எக்ஸைல்

எக்ஸைல் சாருவை ஒருவர் ஏற்கலாம், நிராகரிக்கலாம். ஆனால் நிச்சயம் புறக்கணிக்க முடியாது. 30 ஆண்டுகளில் தொடர்ந்து இலக்கியவாதியாக, கருத்தியலாளராக சாரு முன்வைக்கும் கருத்துகள் ஒவ்வொன்றும் தீவிரமானவை. சமூகத்தின் ஒடுக்கப்பட்ட மனச்சாட்சியின் குரலாக ஓர் எழுத்தாளன் தொடர்ந்து இயங்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துபவை. பொதுப்புத்தியில் உறைந்துகிடக்கும் மனோபாவத்தை எதிர்க்கும் குரலாக சாருவின் எழுத்து ஒலிக்கத் தொடங்கும்போதே அதனை ஒட்டியும் வெட்டியும் விவாதம் ஒன்று தொடங்கிவிடுகிறது. இது தமிழ் எழுத்துலகுக்கும் சமூகத்துக்கும் தேவையான ஒன்று. அந்த வகையில் சாரு இலக்கியவாதிகளால் … Read more

ஜனவரி 4

ஜனவரி 4-ஆம் தேதி தியாகராய நகரில் உள்ள ஸர் பிட்டி தியாகராயா ஹாலில் அராத்து எழுதிய தற்கொலைக் குறுங்கதைகள் என்ற நாவல் வெளியீட்டு விழா நடக்க உள்ளது. மாலை ஆறு மணி. கலந்து கொள்வோர், மதன், மனுஷ்ய புத்திரன், சாரு நிவேதிதா, கௌதம் வாசுதேவ் மேனன், இயக்குனர் வசந்த், நீயா நானா ஆண்டனி. த்ரிஷாவிடம் கேட்டிருக்கிறோம். இன்னும் முடிவு தெரியவில்லை. எல்லோரும் பெரும் திரளாகக் கலந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்… அன்றைய தினம் நான் தற்காலத் தமிழ் … Read more

ஒரு விவாதம் (2)

ஒரு விவாதம் என்ற பகுதியைப் படித்து விட்டு இதைப் படிக்கவும்.  இது பற்றி இரண்டு முக்கியமான கடிதங்கள் வந்துள்ளன.  கடிதங்களைப் படியுங்கள்.  பிறகு நான் எழுதுகிறேன். Dear Charu, I had a thought to your question in the latest blog about Zero Degree’ I tried to write in Tamil; but found it was too difficult to translate. I strongly object to the ‘stance’ … Read more

ரஜினி பற்றி…

இன்றைய தி இந்து தமிழ் நாளிதழில் ரஜினி காந்த் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன்.  பார்க்கவும். நியூஸ் சைரன் என்ற புதிய பத்திரிகையில் ஒரு பத்தி எழுதத் தொடங்கியிருக்கிறேன்.  ஒரே ஒரு பக்கம்.  கடைசிப் பக்கம்.  ஒருமுறை சுஜாதா குமுதத்தில் ஒரே ஒரு பக்கம் எழுதினார்.  அது கூட சுவாரசியமாக இருந்தது.  அதனால் ஒரு பக்கத்தில் எழுத ஒப்புக் கொண்டேன். ஒவ்வொரு வியாழக் கிழமையும் சைரன் பத்திரிகை கடையில் கிடைக்கும்.  அறிமுகத்துக்காக லிங்க் தருகிறேன்.  நீங்கள் பத்திரிகையையே … Read more

ஒரு விவாதம்

ஸீரோ டிகிரியோ அல்லது என்னுடைய வேறு எந்த நாவல்களோ சரியாக வாசிக்கப்பட்டு விவாதிக்கப்படவில்லை என்பது என் கருத்து. ஸீரோ டிகிரியின் 40-ஆவது பக்கத்தில் இப்படி வருகிறது: Colostrum – குழந்தை பிறந்த சில தினங்களில் தாயின் முலைகளிலிருந்து வரும் மஞ்சள் நிறத் திரவம் contains lot of proteins and vitamins.  It has antibodies against many common diseases especially those that the mother has had earlier.  சிசுக்கள் தாமாகவே இந்த … Read more

கேள்வி பதில்

அன்புள்ள சாருவுக்கு, தமிழ் இலக்கியத்தின் எதிர்காலம் என்று நீங்கள் ஒரு தொடர் எழுதியதால் இதை உங்கள் கவனத்துக்கு கொண்டுவருகிறேன். சமிபத்தில், உங்களுடன் மிக பண்பாக உரையாடிய காந்தியவாதி தமிழருவி மணியனுக்கு இலக்கியச் சிந்தனை விருது கிடைத்தது. இது அவர் ஆனந்த விகடனில் எழுதிய முதல் சிறுகதைக்கு கிடைத்த விருது. முதல் என்ற வார்த்தையை கவனிக்கவும். இதை முத்திரை சிறுகதையாக தேர்ந்தெடுத்தவர் அண்ணாச்சி வண்ணதாசன். அந்த கதையை நான் படித்தேன். நீங்கள் உங்கள் தளத்தில் வெளியிட்ட ”மாற்றம்” சிறுகதையைவிட … Read more