பெரூ – பொலிவியா – சீலே (பயணக் குறிப்புகள் – 2)

<a href=”https://www.tripadvisor.in/LocationPhotos-g295425-Vina_del_Mar_Valparaiso_Region.html#385808748″><img alt=”” src=”https://media-cdn.tripadvisor.com/media/photo-s/16/fe/f9/6c/passeio-bacana.jpg”/></a><br/>This photo of Vina del Mar is courtesy of TripAdvisor மேலே உள்ள இணைப்பில் காணும் ஊர் வீஞா தெல் மார் (Viña del Mar).  Vineyard of the sea என்று பொருள்.  இந்த ஊர் வால்பரைஸோ நகரின் உப நகராக உள்ளது.  வால்பரைஸோவிலிருந்து நான்கு கிலோமீட்டர்.  இரண்டு நகர்களுமே கடற்கரை நகரங்கள்.  சீலே செல்பவர்கள் வால்பரைஸோ செல்லாமல் வர மாட்டார்கள். பாப்லோ நெரூதாவின் ஊர்.   வால்பரைஸோவின் மற்றொரு … Read more

கண்ணதாசன் விழா

கோவை கண்ணதாசன் கழகத்தின் கண்ணதாசன் விருது அடியேனுக்கும் பாடகர் ஜெயச்சந்திரனுக்கும் வழங்கப்பட உள்ள செய்தியை முன்பே உங்களிடம் பகிர்ந்திருந்தேன். விழா வரும் 16-ஆம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) கோவையில் மாலை ஆறேகால் மணிக்கு நடைபெறும். அழைப்பிதழை இங்கே இணைத்திருக்கிறேன். அனைவரையும் விழாவில் கலந்து கொள்ள அழைக்கிறேன். விழா நடக்கும் இடம்: சரோஜினி நடராஜ் கலையரங்கம், கிக்கானி மேல்நிலைப்பள்ளி, கோவை

தமிழ்நாடு வெட்கித் தலைகுனிய வேண்டும்…

இந்தியாவில் வசிப்பதன் அவலம் பற்றிய என் புகார்களையும் கதறல்களையும் அலறல்களையும் அவ்வப்போது என் எழுத்தில் நீங்கள் படித்துப் படித்து சலித்திருக்கலாம்.  ஏன் இந்த ஆள் இப்படிப் புலம்புகிறார் என்று நீங்கள் அலுத்துக் கொண்டு கூட இருக்கலாம். ஜெயமோகன் இன்று மதியமே எனக்காக கோவை வந்து விடுவதாக எனக்கு மெஸேஜ் செய்திருந்தார். இன்று இரவு அவரோடு பேசலாம் என்று நினைத்திருந்தேன்.  ஜெயமோகனோடு நான் சாவகாசமாக அளவளாவியதே இல்லை. நாளை விழாவுக்கு இன்று மதியமே வந்து விடுவதாகச் சொல்லியிருந்தார்.  அதற்கு … Read more

சரியான உச்சரிப்பு

உங்களிடம் ஒரு விஷயம் சொல்லியாக வேண்டுமென்று நினைக்கிறேன். தவறிருப்பின் மன்னிக்கவும். உங்களின் எழுத்தில் நான் பல வருடங்களாக கவனித்து வருவது தான். ஒரு வெளி நகரத்தின் பெயரையோ அல்லது ஒரு வெளி ஆளின் பெயரையோ குறிப்பிடும்போது அதில் அவ்வளவு சிரத்தை எடுத்து அந்தந்த மொழி உச்சரிப்புக்கு ஏற்றவாறு கவனம் எடுத்து எழுதுவீர்களென எனக்குத் தெரியும். ஆனால், ஓரான் பாமுக் விஷயத்தில் அவரின் பெயரை எழுதும் விதத்தில் பிழை விடுகிறீர்களோ என எனக்குத் தோன்றுகிறது. ORHAN PAMUK. இதில் … Read more

ஆங்கிலக் கடிதங்கள்

எனக்கு ஆங்கிலத்தில் கடிதம் எழுதும் பெரும்பாலான நண்பர்கள்/வாசகர்கள் அப்படி ஆங்கிலத்தில் எழுதுவதற்காக மிகவும் குற்றவுணர்ச்சி கொண்டு மன்னிப்புக் கோருகிறார்கள்.  அப்படி அவர்கள் ஆங்கிலத்தில் எழுதுவதற்குக் காரணம், தமிழில் தட்டச்சு செய்து அவர்களுக்குப் பழக்கம் இல்லை; அவர்களது மடிக் கணினியில் அதற்கான வசதி இல்லை (சீக்கிரம் அந்த வசதியை ஏற்படுத்துக் கொண்டு விடுகிறேன்; அது வரை பொறுத்துக் கொள்ளுங்கள் சாரு).  இதையெல்லாம் பார்க்கும் போது அவர்கள் ஆங்கிலத்தில் கடிதம் எழுதுவதற்காக நான் கோபம் கொள்ளுவேனோ என்று அவர்கள் நினைப்பது … Read more