ஓர் முன் மன்னிப்பு…

”அவர் பெயரை என் வாழ்நாள் முழுதும் உச்சரிக்க மாட்டேன்” என்று சொன்னவர் ஜெயமோகன்.  “அவர்” என்று அந்த வாக்கியத்தில் குறிக்கப்படுபவர், அடியேன்.  ஜெயமோகனுக்கும் எனக்குமான ‘நட்பு’ தமிழ் இலக்கிய உலகம் நன்கு அறிந்ததே. எனக்கு ஜெயமோகன் மீது எவ்வித காழ்ப்புணர்ச்சியும் கிடையாது.  எங்களுக்குள் மட்டும் அல்ல, எல்லா இலக்கியவாதிகளுக்குள்ளும் இடையிலான முரண்பாடுகள், சண்டைகள், கோபதாபங்கள் அனைத்துமே இலக்கியம், தத்துவம், அழகியல் பற்றிய ஒவ்வொருவருக்கும் இருக்கும் மதிப்பீடுகளின் மோதல் என்றே புரிந்து கொள்ள வேண்டும்.  இல்லாவிட்டால் ஜெயமோகனுக்கும் எனக்கும் … Read more

விவாதம்

அந்திமழையில் நான் எழுதியிருந்தது பற்றி மனுஷ்ய புத்திரன் எழுப்பியுள்ள கேள்விகள் மிகவும் முக்கியமானவை.  இப்போது அவர் எழுதிய அந்நிய நிலத்தின் பெண்ணைப் படித்துக் கொண்டிருப்பதால் பதில் எழுத நேரம் இல்லை.  முடித்ததும் எழுதுவேன். Manush: பிராமணர்கள் உடல் உழைப்பில் ஈடுபடுவதில்லை என்று ஒரு தவறான கருத்து வேறு சமூகத்தில் நிலவுகிறது. கோவில்களில் பணி புரியும் அர்ச்சகர்களின் நிலை வயலில் நின்று வேலை பார்க்கும் குடியானவர்களின் நிலையை விட மோசமானது. நாள் முழுவதும் அக்கினிக்கு (தீபாராதனை) அருகிலேயே நின்று … Read more

ஒரு மூடனும் ஒரு தெருநாயும்…

nvivek51@gmail.com> wrote: Just saw that “partha nyapakam illaiyo” post. that was well below the belt. i didn’t expect this from you. please stop posting such nonsense. thanks நான் உறங்கி எழுந்ததும் முதல் முதல் செய்யும் வேலை எனக்கு வரும் ஆபாசக் கடிதங்களையும், வசை கடிதங்களையும் படிப்பதுதான்.  இன்று காலை ஐந்தரை மணிக்கு மேற்கண்ட வசை கடிதத்தைப் படித்தேன்.  பொதுவாக வசை கடிதங்களுக்குப் பதில் எழுத மாட்டேன்.  … Read more

நாளைய நிகழ்ச்சி

நாளை புக் பாய்ண்டில் செங்குருதி, அவன் என்ற இரண்டு குறும்படங்கள் திரையிடப் பட இருக்கின்றன.  நான் வருவேன்.  முடிந்தவர்கள் வரலாம்.  மாலை 5.30.  

வாசகர்கள்…

சாரு நிவேதிதா வாசகர் வட்டம் என் வாசகர்கள் சுதந்திரமாகத் தங்கள் கருத்துக்களைத் தெரிவிப்பதற்கான வட்டம் என்பது அனைவரும் அறிந்ததே.  இப்போதைய எக்ஸைல் நாவலை மூவரிடம் படிக்கக் கொடுத்து மூவரும் அது போரடிக்கிறது என்று சொன்னதையும், அதை நான் மனமுவந்து ஏற்றுக் கொண்டதையும் நீங்கள் அறிவீர்கள்.  ஆனால் எனக்குள் ஒரு திமிர் உண்டு.  மூவருக்கும் போரடித்தால் மூவருக்கும் புரியவில்லை போல என்று எடுத்துக் கொண்டு விட்டேன்.  ஆனாலும் அதை மேலும் செம்மையாக்கி எழுதிக் கொண்டிருக்கிறேன்.  ஒருவேளை அது இன்னமும் … Read more