ஒரு கடிதம்…

அன்புள்ள சாரு…ஓஷோ ஒரு உதாரணம் சொல்கிறார்..இனிப்புக் கடைக்காரர் ஒருவருக்கு யார் மீதோ கோபம்.. கோபத்தில் தன் கடைசியில் இருந்த  இனிப்புகளை அவன் மீது எறிகிறார்.  அக்கம்பக்கத்தினருக்கு இனிப்புகள் கிடைக்கின்றன..  ஒரு சராசரி மனிதன் காட்டும் அன்புகூட பிறருக்கு இம்சைதான். ஆனால் படைப்பின் உச்சத்தில் இருப்பவனின் கோபம்கூட அவனது படைப்பாற்றலின் வெளிப்பாடு என்பதால் பிறருக்கு நன்மைதான் என்கிறார் அவர்..அதுபோல  ஒரு சம்பவத்திற்கான உங்கள் கோபமான எதிர்வினையால் “பிணந்தின்னிகளும் நட்சத்திரங்களிடமிருந்து செய்தி கொண்டு வந்தவர்களும் ”   என்ற மகத்தான சிறுகதை மீண்டும் … Read more

தடம் நின்றதில் ஆச்சரியமில்லை…

தடம் இதழ் நின்று போன விஷயத்தை நேற்று சாதனா செய்தியாக அனுப்பியிருந்தார்.  அதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை என்று பதில் அனுப்பினேன்.  இன்று காயத்ரி சொன்ன போது ரொம்ப நல்ல விஷயம், சந்தோஷமாக இருக்கிறது என்றேன். ஒரு இலக்கியவாதியான நான் அப்படிச் சொன்னது அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.  அந்த ஆச்சரியத்தை மட்டுப்படுத்துவதற்காக ஏதேதோ உளறி விட்டு உரையாடல் திசையை மாற்றி விட்டேன். உங்களுக்குத் தெரிந்திருக்கும், நான் தடம் இதழில் எதுவும் எழுதியதில்லை.  ஆரம்பத்தில் என்னுடைய ஒரு பேட்டி வந்ததோடு … Read more

பூனைகளும் நானும்…

அவந்திகாவுக்கும் எனக்கும் தங்கள் வீட்டில் இடம் கொடுத்துப் பராமரிக்க முன்வந்த அத்தனை அன்பு நெஞ்சங்களுக்கும் என் நன்றி. நன்றி என்ற உணர்வை நெகிழ்வான முறையில் வேறு எந்த வார்த்தைகளால் சொல்வது என்று தெரியவில்லை. இனிமேலும் ட்ரில்லிங் போட்டால் நேராக கமிஷனரிடம் போய்த்தான் புகார் கொடுப்பேன் என்கிறாள் அவந்திகா. வீட்டுக்கு வந்து விட்டோம். இன்னொரு விஷயம். சமீபத்தில் ஒரு கடையில் பூனைகளுக்கு சாப்பாடு வாங்கிக் கொண்டிருக்கும் போது அங்கே வந்த ஒருவர் எத்தனை பூனை என்றார். அப்படிக் கேட்டால் … Read more

Green Frontier

சீலே, பெரூ பயணக் கட்டுரைக்காக Frontera verde (Green Frontier) என்ற கொலம்பியன் வெப்சீரீஸ் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இது த்ரில்லர் வகை சீரீஸ் அல்ல; ஒரு பொழுதுபோக்கு சீரீஸ் அல்ல என்றாலும் த்ரில்லர் genreஇல் எடுக்கப்பட்ட படு சீரியஸான சீரீஸ். நோட்ஸ் எடுத்துக் கொண்டேதான் பார்க்க வேண்டியிருக்கிறது. சில சமயங்களில் பார்த்த எபிசோடையே திரும்பப் பார்க்க வேண்டியிருக்கிறது. டாக்யுமெண்ட்ரியாக நான் பார்த்த பல விஷயங்களை இதில் புனைவாகப் பார்க்கும் போது அது தரும் அனுபவமே வேறாக இருக்கிறது. … Read more