2014-இல் எழுதிய ஒரு சிறிய குறிப்பு

ராஸ லீலா பிழைதிருத்தம் போய்க் கொண்டிருக்கிறது.  ஒரு இடத்தில் வகங்களும் என்று இருந்தது.  அதை வனங்களும் என்று மாற்றினேன்.  இருந்தாலும் ஒரு சம்சயம்.  நெட்டில் தேடலாம் என்று அந்தப் பத்தியின் ஆரம்பமான ஜோதியும் புவியும் எத்தனை விசாலமாயுள்ளனவோ என்று தட்டச்சு செய்தேன்.  பின்வரும் சிறிய குறிப்பு சாருஆன்லைனில் 2014-இல் எழுதியிருந்தது வந்தது.  கடவுளே, இனிமேலாவது என் எழுத்தைத் திரும்பவும் பிழைதிருத்தம் செய்யாமலிருக்க அருள் பாலிக்க வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொண்டேன்.  பின்வரும் குறிப்பு சாருஆன்லைனில் நவம்பர் 2, … Read more

ராஸ லீலா – முன்பதிவு செய்தவர்கள்

ராஸ லீலா முன்பதிவுத் திட்டம் சூடு பிடிக்க ஆரம்பித்து விட்டது.  மே 15 வரை விருப்பமுள்ளவர்கள் பத்தாயிரம் ரூபாய் பணம் அனுப்பி பதிவு செய்து கொள்ளலாம்.  அவர்கள் என்னோடு எடுத்துக் கொள்ளும் புகைப்படம் புத்தகத்தின் பின்னட்டையில் வெளிவரும்.  அவர்களின் பெயர் புத்தகத்தின் முதல் பக்கத்தில் அச்சிடப்பட்டிருக்கும்.  குமரேசன், செல்வகுமார், கருப்பசாமி, ஸ்ரீராம், அருணாசலம், ஸ்ரீதர்-கஜலட்சுமி, கணேஷ் அன்பு போன்ற நண்பர்கள் முன்பதிவு செய்திருக்கிறார்கள்.  செல்வா தன் குடும்பத்தோடு புகைப்படம் எடுத்துக் கொள்ள இருக்கிறார்.  கணேஷை சென்ற வாரம்தான் … Read more

கொச்சபாம்பா, உயூனி

சீலே பயணம் என்ற சென்ற கட்டுரையில் ஒரு சிறிய திருத்தம் சொன்னார் நண்பர்: நண்பரையும் அவர் தோழியையும் தோழியின் சகோதரரையும் திருடர்கள் மறித்த இடம் மருதமலை சாலை இல்லை.  வடவள்ளி – தொண்டாமுத்தூர் சாலை.  சம்பவம் நடந்த இடத்துக்கு எதிரே சின்மயா பள்ளி இருக்கிறது.  இன்னொரு பிழையை ராஜேஷ் சுட்டிக் காண்பித்தார்.  தென்னாஃப்ரிக்கா என்பதற்கு பதிலாக தென்னமெரிக்கா என்று எழுதி விட்டேன்.  பிழையின் காரணத்தை நீங்களே யூகித்துக் கொள்ளலாம்.   தென்னாஃப்ரிக்காவில் சம்பவம் நடந்த ஊர் ஜோஹன்னஸ்பர்க்.  *** … Read more

சீலே பயணம்

கண்ணதாசன் கழகத்தின் பரிசளிப்பு விழா ஜூன் 16 தான் நடைபெறுகிறது. கோவையில். செப்டம்பர் என்று வந்திருப்பது அச்சுப் பிழை. அநேகமாக ஜூன் இறுதியில் சீலே, பெரூ, பொலிவியா மூன்று நாடுகளுக்கும் பயணப்படுகிறேன். அமெரிக்க வீசா இல்லாததால் ஒவ்வொரு நாடாக வீசா வாங்க வேண்டும். அமெரிக்க விசா இருந்திருந்தால் இந்த நாடுகளில் வீசா ஆன் அரைவலில் போயிருக்கலாம். வீசா கிடைக்காமல் போனதுக்கு முழுமுதற் காரணம் என்னுடைய ட்ராவல் கம்பெனிதான். அவர்கள் என்னுடைய பேங்க் ஸ்டேட்மெண்ட்டையே விண்ணப்பத்துடன் அனுப்பவில்லை. அதனால் … Read more

தமிழில் சுயசரித்திரங்கள் – சாகித்ய அகாதமி நிகழ்ச்சியில் அடியேனின் பேச்சு

1964-இல் உங்கள் வயது என்ன?  அநேகமாகப் பிறந்தே இருக்க மாட்டீர்கள்.  அந்த ஆண்டு வந்ததுதான் சா. கந்தசாமி எழுதிய சாயாவனம் நாவல்.  வெளிவந்த போது அதிகம் பேசப்பட்டிருந்தாலும் அதற்குப் பிறகு அந்த நாவலைப் பற்றிய பேச்சே இல்லை.  சா. கந்தசாமி சாகித்ய அகாதமி உட்பட பல இலக்கியப் பரிசுகளைப் பெற்றிருந்தாலும் கருணாநிதி குடும்பத்துக்கு நெருக்கமானவர் என்றாலும் அவர் பிராமணர் அல்லாதவர் என்பதால் பிராமண எஸ்டாப்ளிஷ்மெண்ட் அவரைக் கண்டுகொள்ளவில்லை.  என்னுடைய இந்த அபிப்பிராயம் தவறாகவும் இருக்கலாம்.  ஆனால் கந்தசாமியையும், … Read more

ஒரு விளக்கம்

மதிப்பிற்குரிய………முதலில் தங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.நான் உங்களை எழுத்தாளரே என்று கூறியது தங்களை காயப்படுத்தி இருந்தால். உங்களை அப்படி அழைப்பதில் எனக்கொரு ஆத்ம த்ருப்தி. நடிகர் துறவி போன்றோர் வரிசையில் உங்களை நான் வைக்க எனக்கு இஷ்டமில்லை.ஒரு மன்னனை புலவரை நெருக்கமான நண்பனை எப்படி அழைப்போமோ அப்படி அழைக்கத்துணிந்தேன்.ஶ்ரீலங்கா விஷயத்தில் டிவி,பேப்பரில் வரும் விஷயங்களை நம்ப நான் தயாராக இல்லை. அது நம்பத்தகுந்தது இல்லை என்பது என்கருத்து.நான் முழுக்கநம்புவது தங்களை போன்ற முதிர்ந்த அதே சமயத்தில் யாரிடமும் சமரசம் … Read more