சன் டிவி விவாத மேடையில் அடியேன்

இன்றைய தினம் இரவு ஒன்பது மணிக்கு விவாத மேடை என்ற நேரடி ஒளிபரப்பில் கலந்து கொள்கிறேன்.  தலைப்பு புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் தேவையா?

இனிதே ஆகுக…

கடந்த ஆண்டு எனக்கு அதிக சந்தோஷத்தைக் கொடுப்பதாக இருந்தது.  ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் கலந்து கொண்டேன்.  அதில் கலந்து கொண்டதால்தான் லண்டன், மற்றும் இந்தியா முழுவதும் வெளிவரும் deccan chronicle, asian age பத்திரிகைகளில் column எழுத வாய்ப்புக் கிடைத்தது.  ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் கலந்து கொண்டது அகில இந்தியாவிலும் கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரம்.    கடந்த ஆண்டுதான் Diabolically Yours என்ற பேய்க்கதை எழுதினேன்.  Joyce Carol Oates போன்ற உலகப் புகழ் பெற்ற … Read more

அன்பும் சமாதானமும் பெருக…

நான் ஒருவரைப் புண்படுத்தி விட்டேன் என்று தெரிந்தால் அவரிடம் நேரடியாக மன்னிப்புக் கேட்டு விடுவேன்.  உங்களில் எத்தனை பேர் அப்படி இருக்கிறீர்கள்?  உங்களிடமே கேட்டுக் கொள்ளுங்கள்.  பலரிடம் அந்த குணம் இல்லாததை கவனித்திருக்கிறேன்.  நாம் செய்தது தவறு என்று தெரிந்தும் வருத்தம் தெரிவிக்காத பலரை நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.  வருத்தம் தெரிவித்தால் அந்தத் தவறின் பலு நம்மை விட்டு அகன்று விடும் என்பதை நான் அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன்.  இன்னொரு முறை இன்னொரு சந்தர்ப்பத்தில் அந்தத் தவறை செய்யாத … Read more

நண்பர்கள் (2)

எனக்கு மட்டும்தான் இப்படி நடக்கிறது.  ஒரு முறை அல்ல; பல முறை.  சி மேட்டர் என்ற தலைப்பில் ராஸ லீலாவில் இருக்கும்.  அதுவும் தவிர பல நண்பர்கள்.  ”நீங்கள் ஏன் வறுமையில் உழல வேண்டும்?  மாதம் ஒரு கல்லூரியில் உரையாற்றுங்கள்.  25000 ரூ.  கை மேல் வரும்.  நான் ஏற்பாடு செய்கிறேன்” என்றார் ஒரு நண்பர்.  அது பற்றி தினமும் போன் செய்தார்.  மணிக் கணக்கில் பேசினார்.  என் வாழ்வில் மூன்று மாதம் வீண் ஆயிற்று.  இடுப்புக்குக் … Read more

நண்பர்கள்…

ஒவ்வொரு ஞாயிறு அன்றும் காலை பத்தரை மணிக்கு நான் பார்த்த சினிமா என்ற தலைப்பில் அரை மணி நேரம் நான் பேசுவது ஒளிபரப்பாவது உங்களுக்குத் தெரிந்திருக்கும்.  என்னிடம் தொலைக்காட்சிப் பெட்டி இல்லாததால் நான் அதைப் பார்க்க முடிவதில்லை.  இருந்தாலும் நண்பர் செல்வகுமார் அந்த நிகழ்ச்சியை பதிவு செய்து யூட்யூபில் வெளியிட்டு வருகிறார்.  நான் இந்த நிகழ்ச்சிக்காக மிகுந்த பிரயாசை எடுத்துக் கொள்கிறேன்.  ஏனென்றால், சினிமா துறை பற்றி ஆர்வம் உள்ளவர்களுக்கு என் உரைகள் பாடமாக இருக்கும்.  இந்த … Read more

யாருக்காக எழுதுகிறேன்?

ஒரு கலந்துரையாடலில் கலந்து கொண்டு விட்டு வெளியே வந்தேன்.  கலந்துரையாடல் நடந்த போது அந்தக் கூட்டத்தில் நான் ஒரு அந்நியனாகவே உணர்ந்தேன்.  அங்கிருந்த எல்லோருமே எழுத்தாளர்கள்.  ஆனால் அவர்கள் பேசியவை எல்லாமே ஏதோ பாரதிராஜாவின் படத்தில் வரும் பாடல் காட்சியில் வரும் ஹீரோவைப் போன்ற மன உணர்ச்சியோடு தங்கள் ஊரைப் பற்றியும் உறவுகள் பற்றியும் ரொமாண்டிக்காக ஏதேதோ பேசிக் கொண்டிருந்தனர்.  அவர்கள் சொன்ன ஊர்களெல்லாம் வெறும் குப்பைக் காடுகள்.  அந்த ஊர்களின் பஸ் ஸ்டாண்டில் ஒரு நிமிடம் … Read more