சாரு நிவேதிதா வாசகர்வட்டம் நடத்தும் சாரு நிவேதிதா படைப்புகள் – கட்டுரைப்போட்டி

வாசகர்கள் கவனத்திற்கு, உங்களை மிகக் கவர்ந்த சாருவின் புத்தகம், நாவல், கட்டுரை அல்லது வலைப்பதிவில் அவர் எழுதிய கட்டுரை ஏதேனும் ஒன்றை மையமாக வைத்து உங்கள் கருத்துக்களை எழுத வாருங்கள். இதை பேஸ்புக்கில் அல்லது பிளாக்கில் செய்கிறீர்கள் என்றாலும்… இப்போது புதிதாக, இதை ஒரு போட்டியாக அல்லது முக்கிய நிகழ்வில் பங்கேற்பதாக கருதி செய்யலாம். என்ன முக்கிய நிகழ்வு என்றால்….. தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் தொகுப்பாக அச்சில் வரும்.  முதல் மூன்று தேர்வுகளுக்கு பரிசுகள் உண்டு.  பரிசுகள் தாண்டியும் … Read more

Happy Christmas…

இன்றைய தினம் முகநூலில் பல நல்ல எழுத்துக்களைப் படித்தேன்.  அதில் ஒன்று பிச்சைக்காரனுடையது…  கீழே: காயத்ரி என்ற சிறுமியை அவர்கள் வீட்டுக்கு செல்கையில் பார்ப்பேன்…  நன்கு பழகுவாள்…புத்திசாலிப்பெண்… நான் காயத்ரி என அழைப்பேன்.. அவளது அப்பாவும் அம்மாவும் அவளை டிங்கு என ஏனோ வேறு பெயரில் அழைப்பார்கள்.. ஒரு நாள் ஏதோ ஒரு காரணத்தால் அவளை மிக மிக பிடித்து இருந்தது… என் மேல் அக்கறை எடுத்து ஏதோ செய்தாள் … அன்பாக பேசினாள்..என் எல்லா அன்பையும் … Read more

ஜனவரி 4, தற்கொலைக் குறுங்கதைகள் வெளியீட்டு விழா

அன்பு நண்பர்களுக்கு, ஓர் வேண்டுகோள்.  ஜனவரி 4-ஆம் தேதி சென்னை  தி. நகரில் உள்ள ஸர் பிட்டி தியாகராயா ஹாலில் மாலை ஆறு மணி அளவில் நடக்க இருக்கும் புத்தக வெளியீட்டு விழாவுக்காக நம் வாசகர் வட்டத்தைச் சேர்ந்த நண்பர்கள் தீயாக வேலை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.  அராத்துவின் தற்கொலைக் குறுங்கதைகள் மற்றும் அராஜகம் 1000 ஆகிய இரண்டு புத்தகங்கள் வெளியிடப்பட இருக்கின்றன.  அரங்கத்தின் கொள்ளளவு 800.  ஓரளவு 700 பேராவது வந்தால்தான் 70 … Read more

திருத்தம் செய்வது குறித்து…

செல்வா தனது முகநூல் பக்கத்தில் பின்வருமாறு எழுதியிருந்தார்.  அதைப் படியுங்கள்.  பிறகு நான் அது பற்றி எழுதுகிறேன்.    ஏன் இப்படி நடப்பதில்லை? புதியவர்கள், நாவல், சிறுகதை / கவிதை தொகுப்பு வெளியிடும் போது எழுதி முடித்த சூட்டோடு பதிப்பகத்தைத் தேடாமல் தான் சார்ந்த அல்லது நம்பும் இலக்கியவாதியை அணுகி, தன்னுடைய படைப்பைப் படிக்கக் கொடுத்து கருத்து கேட்டுவிடலாமே. கவிதையில் திருத்தங்கள் செய்வது சங்கடம்தான். ஆனால், நாவலில் திருத்தங்கள் சாத்தியம்தானே? தகுதியான விமர்சகர் அல்லது எடிட்டர் இல்லாத … Read more

படித்ததில் பிடித்தது

அர்விந்த் கேஜ்ரிவால் பற்றி நான் எழுதியிருந்தால் இப்படித்தான் எழுதியிருப்பேன்.  இந்தக் கட்டுரையில் உள்ள ஒவ்வொரு வார்த்தையையும் நான் ஆமோதிக்கிறேன்.  மோடி அல்ல, மோதி என்றும் பத்ரியின் கட்டுரையிலிருந்து தெரிந்து கொண்டேன்.  ஹிந்தியில் மோதி என்றே எழுதுகிறார்கள்… http://www.badriseshadri.in/2013/12/blog-post_24.html