் என்பதால் மாணவர்களிடையே பேசுங்கள் என்றார்கள்.  வெறும் சினிமாவை மட்டுமே அறிந்த மாணவர்களிடையே என்ன நான் பேச முடியும்?  என்றாலும் யாரிடமாவது அந்தத் தீப்பொறி பற்றும் இல்லையா?  ஒருவரிடமாவது?  … Read more

மீண்டும் தடம் பற்றி…

கிட்டத்தட்ட நூறு பேரை முகநூலில் என் நட்பு வட்டத்திலிருந்து நீக்கினேன். யாருக்குமே நாம் பேசுவதன் பொருளை அறிந்து கொள்ளவோ, சொல்லின் உள்ளே செல்லவோ பொறுமை இல்லை. அவர்கள் என் எழுத்தைப் படித்துப் பயனில்லை என்று எல்லோரையும் நீக்கி விட்டேன். தடம் பற்றி நான் எழுதியிருந்ததன் பொருளே பலருக்கும் புரியவில்லை. முதியோர் இல்லம் மாதிரி பத்திரிகை நடத்தினா எவன்யா வாங்குவான் என்பது என் கேள்வி. உடனே எதிர்க் கேள்வி என்ன தெரியுமா? நடத்துபவர்களெல்லாம் இளைஞர்கள்; நீர்தான் வயசானவன். அடப்பாவிகளா! … Read more

தஞ்சை ப்ரகாஷ்: ஒரு கடிதமும் ஒரு சின்ன பதிலும்…

தமிழ்நாட்டில் வாழ வெட்கப்படுகிறேன், தமிழில் எழுதுவது காதில்லாதோர் உலகில் சங்கீதம் பாடுவது போல என்றெல்லாம் பலமுறை எழுதியிருக்கிறேன். ஆனால், புலி துரத்தி வரும் போது படுகுழியில் விழுந்து மரக்கிளையில் தொத்திக் கொண்டிருக்கும் ஒருவனின் வாயில் விழும் தேன் துளியைப் போல் இப்படியும் சில கடிதங்கள் வருகின்றன. என் அன்பு நண்பர் தக்ஷிணாமூர்த்தியின் கடிதம் பின்வருவது. தக்ஷிணாமூர்த்தி கார்ப்பெண்ட்டராகப் பணிபுரிகிறார். கடிதம்: சாரு சார்பவுன்ட்லெஸ் அண்ட் பேர் பத்தி ஏற்கனவே சொன்னிங்கன்னுட்டு ஸீரோ டிக்ரீ போய் தேடிட்டுஇருந்தேன் அப்ப … Read more

தஞ்சை ப்ரகாஷ்

என்னை ஆசிரியனாக நினைக்கும் வாசகர்களுக்கும் நண்பர்களுக்கும் இந்த வேண்டுகோள். அதேபோல் தஞ்சை ப்ரகாஷை மதிக்கும் மற்றவர்களும் இந்த வேண்டுகோளை செவி மடுக்கலாம்.  காரியத்தில் இறங்கலாம்.  எனக்காக இல்லாவிட்டாலும் தஞ்சை ப்ரகாஷுக்காக இதை நீங்கள் (அதாவது, லட்சுமி சரவணகுமார் போன்று தஞ்சை ப்ரகாஷை தமிழ் இலக்கியத்தில் முக்கியமாக நினைப்பவர்கள்). மற்றவர்கள் வெறுமனே படித்து விட்டுக் கடந்து விடலாம். தஞ்சை ப்ரகாஷ் பற்றி மிக விரிவாக என் பழுப்பு நிறப் பக்கங்களில் எழுதி இருக்கிறேன்.  அவரைச் சுற்றி பல இலக்கிய … Read more

மீண்டும் ஒரு கடிதம், ஒரு பதில்…

அன்புள்ள சாரு..இன்றைய இலக்கிய இதழ்களின் போதாமை குறித்தும் ஓர் இதழ் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்தும் மூத்த எழுத்தாளர்களை எப்படி இன்றைய தலைமுறைக்கு எடுத்து செல்ல வேண்டும் என்பது குறித்தும் அக்கறையுடன் ஆக்கப்பூர்வமாக தர்க்கரீதியாக நீங்கள் முன்வைத்த கருத்தை ஒரு இலக்கியவாதி தனக்கே உரிய அறியாமையுடன் துவேஷத்துடன் எள்ளி நகையாடியிருக்கிறார்கடந்த சில ஆண்டுகளில் வாசிப்பு பன்மடங்கு அதிகமாகியிருக்கிறது..  தமிழைப்பொருத்தவரை இதற்கு நீங்கள் ஒரு முக்கிய காரணம் என்பதை நீண்டகால இணையவாசிகள் அறிவார்கள்..இணையம் வெகுஜன பயன்பாட்டுக்கு வந்த … Read more