அராத்து : அத்தனைக்கும் ஆசைப்படு!

நீங்கள் ஏன் ட்விட்டரில் நுழைந்து ட்வீட்டுகளைப் போடக் கூடாது என்று என்னிடம் அடிக்கடி கேட்டுக் கொண்டிருப்பார் அராத்து.  எனக்கு அந்த ஆசை இல்லை என்பேன்.  ஏனென்றால், என் நாவலில் வரப் போகும் வாக்கியங்களை எடுத்து நான் ட்விட்டருக்கு தானமாக அளிக்கக் கூடாது.    இந்த நிலையில் அராத்து ட்விட்டரில் கலக்கிக் கொண்டிருக்கிறார்.  அவருடைய ட்வீட்டுகளையெல்லாம் ஏன் புத்தகமாகத் தொகுத்துப் போடக் கூடாது என்று அவரிடம் நான் அடிக்கடி கேட்டுக் கொண்டிருப்பேன்.  அதன்படி இப்போது அராத்துவின் ட்வீட்டுகள் புத்தகமாக … Read more

சிலே

மார்ச் 10 இலிருந்து 17 வரை Valparaiso நகரில் இருப்பேன்.  பாப்லோ நெரூதாவின் ஊர்.  ஸந்த்தியாகோவும் பயணத் திட்டத்தில் உண்டு.  யாரேனும் நண்பர்கள் சிலேயில் இருந்தால் என்னைத் தொடர்பு கொள்ளவும்.  அல்லது, உங்கள் நண்பர்கள் இருந்தாலும் அறிமுகப்படுத்தலாம்.   மலேஷிய நண்பர் முஸ்தஃபாவுடன் தான் செல்வதால் நல்ல வசதியான ஓட்டலில்தான் தங்குவேன்.  இருந்தாலும் சிலேவில் இருப்பவர்கள் தெரிந்தால் வால்பராய்ஸோவிலிருந்து ஃபால்க்லேண்ட் தீவுக்கு எப்படிச் செல்லலாம் என்பது போன்ற ஓரிரு விபரங்களைக் கேட்டுக் கொள்ளலாம். இன்னொரு விஷயம்.  கோணல் பக்கங்களை … Read more

நரேந்திர மோடி

இதை நான் நீண்ட நாட்களாக எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இதைப் படிக்கும் உங்களுக்கு சிறிது அதிர்ச்சியாகக் கூட இருக்கலாம்.  ஆனால் என்னைப் பொறுத்தவரை, இன்று இந்தியாவின் மிகப் பெரிய பிரச்சினை ஊழல்தான்.  மற்ற நாடுகளை ஒப்பிடும் போது இந்தியா மத்திய காலத்தில் ஒரு கொடுங்கோல் மன்னனின் ஆட்சியில் இருப்பது போலவே இருக்கிறது.  சரியான சாலைகள் இல்லை; தண்ணீர் இல்லை; மின்சாரம் இல்லை; கல்வி இல்லை; மருத்துவம் இல்லை.  அரசியல்வாதிகள் கோடிக் கணக்கில் ஊழல் செய்வதால் … Read more

நாங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறோம்?

Amazon மூலம் kindle edition ஆக ஆங்கிலத்தில் வெளிவந்துள்ள என்னுடைய சிறுகதைத் தொகுதி Morgue Keeper-இன் மொழிபெயர்ப்பு படு மோசம் என்பதாக ஒரு அன்பர் எழுதியிருக்கிறார்.  இதை நான் விமர்சனமாக, ஒரு அபிப்பிராயமாக எடுத்துக் கொள்ள முடியாது.  ஏனென்றால், morgue keeper கதை ப்ரீதம் சக்ரவர்த்தியால் மொழிபெயர்க்கப்பட்டு தெஹல்காவில் வெளிவந்தது.  அதுவும் தெஹல்காவின் சிறப்பு மலரில்.  மொழி நன்றாக இல்லாவிட்டால் தெஹல்காவில் வரும் சாத்தியம் இல்லை.  திர்லோக்புரி கதையும் ப்ரீதம் சக்ரவர்த்தியால்தான் மொழிபெயர்க்கப்பட்டது.  அவர்தான் ஸீரோ டிகிரியையும் … Read more

ஸ்ரீவில்லிப்புத்தூர் (2)

பால்கோவா என்றால் எனக்கு ரொம்ப இஷ்டம்.  ஆனால் இப்போது அவ்வளவாக இனிப்புப் பண்டங்களின் மீது ஆர்வம் போய் விட்டது, ஒரே ஒரு இனிப்பைத் தவிர.  மற்ற இடங்களில் பால்கோவாவை திரட்டுப் பால் என்கிறார்கள்.  எங்கள் ஊரில் மாடு கன்று ஈய்ந்து முதல் இரண்டு மூன்று தினங்களில் கறக்கும் பாலில் செய்வது மட்டுமே திரட்டுப் பால்.  மற்றதெல்லாம் பால்கோவா தான்.  அந்தத் திரட்டுப் பாலை அமிர்தம் என்றே சொல்லலாம்.  ஈடு இணை இல்லாத ஒரு பண்டம் அது. கிழக்கு … Read more