காஷ்மீர் (5)

ராணுவத்தோடு படுப்பதுதான் தேச பக்தியா என்று காஷ்மீர்ப் பெண் ஒருவர் கேட்டதை தலைப்புச் செய்தியாக சில பத்திரிகைகள் போட்டிருக்கின்றன. அந்தப் பெண்ணின் வலியையும் துயரத்தையும் புரிந்து கொண்டே இதை எழுதுகிறேன். ஒரு நிலப்பகுதிக்கு ராணுவம் ஏன் போகிறது? எல்லையைத் தாண்டி தினந்தோறும் தீவிரவாதிகளை அனுப்பிக் கொண்டே இருக்கிறது பாகிஸ்தான். படிப்பு இல்லாமல் பல காஷ்மீர் சிறார்கள் தீவிரவாதிகளாக ஆகிக் கொண்டே இருக்கிறார்கள். அல்லது, தீவிரவாத சிந்தனையோடுதான் வளர்கிறார்கள். இந்தியாவை அந்நியநாடு என்றே பார்க்கிறார்கள். காஷ்மீரும் மற்றொரு இந்திய மாநிலத்தைப் … Read more

சீலே

ச உலகின் மற்ற நாடுகளை விட தென்னமெரிக்க நாடுகளில்தான் எழுத்தாளர்கள் அதிக அளவில் கொண்டாடப்படுகிறார்கள்.  இதில் ஃப்ரான்ஸ் மட்டுமே விதிவிலக்கு என்று சொல்லலாம்.   மேலும், அந்தத் தென்னமெரிக்க நாடுகளிலேயே எழுத்தாளர்களைக் கொண்டாடுவதில் முன்னணியில் நிற்கும் நாடு சீலே.   சீலேயின் மகத்தான கவியாகக் கருதப்படுபவர்  Vicente Huidobro (1893 – 1948).  நம்முடைய பாரதி நவீன தமிழுக்கு என்ன செய்தாரோ அதையேதான் சீலேயின் கவிதைக்குச் செய்தார் விஸெந்த்தே.  மிகப் பெரும் பணக்காரக் குடும்பத்தில் பிறந்த விஸெந்த்தேயின் இளம் வயது … Read more

தொடர்பு கொள்ளவும்…

B. Swaminathan, Gokul (Ambalur) ஆகிய இருவரின் போன் நம்பரோ மின்னஞ்சல் முகவரியோ எனக்குத் தெரியாததால் இங்கே எழுதுகிறேன். அவர்கள் தயவுசெய்து என்னைத் தொடர்பு கொள்ளவும். charu.nivedita.india@gmail.com

அரசனாக வாழ்தல்… – பிச்சைக்காரன்

என் அன்பு நண்பர் பிச்சைக்காரன் சற்று நேரம் முன்பு எனக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில் உள்ள விஷயத்தை ரொம்பப் பெருமைக்குரிய ஒன்றாக பலரும் என்னிடம் வியந்து சொல்வதுண்டு. எனக்கோ, ”எல்லோருமே இப்படித்தானே இருக்க வேண்டும்? இதில் சிறப்பாகச் சொல்ல என்ன இருக்கிறது?” என்று தோன்றும். அந்தக் கடிதத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். மேலும், இதெல்லாம் மிகவும் அபூர்வமான குணமாக இல்லாமல் ’எல்லோருமே இப்படித்தானே, இதில் என்னய்யா பெரிய வெங்காயத்தைக் கண்டீர்?’ என்று பிச்சைக்காரனைக் கடிந்துரைக்கும் … Read more