அற்புதம்… ஆனந்தம்… கடவுளின் உரையாடல்…

http://www.youtube.com/watch?v=6jxsnIRpy2E இமயமலை புகைப்படங்களை வாசகர் வட்டத்தில் பதிவு செய்து கொண்டிருந்த போது நான் எப்போதோ எழுதியதை எடுத்து வட்டத்தில் போட்டிருந்தார்  செல்வகுமார்.  வட்டத்தை ஆக்கபூர்வமாகக் கொண்டு செல்பவர்களில் அவர் ஒருவர்.  எனக்கே இது புதிதாக இருந்தது.  இமயத்தைப் பார்க்கும் போதெல்லாம் பரிபூர்ணமாக என் ஆன்மாவில் ஒரு வித இசை ஓடிக் கொண்டிருந்தது. தருண் தேஜ்பாலில் valley of masks என்ற நாவலை அப்போது படித்துக் கொண்டிருந்தேன்.  இப்போது சொல்கிறேன்.  குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.  அந்த நாவலுக்கு Asian … Read more

இமயம் (11)

சில புகைப்படங்கள் மட்டும் இப்போது.  இவை பற்றி நாளை எழுதுகிறேன்.  புகைப்படங்கள்: கணேஷ்.இதில் கூடாரங்கள் இருக்கும் இடம் பற்றி மட்டும் சொல்லி விடுகிறேன்.  இது தான் லஹௌல் பகுதியின் மரண வெளி.  இங்கே ஒரு இரவு தங்கினால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை.  நாங்கள் இங்கே ஒரு இரவும் ஒரு பகலும் தங்கினோம்.

Thanks, Nirmal…

கரூரில்என்னைசந்தித்தநிர்மல்கருவாடும் absynthe –உம்கொடுத்தார்.  எப்படிஇருந்ததுஎன்றுஎழுதியிருக்கவேண்டும். நான்இதுபோன்றவிஷயங்களில்கொஞ்சம்சோம்பேறி. அவரேஎழுதிக்கேட்டிருந்தார்.  கருவாடுஅட்டகாசம்.  ரொம்பஅருமையாகஇருந்தது.  நெத்திலிக் கருவாடு.  அதிலும் அவந்திகாவின் கருவாட்டுக் குழம்பு போல் நான் எங்குமே சாப்பிட்டதில்லை. Absinthe:  சாமி லக்ஸம்பர்கிலிருந்து வாங்கிக் கொண்டு வந்து கொடுத்த அனிஸை போன வாரம் ஒருநாள் சாப்பிட்டேன்.  இமயமலையில் சாப்பிட்டது போக மூணே மூணு ரவுண்டு தான் மிச்சம் இருந்தது.  அனிஸ் என்றால் ஜீரகம்.  அனிஸ் மது ஜீரகத்திலிருந்து தயாரிப்பது.  ஃபிரஞ்சுக்காரர்கள் சாப்பிடுவது.  மற்றபடி உலகில் அனிஸ் அருந்துபவர்களை விரல் விட்டு எண்ணி … Read more

மைய நீரோட்டமும் மாற்றுச் சிந்தனையும்…

சாரு, நெடு நாட்களுக்கு முன்பு உங்களுக்கு மின் கடிதம் எழுதவேண்டுமென்ற ஆசை .ஏதோ ஒரு காரணத்தால் அது தள்ளிப் போய்க்கொண்டு வந்தது .திடீரென்று ஒரு நாள் நீங்கள் உங்களின் சில கதைகளைப் படிக்காவிடில் தொடர்பு கொள்ளவேண்டாம் எனக் கூறி விட்டீர்கள் .ஆகையால் அதை அப்படியே விட்டுவிட்டேன் .ஏனெனில் நேரம் ஒழிய மாட்டேன் என்கிறது .நாவல் படிப்பதை சில மாதங்களாக நிறுத்திவிட்டேன் .உங்களின் கட்டுரைகளை ,மற்ற சிறந்த உலகச் சிறுகதைகள் மட்டும் படிப்பேன். மீதி நேரம் இசைக்கு அளிக்கிறேன். … Read more

இமயம் (9)

தினசரிகள் படிப்பதில்லை.  தொலைக்காட்சியும் இல்லை.  காலையில் வாக்கிங் சென்று வருவதோடு வெளியுலகத் தொடர்புக்கு முற்றுப் புள்ளி.  அதுவும் மழை பெய்தால் அறையிலேயே எட்டுப் போடுவதோடு சரி. எட்டுப் போடுவது என்றால் என்ன என்று பிறகு எழுதுகிறேன். இப்போதைக்கு எக்ஸைல் வேலையில் முழுமூச்சாக இருக்கிறேன்.  எக்ஸைலை திருத்தி எழுதும் வேலை இன்னும் முடியவில்லை.  ஆனால் கிட்டத்தட்ட முடிந்து விட்ட நிலை.  இதற்காக நிறைய ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது.  காமரூப கதைகள் காலத்து களப்பணி அல்ல.  இது வேறு.  ஒரு … Read more