இருவர்

நேற்று ஒரு நண்பர் கேட்டார், அவர்கள் இருவரையும் நீங்கள் அடிக்கடி பார்ப்பதில்லை; பேசுவதும் இல்லை; இருந்தாலும் எப்படி அவர்கள் இருவரும் உங்கள் மனதில் இத்தனை முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கிறார்கள்? இருவரில் ஒருத்தன் சமீபத்தில் கோவா போனான். ஒரு ஆடம்பரமான ஓட்டலில் தங்கினான். அங்கே தங்கியிருந்தவர்களின் உடல் மணம் என் உடல் மணத்தைப் போலிருப்பதை உணர்ந்தான். உடனே எனக்கு போன் பண்ணினான். நாங்கள் இருவரும் gay அல்ல. வெறும் நண்பர்கள்தான். அப்படியும் என் உடல் மணம் தெரிந்திருக்கிறது. இப்படி … Read more

த்ருஷ்டி : திருத்தி எழுதிய பிரதி

ஒரு முன்குறிப்பு:  நேற்று மாலை சுமார் அரை மணி நேரத்தில் த்ருஷ்டியைத் தட்டச்சு செய்து முடித்தேன்.  single sitting.  இடையில் வேறு எதுவும் செய்யவில்லை.  பேய் வேகத்தில் டைப் செய்தேன். கதை பலருக்கும் பிடித்திருந்தது.  பொதுவாக எளிதில் எதையும் பாராட்டி விடாத அராத்து, அய்யனார் விஸ்வநாத், நேசமித்திரன், ராம்ஜி நரசிம்மன் ஆகிய நண்பர்களே பாராட்டினர். குறிப்பாக நான் பூனை அல்ல என்ற பகுதியை அராத்துவும் வித்யா சுபாஷும் சிலாகித்தனர்.  நண்பர்களுக்கு நன்றி.  எப்போதுமே உங்கள் வார்த்தை எனக்கு … Read more

சோனியாவுக்கு வேலை செய்யும் மோடி!

பொதுவாக இந்திய அரசியலில் இரண்டு தடவை தொடர்ச்சியாக தேர்தலில் வென்று ஆட்சியில் இருக்கும் கட்சி மூன்றாவது தடவை வெற்றி பெறுவது அரிதாக உள்ளது.  இப்படி ஆளும் கட்சியாக இருந்து மூன்றாவது தேர்தலில் தோற்றுப் போவதற்குக் காரணமாக இருப்பது ஆளும் கட்சியாகத்தான் இருக்கிறது.  நம் பாராளுமன்ற வழக்கத்தின்படி 2004-2014 காலகட்ட பத்தாண்டு  மன்மோகன் சிங்கின் காங்கிரஸ் ஆட்சிக்குப் பின் மகத்தான வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த பாஜகவின் நரேந்திர மோடிதான்  இந்தத் தேர்தலிலும் வெற்றி பெற வேண்டும்.  ஆனால் … Read more

சூரிய ஒளியில் மின்னும் தேனீக்கள்

என்னுடைய புதிய கிண்டில் புத்தகம்.  இதுவரை இப்படி ஏழெட்டு புத்தகங்கள் வந்து விட்டன.  அனைத்தும் என் நண்பர் விமலாதித்த மாமல்லனின் உதவியால் வெளிவருகிறது.  மாமல்லனுக்கு என் நன்றி.  இலக்கிய ரீதியாக எத்தனை கருத்து முரண்பாடுகள் இருந்தாலும் ’அது வேறு; நட்பு வேறு’ என்று நினைத்து எனக்கு உதவி செய்ய முன்வந்த அவரது அன்புக்கு என் நன்றி. சூரிய ஒளியில் மின்னும் தேனீக்கள் தொகுப்பில் விஸ்வரூபம் பற்றிய என் கட்டுரைகளும் உண்டு.  கமல்ஹாசன் படங்களில் இஸ்லாமிய விரோதப் போக்கு … Read more